For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கலைஞர் டிவியின் "தில்லு முல்லு".. முல்லை கோதண்டன் காமெடி!

Google Oneindia Tamil News

சென்னை: கலைஞர் தொலைக்காட்சியில் வாரம்தோறும் ஞாயிற்று கிழமை ஒளிபரப்பாகி வரும் தில்லு முல்லு ரியாலிட்டி ஷோவில், முல்லை கோதண்டன் காமெடி சிரித்து சிந்திக்கும்படி எதாவது ஒரு மெசேஜ் சொல்லும் காமெடியாக நன்றாக இருக்கிறது.

அளவில்லா சாப்பாடு, பஃபே சிஸ்டம் இவை எந்த அளவுக்கு நமக்கு நன்மையாக இருக்கும்... எந்த அளவுக்கு அதை நாம் பயன்படுத்திக் கொள்கிறோம் என்பது குறித்து இயல்பான காமெடியில் இருவரும் சொல்லி நன்றாக சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து இருக்கிறார்கள்.

உணவை மீதம் வைக்காதீர்கள், வேஸ்ட் பண்ணாதீர்கள் என்று சும்மா வாயளவில் சொல்லிக்கொண்டே இருந்தால் திருந்தி விடுவர்களா? சரி, இவைகளுக்கு என்னதான் நாம் ஸ்டெப்ஸ் எடுக்க வேண்டும்? பார்த்துவிடலாமே என்னதான் சொல்கிறார்கள் என்று!

தில்லு முல்லு உணவகம்

தில்லு முல்லு உணவகம்

தில்லு முல்லு உணவகத்தில் முல்லைதான் சர்வர், அவரேதான் முதலாளியும் கூட. முதலில் வரும்போது நாகேஷ் நடித்த எதிர்நீச்சல் படத்தின் நாகேஷின் சர்வர் சுந்தரம் கெட்டப்பில் வந்து, வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர்நீச்சல் பாடலுக்கு டான்ஸ் ஆடுகிறார். பிறகு ஒரு புது மண தம்பதி சாப்பிட வருகிறார்கள். கணவன் லிமிட்டாக வேண்டியதை கேட்டு சாப்பிட, மனைவி இஷ்டத்துக்கு கேட்டு வாங்கி சாப்பிட முடியாமல் வைத்து விடுகிறார். ஊறுகாய் வேண்டாம் என்று கணவன் சொன்னாலும் கேட்கவில்லை. கூட்டு போதும் என்று அவன் சொன்னாலும் கேட்கவில்லை.

Chithi 2 Serial: சித்தி 2 இன்னும் சீரியஸாகலைங்கோ.. கொஞ்சம் ஜாலி...கொஞ்சம் ஜோலி!Chithi 2 Serial: சித்தி 2 இன்னும் சீரியஸாகலைங்கோ.. கொஞ்சம் ஜாலி...கொஞ்சம் ஜோலி!

50 ரூபாய் சாப்பாடு

50 ரூபாய் சாப்பாடு

சாப்பிட்டு முடித்து ரெண்டு சாப்பாட்டுக்கு 50 பிளஸ் 50 நூறு ரூபாய் குடுத்துருங்க என்று மனைவி சொல்ல, இருடி.. இருன்னு முனகியபடியே எவ்ளோ சார் ஆச்சு சொல்லுங்கன்னு சர்வர்கிட்டே கேட்கிறான் புருஷன். 130 ரூபாய் குடுங்கன்னு சொல்றார் சர்வர். என்னங்க டிப்ஸா என்று மனைவி கேட்க, போர்டை பாருன்னு சொல்றான் புருஷன் அய்யயோ... சரி குடுத்துட்டு வாங்கன்னு சொல்ல இருவரும் கொடுத்துவிட்டு போகிறார்கள்.

அடுத்து இளைஞர்கள்

அடுத்து இளைஞர்கள்

அடுத்து இளைஞர்கள் இரண்டு பேர் வருகிறார்கள். அதில் ஒருத்தன் அளவா சாப்பிடுடா என்று சொல்லிக்கொண்டே இவன் அளவாக வாங்கி சாப்பிடுகிறான். டேய் சும்மா உன் காசுல சாப்பிடறேன்னு சொல்லிகிட்டே அதை சாப்பிட்டதே இதை சாப்பிடாதேன்னு சொல்லாதே. நான் ஜிம்முக்கு போறேன்.. மாஸ்டர் அதிகமா சாப்பிடணும்னு சொல்லி இருக்கார்னு சொல்லி வாங்கி வாங்கி சாப்பிடறான். ஜிம் பாடி இளைஞன் சாப்பாட்டை இலையில் மீதம் வைத்துவிட அந்த இலை சாப்பாட்டையும் கூட வந்தவன் சாப்பிட்டுட்டு, இலையைப் பார்த்துக்கோங்க சார்.. இந்தாங்க காசுன்னு ரெண்டு சாப்பாட்டுக்கு 100 ரூபாய் கொடுத்துட்டு கிளம்பறான்.

கோதண்டன் சாப்பாடு

கோதண்டன் சாப்பாடு

இதை பார்த்துக்கொண்டு இருந்த கோதண்டன் என்ன இலையெல்லாம் பாருன்னு சொல்லி சாப்பிட்டுட்டு போறான். அநியாயமா இருக்கு. சாப்பிடும்போது நண்பன் இலையைப் பார்த்து அழுதுகிட்டே சாப்பிடறான். என்ன ஹோட்டலோ என்னமோன்னு சொல்லிகிட்டே, சார் சாப்பாடு என்று கேட்கிறார். அவரும் அதை ருசி பார்க்கிறேன்.. இதை ருசி பார்க்கிறேன்னு சொல்லிட்டு நிறைய வாங்கி வாங்கி சாப்பிட கடைசியில் இவரால் சாப்பிட முடியாமல் இலையில் சாப்பாட்டை வச்சுடறார்.

300 ரூபாய் சாப்பாடு

300 ரூபாய் சாப்பாடு

சாப்பிட்டு விட்டு, 50 ரூபாய் கொடுக்கப் போக, இருங்க சார் எவ்ளோ இலையில் வச்சு இருக்கீங்க பாருங்க என்று முல்லை சொல்கிறார். ஆமாம் கொஞ்சமா மீதி வச்சுட்டேன். வேணும்னா 25 ரூபாய் வாங்கிக்கோங்க என்று கோதண்டன் சொல்கிறார். இருங்க சார் இந்த போர்டை பாருங்க என்று சொல்லி போர்டை எடுத்து வந்த காண்பிக்கிறார். அதில் சாம்பார் மீதி வச்சா 30 ரூபாய், இன்னும் என்னென்ன மீதி வச்சால் எவ்வளவு என்று பட்டியல் போட்டுவிட்டு. அதோடு, ரெண்டு பேர் சாப்பாடு வச்சு இருக்கீங்க என்று 300 ரூபாய் கேட்கிறார்.

விவசாயி ஆதரவற்ற முதியோர்

விவசாயி ஆதரவற்ற முதியோர்

சார் இந்த பணத்தை நான் வச்சுக்க போறதில்லை சார்.. உணவை வேஸ்ட் பண்ணிட்டீங்க. அந்த காசு விவசாயிகளுக்கு போய் சேரணும் சார். அதுக்கு 150 ரூபாய் இதுல போட்டுடுவேன். ஆதரவற்ற முதியோர் இன்னிக்கு யாருக்கு பிறந்தநாள் வரும், கல்யாண நாள் வரும் ஒரு வேளை சாப்பாடு திருப்தியா சாப்பிடலாம்னு காத்து இருப்பாங்க. அவங்களுக்கு 150 ரூபாய் போட்ருவேன் சார் என்று உண்டியலை காண்பிக்கிறார்.

எத்தனை மாநிலம்

எத்தனை மாநிலம்

சார் சாம்பார்தானே மிச்சம் வச்சு இருக்கேன். அதுக்கு இவ்ளோ காசான்னு கேட்ப்பீங்க. ஒரு சாம்பார் வைக்க பருப்பு வேற மாநிலத்துலேர்ந்து வருது. வெங்காயம் தக்காளி வேற மாநிலம், காய் ஒரு மாநிலம், இதை டிரான்ஸ்போர்ட் கொண்டுவர பெட்ரோல் ஒரு மாநிலம், எண்ணெய் ஒரு மாநிலம் என்று மொத்தம் 10 மாநிலம் சம்பந்தப்பட்டு இருக்கு சார். அதுக்குத்தான் இந்த காசு.. அளவில்லா சாப்பாடு என்றால், நிறைய வாங்கி வச்சு சாப்பிடாம வேஸ்ட் பண்ணனும்னு இல்லை சார். அளவா வாங்கி சாப்பிடத்தான். பஃபே என்றால் பிடித்ததை பிடித்த அளவில் வாங்கி சாப்பிடத்தான் என்றும் சொன்னார்.

நிகழ்ச்சி ஒரு மெசேஜ் சொல்வதாகவும், அதே சமயம் ரசித்து பார்க்கும்படியும் இருப்பதை பாராட்டத்தான் வேண்டும்.

English summary
At the Dillu Mullu Reality Show, which airs weekly on Artist Television on Sunday, Mullai Gothandan is a comedy that sounds like a useful comedy.If you just keep saying, "Don't waste food, don't waste"? Well, what do we need to take steps for these? See what they say!
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X