• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விஜய் ஸ்டைல் டிசர்ட்.. கலக்கல் டான்ஸ்.. அசத்தல் விளம்பரத்தில் மீண்டும் சரவணா அண்ணாச்சி

|

சென்னை: தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ்ல துணிமணிகள் வாங்க சொல்லி, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்னு டான்ஸ் ஆடி நடிச்சு விளம்பரம் வெளியிடுவார் கடையின் முதலாளி. இப்போது லேட்டஸ்டா ஒன்னு வந்திருச்சு.. ஹிட்டும் ஆகிருச்சு.

இப்போ சம்மருக்கு சும்மா விட்டா எப்படி.. ஆனா, இப்போ விளம்பரத்துல பிரபல மாடல்கள்தான் ஜோடியா டான்ஸ் ஆடறாங்க. மனுஷன் செம ஸ்டைலிஷ்ங்க... கூலிங் கிளாஸ் ஃபர்ஸ்ட் கிளாஸ்..

The legend is back

நிமிஷத்துக்கு அழகழகா மூணு டிரஸ் மாத்தறார். தன் ஸ்டைலான ரோபோ ஸ்டைல் டான்ஸ் ரொம்ப நல்லா ஆடி இருக்கார். சம்மருக்கு எப்படி எல்லாம் தங்கள் கடையில டிரஸ் குவிஞ்சு இருக்கு.. சம்மரை கொண்டாடுங்கன்னு சொல்லி அழகா நடிச்சுருக்கார்.

உண்மையில் தி லெஜண்ட்ஸ் சரவணாஸ் உரிமையாளர் முதலில் ஹன்சிகா, தமன்னா இவங்க கூட தன் கடை விளம்பர படத்துல நடிச்சு ஒரு டிரையல் பார்த்துக்கிட்டாராம்.

The legend is back

விளம்பரம் வெளியில் வந்த பிறகு விமர்சனத்தை எதிர்பார்த்தாராம். ஒரு நாள் கூட மீம்ஸ் பார்த்து சுணக்கம் அடையலையாம். மீண்டும நடிக்கணும்னு முடிவு செய்தாராம்.

இப்பத்தான் புடவை கட்டிவிட்டான்.. பாவம் அதுக்குள்ளே அம்மை போட்டுருச்சே!

யார் எதை சொன்னாலும் அவர் கவலைப்படலை. அவரது நோக்கம்...பிசினெஸ் பிளஸ் நடிக்கணும் எனும் ஆசை. கண்ட கண்ட மீம்ஸ் குவியத் தொடங்கினாலும் அதை அலட்சியம் செய்தார்.

மறுபடியும் நடிகைகள் கூட விளம்பரத்தில் நடிக்கவே செய்தார். ஒரு விளம்பரத்துக்கும் இன்னொரு விளம்பரத்துக்கும் இடையே 6 மாதம் மட்டும்தான் இடைவெளி இருக்கும். அந்த அளவுக்கு தனது கடை விளம்பரத்தில் நடிப்பது என்பதில் தீராத காதல் அவருக்கு.

The legend is back

நடிப்பின்மீது உள்ள ஆசையால் தன்னை வைத்து படம் எடுங்கள் என்று சொல்லும் அளவுக்கு அவர் முட்டாள் இல்லை எனும்போதே.. அவர் மற்றவர்களின் விமர்சனங்களை எப்படி தூசி மாதிரி தட்டிவிடறார்னு புரிஞ்சுக்கலாம்.

பல்லு இருக்கறவன் பட்டாணி திங்கறான்... உங்க ஆசையை உங்களால் முடியும்போது தீர்த்துக்கறதில்லையா.. அது போலத்தான் இவரும். இதில் என்ன தவறு இருக்குன்னு மீம்ஸ் போட்டு தாக்கறாங்கன்னு தெரியலை.

அவரை பாராட்ட முக்கியமான இன்னொரு விஷயமும் இருக்கிறது.. நடிக்கிற ஆசைன்னு அதிலேயே மூழ்கிக் கிடக்காம நமக்கு நம்ம கடை விளம்பரம்தான் படம் மாதிரின்னு முடிவெடுத்து செயல்படறார். அதே சமயம் பிஸினெஸில் இருந்த கவனத்தை வேறு எந்த பக்கமும் திசை திருப்பாமல் இருக்கார்.

அழகு மனசில் இருக்கு.. அதனால்தான் ஆயிரக்கணக்கான நபர்களுக்கு வேலை வாய்ப்பு குடுத்து, பல ஆயிரக் கணக்கான குடும்பங்களை வாழ வைக்கறார். நம்மால் முடியுமா?

கவனிச்சீங்களா புரோ.. இப்போ இந்த விளம்பர அண்ணாச்சி பத்தின மீம்ஸ் கூட குறைஞ்சு போச்சு...

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
The Legend of Sarvana's Store is the owner of the shop selling advertising filim acting and the dance, dance,

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more