மீண்டும் ரசிகர்களை அழ வைக்கும் ப்ரமோ...இந்த முறை அம்மா சென்டிமென்ட்... கலாய்க்கும் நெட்டிசன்கள்
சென்னை: விஜய் டிவியின் ப்ரோமோ தற்போது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சில நிகழ்ச்சிகளை வித்தியாசமாக செய்கிறோம் என்று நெட்டிசன்களின் கமெண்டுகளை பெற்றிருப்பது போல தற்போது தாயில்லாமல் நானில்லை நிகழ்ச்சியின் ப்ரமோவை பலரும் கலாய்த்து வருகின்றனர்.
செல்போனும் கையுமாக இருந்த 15 வயது மகள்.. ஆத்திரத்தில் பாலியல் வன்கொடுமை செய்த காமுக தந்தை!

விஜய் டிவியின் ப்ரமோ
விஜய் டிவியில் புது புதிதாக பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அந்த நிகழ்ச்சிகளில் பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து விடுகிறது. ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்று விட்டால் அதில் தொடர்ந்து பல சீசன்கள் தொடங்கப்படுகிறது. இல்லை என்றால் முதலிலேயே நெட்டிசன்களால் அதிகமாக கலாய்க்கப்பட்டு சமூக வலைத்தளத்தில் வலம் வந்து கொண்டிருக்கும். அந்த மாதிரிதான் தற்போது கூட தாயில்லாமல் நானில்லை எனும் நிகழ்ச்சியின் ப்ரமோ பலரையும் கவர்ந்து இருக்கிறது.

இங்கேயும் அழுகாச்சியா?
இந்த நிகழ்ச்சியில் அம்மாவும் குழந்தைகளும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. விஜய் டிவியின் பிரபலங்கள் பலர் தங்களுடைய குடும்பத்தோடு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர். அம்மாவை பெருமைப்படுத்தும் விதமாக இதில் பல பாடல்களும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், தற்போது ப்ரமோவில் செந்தில் கணேஷ் சிறப்பான பாடல் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. ஏற்கனவே சீரியல் பார்த்தால்தான் அனைவரும் கண்ணீர் விட்டு கதறி அழுது கொண்டிருக்கும் நேரத்தில், இப்படி சிறப்பு நிகழ்ச்சிகளிலும் இருந்தால் எப்படி என்று நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

நெட்டிசன்களுக்கு கிடைத்த கண்டெண்ட்
ஏற்கனவே விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அழது, பார்க்கும் போட்டியாளர்களை அழ வைத்து விட்டார்கள். தாங்கள் வேலை செய்வதால் தங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளை எவ்வளவு மிஸ் பண்ணுகிறோம் என்று ஒரு நிகழ்ச்சியில் விஜய் டிவி போட்டியாளர்கள் அனைவரும் கண்ணீர் சிந்தி சமூகவலைத்தளத்தில் இடத்தை பிடித்து விட்டனர். இந்த நிலையில் மீண்டும் இவர்களுடைய அழுகாச்சி புரோமோ பார்த்ததும் நெட்டிசன்கள் தங்களுக்கு கண்டென்ட் கிடைத்துவிட்டது என்று தங்களுடைய வேலையை தொடங்கி விட்டார்கள்.

நெட்டிசன்களின் கமெண்ட்
யாருக்கும் பாரபட்சம் இல்லாமல் இந்த நிகழ்ச்சியின் ப்ரமோவை பார்த்ததும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். இதில் தொகுப்பாளராக அர்ச்சனா மற்றும் அவருடைய மகள் இருவரும் ஜோடியாக அறிமுகமாகின்றனர் .அதைத் தொடர்ந்து பல விஜய்டிவி பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருப்பதால், யாரையும் விட்டுவைக்காமல் அனைவரையும் மீண்டும் கலாய்க்க தொடங்கியிருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் அப்போ குழந்தை சென்டிமென்ட் அழுகை, இப்போ அம்மா சென்டிமென்ட் அழுகை, சென்டிமென்ட் களஞ்சியமே விஜய் டிவிதான் என்று பல்வேறு கருத்துக்களை உதிர்த்து வருகிறார்கள்.