For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அப்படியே 1, 2, 3 ன்னு சொல்லிட்டிருங்க.. நான் டப்பிங்ல பார்த்துக்கறேன்..கடுப்பாகி கிளம்பிப் போன நடிகை

Google Oneindia Tamil News

சென்னை: பயணங்கள் முடிவதில்லை படத்துல ஆரம்பிச்சு கோபுரங்கள் சாய்வதில்லை, அம்மன் கோயில் கிழக்கால, வைதேகி காத்திருந்தாள், குங்கும சிமிழ்னு பல வெற்றி படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் சுந்தர்ராஜன்.

விஜயகாந்த், மோகன், மணிவண்ணன்,ரேவதி, ராதா இப்படி சில நடிகர் நடிகைகள் இவரின் குணத்துக்கு ஒத்துப் போனவர்கள்...

இப்போ, திருமுருகன் இயக்கத்தில் கல்யாண வீடு சீரியலில் அப்பா வேஷத்தில் நடித்து வருகிறார். பெரிய திரையில் இருந்தப்பவே பேட்டின்னா பேசமாட்டார்.. இப்போ கல்யாணவீடு யூனிட்டில் அவர் பேசியது...

பொறுப்பு

பொறுப்பு

படத்தை இயக்க ஆரம்பிக்கும்போது, கையில் ஸ்கிரிப்ட் அது இதுன்னு எதுவும் வச்சுக்க மாட்டாராம். நான் சொல்றதை நீ நடி, ஸ்டார்ட், காமிரான்னா நீ படம்புடின்னு காமிரா மேன்கிட்ட முன்னாடியே சொல்லிடுவாராம்.

இயக்குநர்

இயக்குநர்

இதனாலேயே டைரக்டர் சுந்தர்ராஜன் படம்னா நடிக்கறவங்க குஷியாயிருவாங்களாம். மனப்பாடம் பண்ண தேவையில்லை, ஹோம் வொர்க் தேவையில்லை. சொல்றதை கேட்டு நடிச்சா படம் சூப்பர் டூப்பர் ஹிட்டு... எதுக்கு கவலைப்படணும்னு விட்ருவாங்க.

வீசிய நடிகை

வீசிய நடிகை

அவர் சொல்லும்போது, வழக்கமான டிரேட் மார்க்கோட சீன் எடுத்துக்கிட்டு இருந்தேன். மாலையும் கழுத்துமா ஒரு நடிகை வசனம் பேச வேண்டிய காட்சி. வசனத்தை சொல்லுங்க சார், நான் நடிக்கறேன்னு நடிகை சொல்ல, வசனம் கையிருப்பு இல்லம்மா, மனசுலயும் தோணலைன்னு சொன்னேன். அப்போ பேக்- அப் பான்னு கேட்டார்.

சும்மா நடிங்க

சும்மா நடிங்க

எதுக்கு பேக்-அப் ... கையை இப்படி அப்படி அசைத்து ஒண்ணுலேர்ந்து பத்து வரைக்கும் ஆக்ரோஷமா சொல்லுங்க. நான் லாங் ஷாட் வச்சு எடுத்துக்கறேன். டப்பிங்கில் அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன்னு சொன்னேன். அந்தம்மா மாலையை தூக்கி வீசிட்டு, நீயெல்லாம் ஒரு டைரக்ரான்னு சொல்லிட்டுப் போயிருச்சுன்னு சொன்னார்.

இது திருமுருகன் பாணி

இது திருமுருகன் பாணி

சின்னத்திரை இயக்குநர் திருமுருகன், இயக்குநர் சுந்தர்ராஜனிடம் பேசிய போது வெளிவந்த விஷயங்கள் இவை. திருமுருகனுக்கு எப்போதும் ஒரு பழக்கம், யூனிட்டில் உள்ள முக்கியமானவர்களிடம் தாமாக வலிய வந்து பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருப்பாராம்.

நல்ல கதாபாத்திரங்கள்

நல்ல கதாபாத்திரங்கள்

இப்படி பலரிடம் பேச்சுக் கொடுக்கும்போது சில நல்ல கதாபாத்திரங்கள் கூட கிடைக்குமாம் . சில சீன்கள் கிரியேட் பண்ணவும் முடியுமாம். இது திருமுருகன் பாணி என்கிறார்கள் அவரது யூனிட்டில்.

English summary
Director Sundararajan was a busy director once and now he is acting in TV serial Kalyana Veedu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X