For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Thenmozhi BA Serial: காந்திநகர் பொம்பளைங்க ஆம்பளைங்க கூடத்தான் ஃபிராண்ட்ஷிப் வச்சுக்குவாங்களா?

Google Oneindia Tamil News

சென்னை: விஜய் டிவியின் தேன்மொழி பிஏ சீரியல் காந்திநகர் பெண் ஊராட்சி மன்றத் தலைவரான கதை. இதில் அடிக்கடி காந்திநகர்னு மட்டும்தான் டயலாக் வரும். காந்திநகர் என்றால் ஒரு மாதிரியானவர்கள் என்ற சித்திரத்தை இதில் ஏற்படுத்தி வைத்துள்ளனர். கிட்டத்தட்ட ஜாதி துவேஷம்தான் இதுவும்.

இந்த அனுமானத்தை பார்ப்பவர்களின் கணிப்புக்கு விட்டுவிட்டு காந்திநகர் என்பதை மட்டுமே கதையில் கூறி வருகிறார்கள். தெரிந்தவர்கள் தெரிந்துக்கொள்ளட்டும். தெரியாதவர்கள்.. ? தெரிஞ்சவங்க கிட்ட புரிந்து கொள்ளட்டும்!

காந்திநகர்காரி என்றாலும், ஊராட்சி மன்றத் தலைவர் அல்லவா, தேனுவுக்கு அடிக்கிறது அதிர்ஷ்டம். ஹீரோ சார் ஹீரோ சார் என்று அருளை பார்த்து மலைத்து நின்றவளுக்கு அவனே கணவனாக வருகிறான்.

அருள் ஹீரோ

அருள் ஹீரோ

எல்லாம் சரிதான்.. ஊராட்சி மன்றத் தலைவர் பதவி வந்ததால், எம்எல்ஏ பதவிக்கு ஆசைப்பட்டு, சுயேச்சையாக நின்று ஜெயித்த ஊராட்சி மன்றத் தலைவரை கட்சிக்குள் தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியாக தேனுவை தனது மகன் அருளுக்கு கட்டி வைக்கிறார் அந்த உயர் சாதிக்காரர். காலம் காலமாக ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை வகித்த குடும்பம் அது. அடுத்தவருக்கு வீட்டுக் கொடுக்க மனம் வரத்து என்பதை இந்த சீரியலில் காண்பித்து இருப்பது உண்மைதான். பல ஊர்களில் இது போல் நடக்கிறது.

Rasaathi Serial: போஸ்டரில் நடிகர் விஜயகுமார் மிஸ்ஸிங்... பெங்காலி நடிகை சப்ஜானி!Rasaathi Serial: போஸ்டரில் நடிகர் விஜயகுமார் மிஸ்ஸிங்... பெங்காலி நடிகை சப்ஜானி!

சரிதான் அதுக்காக

சரிதான் அதுக்காக

எல்லாம் சரி, பதவிக்கு ஆசைப்பட்டு உயர் சாதிக்காரர் காந்திநகர் தேன்மொழியை வீட்டுக்கு மருமகளா கொண்டு வந்துடறார். ஆனால், காந்திநகர் பொம்பளைங்க ஆம்பளைங்க கூடத்தான் ஃபிரண்ட்ஷிப் வச்சுக்குவாங்க போலன்னு டயலாக் பேசறது நியாயமா? எல்லா காந்திநகர் பொம்பளைங்களையும் அது குறிக்குதே...காந்திநகர்னா அந்த சாதிதான்னு ஆணித்தரமான சொல்ல வறீங்களா? அவர்களை குறைச்சு மதிப்பிடும் விதத்தில் இந்த டயலாக்கா?

தேன்மொழி அன்பு

தேன்மொழி அன்பு

அன்பு தேன்மொழி இருவரும் நண்பர்களாக பழகி வருகின்றனர். அவன் தேன்மொழியின் தம்பி இனியனோடு தேன்மொழியை பார்க்க அவள் புருஷன் வீட்டுக்கு வர்றான். அப்போது இட்லிக்கு மாவு அரைத்துக் கொண்டு இருக்கும் தேன்மொழி தான் இங்கு கஷ்டப்படுவதை மறைத்து பேசிக்கொண்டு இருக்கிறாள். அப்போதுதான் அந்த பெரிய வீட்டின் இன்னொரு மருமகள் காந்திநகர் பொம்பளைங்க ஆம்பளைங்க கூடத்தான் ஃபிரண்ட்ஷிப் வச்சுக்குவாங்க போலன்னு சொல்றா.

வசிக்கும் இடம்

வசிக்கும் இடம்

வசிக்கும் இடத்தை வச்சுத்தான் அவளை அடையாளம் காண்பிக்கும் நீங்கள், வசிக்கும் இடத்தை மட்டம் தட்டுகிறீர்களா? இல்லை சாதியை அடையாள படுத்தும்படி இந்த வசனத்தை எழுதினீர்களா? வசிக்கும் இடத்தை வச்சு பொத்தாம் பொதுவாக இப்படி ஒரு டயலாக் பேசுவது சரிதானா என்று யோசித்து அதன்படி டயலாக் எழுதினால் நன்றாக இருக்கும்.

தப்பான வசனம்

தப்பான வசனம்

மேற்கண்ட வசனம் தப்பு என்று அதற்கு ஆதரவாக வீட்டில் ஒரு பெண் பேசுகிறார் என்பதெல்லாம் அடுத்த கதை. ஆனால், இந்த மாதிரி வசனங்கள் சொன்னது சொன்னதுதானே.. அதனால் இது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. இந்தக் காலத்தில் போய் இப்படியெல்லாமா ஜாதியை வைத்து வசனம் எழுதி சீரியலை எடுப்பார்கள். அதுவும் சென்சிட்டிவான விஷயத்தை இப்படி போகிற போக்கில் சொல்லியிருப்பது பார்க்கவே எரிச்சலாகவும் இருக்குங்க.

English summary
Vijay TV's thenmozhi BA serial Gandhinagar woman panchayat leader is the story. Often the only dialogue is Gandhinagar. Gandhinagar knows how many people live there. This assumption is left to the viewers' prediction and the only story in the story is Gandhinagar. Let those who know know. Stranger?Though Gandhinagar is not the panchayat leader, Thenu is shocked. Hero sir Hero sir, he is the husband of those who look up the grace.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X