இந்த ஒரு காரணத்தினால் தான் திருமணத்தைப் பற்றி வெளியில் நான் பேசவில்லை..இசை வாணியின் உருக்கமான பதில்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய திருமணத்தை பற்றி மறைத்துவிட்டார் என்ற ரசிகர்களின் குற்றச்சாட்டுக்கு இசைவாணி பதில் அளித்துள்ளார்.
கதை சொல்லும் டாஸ்க்கில் அனைத்து கஷ்டங்களையும் சொன்னவர் திருமணத்தை பற்றி சொல்லவில்லையே என்று பல ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
ஒரு சில ரசிகர்கள் இசைவாணி திருமணம் முடிந்துவிட்டது என்பதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.
வியர்வை சிந்திய விவசாயிகள் பணத்தில் மோசடி.. வீஏஓ தில்லுமுல்லு.. விவசாயிகளுக்கு நீதி கிடைக்குமா?

பிரபலப்படுத்தும் நிகழ்ச்சி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு ரியாலிட்டி ஷோவாக பல சீசன்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது ஐந்தாவது சீசனில் ஒளிபரப்பாகி வந்து கொண்டிருக்கும் போது இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் ஒவ்வொரு சீசனிலும் பிரபலமடைந்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியை விட்டு அவர்கள் வெளியேறினாலும் பிக் பாஸ் அவர்களுக்கு என்று தனியாக ஒரு அடையாளத்தை கொடுத்துவிடுகிறது. ரசிகர்களின் மத்தியில் நன்றாக பிரபலமடைய வேண்டும் என்பதற்காகவே பல போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார்கள்.

முதல் போட்டியாளராக அறிமுகம்
ஐந்தாவது சீசனில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தாலும் இதில் அடிமட்டத்து வாழ்க்கையில் இருக்கும் கானா பாடகியான இசைவாணி ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். இவருடைய ஆரம்பம் என்ட்ரி சும்மா அதிர வைத்துவிட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் ஆளாக இவர் அறிமுகமானதும் ரசிகர்களுக்கு இவர் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. எப்படியும் இந்த சீசனில் அதிக நாட்கள் இருப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் 50 நாட்களை தாண்டிய நிலையில் இவர் வெளியேற்றப்பட்டார்.

வெளியே காட்டவில்லையே
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு வரைக்கும் அதிகம் பிரபலம் அடையாமல் இருந்தாலும் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு போட்டியாளர்கள் அனைவருமே அதிக அளவில் பிரபலம் அடைந்து விடுகின்றனர். அதுமட்டுமல்லாமல் இதில் கலந்துகொண்டு ரசிகர்கள் இவர்களைப் பற்றி அதிகமாக தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள். அந்த நிலையில்தான் இசை வாணியை பற்றி ரசிகர்கள் அதிகமாக தேடி தெரிந்து கொண்டிருக்கிறார்கள். அதில் அவருக்கு திருமணம் முடிந்து விட்டது என்ற செய்தியைக் கேட்டதும் பலரும் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். ஆனால் அந்த செய்தியை பற்றியோ அல்லது தருவது திருமணத்தை பற்றி ஏதாவது ஒரு இடத்தில் அவர் பேசுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் எந்த ஒரு இடத்திலும் இசைவாணி இதை காட்டிக்கொள்ளவே இல்லை.

இதுதான் உண்மை
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு இசைவாணி தன்னுடைய திருமணத்தை பற்றி ஏன் மறைத்தீர்கள் என்று அதிகமானோர் கேட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் அதை மறைக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அது எனக்கு தேவையில்லை அந்த நினைவுகள் வேண்டாம் என்று அப்படியே விட்டுவிட்டேன் என்று கூறியிருக்கிறார். திருமண வாழ்க்கையில் இவர் மனதொடிந்து இருந்த நேரத்தில் அனைவரும் உன் வாழ்க்கை இதோடு முடிந்துவிட்டது என்று இவருக்கு எதிராக கூறிக் கொண்டிருந்தார்களாம். அந்த நேரத்தில்தான் அவர் அவர்களுக்கு பதில் சொல்லும் விதமாக 'அடிச்சு புடிச்சு மேல வந்தேன் சின்ன கேப்புல' என்னும் ஒரு பாடலை அவர் பாடி இருக்கிறார். அந்த பாடலின் வெற்றி இவருடைய வாழ்க்கையின் வெற்றியின் படிக்கட்டுகளாக இப்ப வரைக்கும் இருந்து வருகிறது என்று கூறியிருக்கிறார்.