For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Kalyana Veedu Serial: ஒரே மருமகள் போரடிக்குதாமே...இவங்க டூமச் மாமியார்ஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் கலா அன்ட் சிஸ்டர் அட்டகாசம் டூ மச் மாமியார்ஸ் என்று பெயர் வைக்கும் அளவுக்கு எல்லை மீறிக்கொண்டு இருக்கிறது. இவர்களுக்கு எல்லை என்பதே இல்லை என்கிற அளவுக்கு டயலாக் வச்சு இருக்காங்க. அதில் ஒண்ணுதான் தங்கை ஏன்க்கா.. உனக்கு ஒரே மருமகள் போரடிக்கலை என்று கேட்கும் அளவுக்கு சென்று இருக்கிறது.

எங்கேயும் எப்போதும் ஊர் வம்பு பேசும் இரண்டு பெண்கள் கல்யாண வீடு சீரியலில் வரும் அக்கா தங்கைகளான கலா அன்ட் சிஸ்டர்ஸ். கதைக்குத்தான் என்றாலும், இதை பெண்கள் குலத்தால்பொறுத்துக்க முடியாதுதான்... . இருந்தாலும் இந்த டயலாக்கை எழுதி சன் குடும்ப விருதுகளில் பெஸ்ட் வசனகர்த்தா என்கிற அவார்ட் வாங்கி இருப்பது ஒரு பெண்தான்.

எந்த ஒரு விஷயத்தையும் எஸ்டீம் லெவலில் காண்பித்து கல்யாண வீடு சீரியல் ஆரம்பித்தாலே ஹை எமோஷன்தான் என்கிற அளவுக்கு கொண்டு சென்று இருக்கிறார் இயக்குநர் திருமுருகன். ஸ்வேதா புருஷன் கதை ஆரம்பித்தால் சந்தேகம் என்று அவள் புருஷனை சைக்கோவாக்கி கதை பண்ணி இருக்கிறார்.

 நிம்மதி இல்லை குடும்பத்தில்

நிம்மதி இல்லை குடும்பத்தில்

கல்யாண வீடு சீரியலில் ஒரு குடும்பத்திலும் நிம்மதி இல்லை, சந்தோசம் இல்லை. மாமியார் கொடுமை, வம்பு பேசுவது.. வயதுக்கு மீறின ரொமான்ஸ் என்று கல்யாண வீடு சீரியலில் என்டெர்டெயின்மென்ட் மருந்துக்கும் இல்லை. சீரியல் என்றால் என்ன, மக்களை கட்டிப்போட்டு உட்கார வச்சாலும், அது பொழுது போக்கு நிறைந்த அம்சமாக இருக்க வேண்டும். எப்போதும் எதாவது ஒரு வீட்டு கதையை பார்ப்பதுதான் சீரியல் என்கிற நினைவிலேயே கொண்டு சென்று இருக்கார் திருமுருகன்.

Kodeeswari: சென்னைக்கு வந்தா ஜெயலலிதாவைப் பார்த்துட்டுத்தான் போவேன்!Kodeeswari: சென்னைக்கு வந்தா ஜெயலலிதாவைப் பார்த்துட்டுத்தான் போவேன்!

 ஒரே மருமகள் போர்

ஒரே மருமகள் போர்

என்ன தவறு செய்தாலும் மறுபடி மறுபடி கலா அண்ட் சிஸ்டர்ஸ் வம்பு பேசுவதற்கு எந்த தண்டனையும் சீரியலில் இயக்குநர் தராமல் மீண்டும் மீண்டும் அவர்கள் பேசும் வம்புக்கே முதலிடம் கொடுத்து அவ்வப்போது கதை அமைத்து இருக்கார். இருவரும் வம்பு பேச பேச நிஜத்திலும் கண்டிராத கேரக்டர் என்பதால், பார்ப்பவர்களுக்கு பிபி எகிறுது. இதில் ரொம்ப எஸ்டீம் லெவல் டயலாக் என்று சொன்னால், கலாக்காவிடம் அவர் தங்கை, ஏன் அக்கா உனக்கு ஒரே மருமகள் போரடிக்கலையா என்று கேட்பதுதான்.அதாவது இப்போது இருக்கும் மருமகளான இவளை விரட்டிவிட்டு மகனுக்கு வேறு கல்யாணம் செய்ய விருப்பமாம்.

 டூ மச் மாமியார்ஸ்

டூ மச் மாமியார்ஸ்

மாமியர்களில் கொடுமைக்கார மாமியார் இப்படி இருப்பார்கள்தான். அதை செய்திகளில் கேட்டு தெரிந்துகொண்டால் போச்சு. இதை ஏன் பெரிதாக்கி அன்றாடம் மக்கள் பார்க்கும்படி வெளிச்சம் போட்டு காண்பிக்க வேண்டும்? கல்யாண வீடு சீரியலில் வரும் அத்தனை கதாபாத்திரங்களின் நிலைமையும் எஸ்டீம் லெவலில்தான் இருக்கு. ஏதோ அண்ணன் தங்கை பாசம்,. குடும்ப அட்டாச்மென்ட் சாதாரணமா எல்லா குடும்பத்திலும் இருப்பது போல இருக்கிறது. அதுவும் கூட எங்க அண்ணன்... எங்க அண்ணன்... என்று சொல்லிக்கொள்ளும்படி பெரிதாக ஒன்றும் இல்லை.

 சீரியலில் ரிலாக்ஸ் இல்லை

சீரியலில் ரிலாக்ஸ் இல்லை

கல்யாண வீடு சீரியல் பார்க்க உட்கார்ந்தால் கொஞ்சம் கூட ரிலாக்ஸ் இல்லை. அவங்க வீட்டு கதை, இவங்க வீட்டு கதை என்று எல்லாமே அளவுக்கு மீறின எமோஷன்ஸ் கொடுப்பதாக இருக்கு. மக்கள் பாவம்... எப்படி இருந்தாலும் அதை ஒரு டிரேட் மார்க் அதாவது திருமுருகன் இயக்கம் என்கிற டிரேட் மார்க்குக்காக பார்த்துக்கொண்டுதான் இருப்பார்கள்.. அவர்களுக்கு நாம் நல்லது செய்ய வேண்டும் என்கிற பொறுப்புணர்வு இருக்க வேண்டும்.

English summary
Why should it be enlarged and illuminated for people to see on a daily basis? The status of all the characters in the wedding house serial is at the Esteem level. Something brother brother affection. Family Attachment Ordinary is like in all families. There is nothing great to say that even our brother ... where is my brother ...
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X