லாக்டவுனால் தவிக்கும் மக்களே.. இதோ உங்களைத் தேடி மீண்டும் வந்தாச்சு "தங்கம்"!
சென்னை: "கோவிட் - 19" லாக்டவுன் காரணமாக சீரியல் படப்பிடிப்புகள் முடங்கி விட்டதால் பழைய சீரியல்களை ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளனர். சன் டிவியில் மறு ஒளிபரப்பாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் ஒளிபரப்பாகி வந்த தங்கம் சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.
திங்கள் முதல் வெள்ளி வரை என்று தினமும் மதியம் 3 மணிக்கு வரும் திங்கள் முதல் தங்கம் சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.அப்போது விஷன் டைம் தயாரிப்பில் இந்த சீரியல் உருவாகி ஒளிபரப்பாகி வந்தது.
சின்னத்திரைக்கு முதன் முதலாக நடிகர் விஜயகுமார் நடிக்க வந்த சீரியல் இது. இவருடன் நடிகை சீமா, நடிகை மஞ்சு பார்கவி உள்ளிட்டோருடன் நடிகை ரம்யா கிருஷ்ணன் இந்த சீரியலில் நடித்து இருப்பார்.
தங்கம் பேரில் ஜொலிக்கும்
தங்கம் பேரில் ஜொலிக்கும்.. துன்பம் உன்னை செதுக்கும் என்று யானை மாலை போடும் டைட்டில் பாடலுடன்தான் இந்த சீரியலின் காட்சியும் துவங்கும். 2016 ம் வருடம் மே மாதம் முதல் இரவு தினமும் 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த தங்கம் சீரியலுக்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தார்கள்.
சனிக்கிழமை இல்லை
சன் டிவியில் எப்போதும் சீரியல்கள் என்று வரிசை கட்டி நின்ற நேரத்தில் சனிக்கிழமையும் சீரியல்கள் கடந்த சில வருடங்களாக ஆக்கிரமிக்க ஆரம்பித்து இருந்தன. இந்த நிலையில் ஒரு சில ஞாயிற்று கிழமையும் சீரியல்களுக்கு என்று சிறப்பாக நேரத்தை ஒதுக்கித் தர ஆரம்பித்து இருந்தது சன் டிவி.
கடைசியாக சித்தி 2
கடைசியாக சித்தி 2 சீரியலுக்கு ஞாயிற்று கிழமை இரவு ஒரு மணி நேரத்தை ஒதுக்கித் தந்தது, அது ஒளிபரப்பு என்று அறிவித்த நேரத்தில்தான் கோவிட் - 19 லாக்டவுன் அறிவிப்பு வெளியாகியது. இந்த நிலையில் ஷூட்டிங் இல்லாமல் சீரியல்கள் முடங்கும் நிலை ஏற்பட்டு சில சீரியல்கள் முடிக்கும் நிலையும் வந்துள்ளது.
மறு ஒளிபரப்பு
இந்த நேரத்தில் சன் டிவி பழைய நிகழ்ச்சிகள், மற்றும் சீரியல்களை மறு ஒளிபரப்பு செய்யத் துவங்கி இருக்கிறது. அதே மாதிரி, பழைய படி சனிக்கிழமை சீரியல்களுக்கு விடுமுறை விடவும் துவங்கி இருக்கும் சன் டிவி, மறு ஒளிபரப்பாக இன்னும் என்னென்ன சீரியல்களை கையில் எடுக்கும் என்கிற ஆவலில் ரசிகர்கள் உள்ளனர்.