For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Thenmozhi BA Serial: ஷவர்..பாத் டப்..தண்ணி கஷ்டம் தேனுக்கு புரியலையே!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை உட்பட தமிழகம் எங்கும் இப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இருந்தாலும் தண்ணீரை சேமிக்க வேண்டிய கட்டாயத்தில்தான் நாம் இருக்கிறோம்.

மழை பெய்து விட்டதே என்று நீரை அலட்சியமாக செலவு செய்துவிட முடியாது. அந்த நீரை அடுத்து வரும் வெயில் அப்படியே வறட்சியில் ஆவியாக்கியும் கொள்ளும்.

சரியான மழை நீர் சேமிப்பு இல்லாத நமது நகர்ப் புறங்களில் தண்ணீரை எப்போதும் சேமிக்கும், சிக்கனமாக செலவு செய்யும் கட்டாயத்தில்தான் நாம் இருக்கிறோம்.

தேன்மொழி பிஏ

தேன்மொழி பிஏ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தேன்மொழி பிஏ சீரியலின் நாயகி தேன்மொழி விளையாட்டு பெண், வெகுளி பெண் என்றாலும் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்படும் பெண்.சொல்லப் போனால் நமது பக்கத்து அக்கத்து வீட்டு பெண் போலத்தான் என்றும் நினைக்கலாம்.

குளிக்க ஷவர்

குளிக்க ஷவர்

முதலில் குளிக்க ஷவர் வேணும் தகப்பான்னு சொந்த காரை வாடகைக்கு ஓட்டும் அப்பாவிடம் தேனு கேட்க நான் எங்கம்மா போவேன்னு அப்பா, சொல்ல தேன்மொழி ஒரு ஐடியா பண்ணுகிறாள். அடி பம்பில் இருந்து டியூப் வழியாக பாத்ரூமுக்கு பைப் போகிறது. அங்கு ஷவரில் தண்ணீர் கொட்டுவது போல அமைத்து விகிறாள்.

தண்ணீர் அடிக்க

தண்ணீர் அடிக்க

இங்கே அப்பா பம்பில் தண்ணீர் அடிக்க, பாத்ரூமில் தேனு அழகாக ஆசையாக குளிப்பாள். அப்படி ஒருநாள் அப்பாவை தண்ணீர் அடிக்க கூப்பிட, என்னால இன்னிக்கு முடியாதது தேனு..அப்பாவுக்கு காகை வலிக்குதுன்னு சொல்றார்.சரின்னு தங்கச்சியையும், தம்பியையும் கூப்பிட இருவரும் எஸ்கேப்.

பாத்டப் தகப்பா

பாத்டப் தகப்பா

தகப்பா எனக்கு பாத்டப் ரெடி பண்ணி குடுன்னு சொல்றா. அவரும் கடைகளில் கேட்டால் யானை விலை குதிரை விலை சொல்கிறார்கள்.தேனுவின் நண்பன் மாட்டுக்கு தவிடு, புண்ணாக்கு போட்டு குதிக்க வைக்கும் கழுநீர்த் தொட்டியை திருடி புதுசு பண்ணி எடுத்துட்டு வந்து தர்றான்.

நல்ல ஐடியாவா இருக்கு. இல்லே...கிராமத்தில் பம்ப் செட் இறைக்கும் தொட்டி கூட பாத் டப்தான்.. எல்லாம் நம்ம கையில்தான் இருக்கு.

English summary
Tamil Nadu, including Chennai, is now raining heavily. Yet we are forced to save water.Water cannot be neglected as it is raining. The water that follows will evaporate in the same drought.In our urban areas where there is no proper rainwater harvesting, we are forced to save water and spend it forever.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X