• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

thenmozhi BA serial: அடி சக்கை.. சீரியலில் கூட உசிரை விட மானம்தான் பெரிசுன்றாய்ங்க!

|
  Thenmozhi serial Today Episode | Thenmozhi B A serial

  சென்னை: விஜய் டிவியின் சீரியல்களில் தேன்மொழி பிஏ ஒரு விதமாக பாராட்டும்படியான கதையம்சத்துடன் நன்றாகவே இருக்கிறது. ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை வைத்து ஊரில் பெரும்பாலும் நடக்கும் தில்லுமுல்லுகளை எடுத்துச் சொல்லும் கதையாக தேன்மொழி பிஏ சீரியல் இருக்கிறது.

  தேன்மொழியாக நடிக்கும் ஜாக்குலின் இயற்கையாகவே காமெடி சென்ஸ் உள்ளவராக இருப்பதாலும், வெள்ளந்தி பெண் தோற்றத்தில் இருப்பதாலும், தேன்மொழி கதாபாத்திரம் இவருக்கு நன்றாகவே செட்டாகி இருக்கிறது.

  காந்திநகர்காரி என்று தேன்மொழியை தீண்டத் தகாதவளாக வெறுக்கும் மாமியார், ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு கடைசியில் மனுஷனை கடித்தார் என்பது போல, அதை இதை குற்றம் குறை சொல்லி வந்தவங்க, இப்போது தேன்மொழி மீது திருட்டு பட்டமும் கட்டிட்டாங்க. இதிலிருந்து தன்னை காப்பாத்தின அப்பத்தாகிட்டே தேன்மொழி, உசிரை விட மானம்தான் அப்பத்தா பெரிசுன்னு பேசறா.

  தேன்மொழி மதர் இன் லா

  தேன்மொழி மதர் இன் லா

  கொல்லை புறத்தில் ஒதுக்கி வச்சு இருந்த காந்திநகர்க்காரி தேன்மொழி வீட்டுக்குள் வந்துட்டான்னு தெரிஞ்சுக்கிட்ட மதர் இன் லா, இதை சகிச்சுக்க முடியாம ஆவேசம் அடையறாங்க. என்ன சொல்லி இவளை வீட்டை விட்டுத் துரத்தலாம்னு யோசிச்சவங்களுக்கு இருக்கவே இருக்குது திருட்டு பட்டம். பீரோவில் இருந்த நெக்லெசை ஒளிச்சு எடுத்துக்கிட்டு போயி தேன்மொழி தங்கி இருக்கும் ரூமில் வச்சுடறாங்க.

  தேன்மொழியைத் தள்ளிவிட்டு

  தேன்மொழியைத் தள்ளிவிட்டு

  தேன்மொழியை அவள் துணி மணிகளுடன் வெளியில் தள்ளி விடறாங்க. அவ நேரா போயி பாவம் ஹீரோ சார் மேலத்தான் விழறா. அவளைத் தாங்கிப் பிடிக்கும் ஹீரோ, அப்படியே ஒதுங்கிக்கறான் அம்மாவுக்கு பயந்து. நான் எடுக்கலே.. அப்பா என்ன அப்படி வளர்க்கலேன்னு பாவமா அழறா. யாரும் கண்டுக்கலை. மதர் இன் லா அட்டகாசம் தாங்க முடியலை.

  அப்போதுதான் அப்பத்தா என்ட்ரி

  அப்போதுதான் அப்பத்தா என்ட்ரி

  அப்போதுதான் அப்பத்தா ஆபத்பாந்தவன் போல என்ட்ரி ஆகறாங்க. ஏண்டி செத்த நேரம் ரூமுக்குள்ள படுத்து அசந்துட்டா, உங்க இஷ்டத்துக்கு ஆட்டம் போடுவீங்களா? என் அப்பா வீட்டில் எனக்கு போட்ட நகையை, நான் தேனுக்கு குடுக்க ஆசைப்பட்டேன்,. இப்போதுதான் அது உன் பீரோவுல இருக்குது. இதுக்கு முன்னால அது என்னோடதுதானே.. தேனுகிட்டே கொடுத்தேன் அவ வாங்கலை. நான்தான் அவ ரூமில் அவளுக்குத் தெரியாம வச்சேன்னு ஒரு பொய்யை சொல்லி தேனுவை காப்பாத்திடறாங்க அப்பத்தா.

  கட்டிக்கொள்ளும் தேன்மொழி

  கட்டிக்கொள்ளும் தேன்மொழி

  அப்பத்தா ரூமுக்கு வந்து தேனு என்று கூப்பிட, ஓடிவந்து அப்பத்தாவைக் கட்டிக்கொண்டு அழறா. என்னை காப்பாத்தின உதவியை உசிரு உள்ள வரைக்கும் மறக்க மாட்டேன் அப்பத்தான்னு அழறா. இது என்னம்மா பெரிய விஷயம்.. நீ என் உசிரையே காப்பாத்தி இருக்கே. அதை விடவா இது பெரிசுன்னு கேட்கறாங்க அப்பத்தா. அப்பத்தா உசிரை விட மானம்தான் பெருசுன்னு அழறா தேன்மொழி. சீரியல்களில் இது போல டயலாக் கேட்க நல்லா இருக்கு. அதோடு, இது மாதிரி நல்ல வசனங்களை அவ்வப்போது பேசினால் மட்டும்தான் நல்லவை மக்கள் மனதில் பதியும்.

  விருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,
  இன்றே பதிவு செய்யுங்கள்
  - பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Come to the room of the grandma and call him Thenu, run away, hug her and cry. I will never forget my help until I have the help of the grandma. This is great .. It's more than that. Perusunnu is more worthless than Appatha Usir. It's good to listen to dialog like this in serials. In addition, it is only by occasionally speaking good verses that the good will come to mind.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more