For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிசியோதெரபிஸ்ட்.. ஆசிரியை.. ஓரகத்திகள் கலக்கிய தி வால்!

Google Oneindia Tamil News

சென்னை: விஜய் டிவியின் தி வால் விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட கவுசல்யா, கார்த்தி இருவரும் ஓரகத்திகள், அதாவது அண்ணன் தம்பியை கல்யாணம் செய்துகொண்ட ஒரே வீட்டு மருமகள்கள்.

இருவரும் ஒன்றாக தி வால் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்கள். கவுசல்யா பிசியோதெரபிஸ்ட். கார்த்தி அரசு பள்ளி ஆசிரியை. இதில் கவுசல்யா செய்யும் சேவை மிக அருமையானது.

மூளை வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகளை நடக்க வைத்து, குணமாக்கி அனுப்புவதை ஒரு பெரும் சேவையாக செய்து வருகிறார். கார்த்தியும் அரசு பள்ளி மாணவர்களை எல்லா விதத்திலும் புத்திசாலிகளாக கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் பாடம் கற்பித்து வருகிறார்.

மகாபா பிரியங்கா

மகாபா பிரியங்கா

தி வால் நிகழ்ச்சியை தொகுப்பாளர்கள் மகாபா மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கி வருகின்றனர்.இருவருமே போட்டியாளர்களின் மனதை புரிந்துக்கொண்டு அவர்களிடம் உள்ள விஷயங்களை வாங்கி, நிகழ்ச்சியை நன்றாகவே தொகுத்து வழங்கி வருகின்றனர். தி வால் ரியாலிட்டி கேம் ஷோ பயன் உள்ளதாகவும், அதே சமயம் பார்ப்பவர்களையும் அந்த பதற்றம், ஜாலி தொற்றிக்கொள்வதாகவும் இருக்கிறது.

Chithi 2 Special: இன்று முதல் சித்தி 2.. முதல் நாள் மட்டும் ஒரு மணி நேரமாமே!Chithi 2 Special: இன்று முதல் சித்தி 2.. முதல் நாள் மட்டும் ஒரு மணி நேரமாமே!

ஷாப்பிங் டிரிக்ஸ்

ஷாப்பிங் டிரிக்ஸ்

கவுசல்யாவும், கார்த்தியும் அடிக்கடி ஷாப்பிங் போவார்களாம். அப்போது அதிக விலையில் புடவை துணிமணிகள் எடுத்து ஷாப்பிங்குக்கு இவ்வளவு செலவா என்று கணவர் கேட்டால் என்ன செய்வது என்று முன்னமேயே குறைந்த விலையில் முதலில் எடுத்து புடவைகளில் விலை டேக்கை கலெக்ட் செய்து வைத்துக்கொள்வார்களாம். அதை புது புடவையில் ஒட்டி காண்பிக்கும்போது கம்மி விலைதானா.. ஆனால், புடவை இவ்வளது நல்லாருக்கேன்னு சொல்வார்களாம் அவர் அவரது கணவன்மார்.

மூளை வளர்ச்சி

மூளை வளர்ச்சி

மூளை வளர்ச்சி குறைந்து பிறக்கும் குழந்தைகளை அடையாளம் கண்டு மூன்று வயதுக்குள் கவுசல்யாவிடம் கொண்டு வந்து விட்டால், அவர் பிசியோதெரபி கொடுத்து 5 வயதுக்குள் குழந்தையை பள்ளிக்கு அனுப்புத் தயாராக்கி பெற்றோரிடம் ஒப்படைப்பாராம். இப்படிப் பிறக்கும் குழந்தைகள் நடக்க முடியாமல், நன்றாக பேச முடியாமல் இருக்கும்,. அப்படிப்பட்ட குழந்தைகளை நார்மலாக்கி அனுப்பி வைப்பதுதான் தனது சேலன்ச் என்று கவுசல்யா கூறினார்.

கார்த்தி பெயர்

கார்த்தி பெயர்

கார்த்தி கார்த்திகை தீபம் அன்று பிறந்ததால், கார்த்தியின் அப்பா அவருக்கு கார்த்தி என்று பெயர் வைத்தாராம். கார்த்தி என்று வெறுமனே இருக்கிறதே.. கல்யாண பத்திரிகையில் வேற மாத்தி வைங்கம்மா என்று அம்மாவிடம் கேட்டபோது, அப்பா கார்த்தி அப்படின்னுதான் வச்சார். அப்படியே இருக்கட்டும்னு சொல்லிட்டாங்களாம்.

கார்த்தி டீச்சர்

கார்த்தி டீச்சர்

அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு பெரிசா அப்பா அம்மா சப்போர்ட் ஒண்ணும் இருக்காது. பசங்க எதாவது படிக்கலேன்னா கூட யார்கிட்டேயும் நாங்க புகார் சொல்ல முடியாது. நாங்கதான் அவங்களுக்கு செகண்ட் பேரன்ட்ஸ்.. அதனால், நாங்களே அவங்களை நல்லா படிக்க வைக்க என்னென்ன வழியோ, அத்தனை வழியிலும் முயற்சிப்போம் என்று சொன்னார் கார்த்தி.

English summary
Kaushalya and Karthi are the only housewives who marry their brother-in-law, who is attending Vijay TV's The Wall Games.The two attended The Wall together. Kausalya Physiotherapist. Kaushalya's service is excellent.He is doing a great service in keeping children with brain development disorder at bay. Karthi is also teaching a lesson in bringing government school students to be intelligent in every way.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X