For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

4 வது படிக்கற குழந்தைக்கு ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கு ஹாலிடே வொர்க்கா? அடேங்கப்பா....?

Google Oneindia Tamil News

சென்னை: விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி அறியாததையும் அறிய வைக்கும் உண்மை நிகழ்ச்சி.

மக்களின் வாயில் இருந்தே வரும் உண்மை நிகழ்ச்சி. பள்ளிகளில் கொடுக்கும் ஹாலிடே ஹோம் வொர்க் பற்றி பலரும் பொருமிக் கொண்டு இருக்கும் நிலையில் இங்கு குட்டு உடைகிறது பாருங்கள்.

சிறு குழந்தைங்களுக்கு கொடுக்கும் ஹோம் வொர்க் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு கொடுக்கும் கல்லூரி வொர்க் போல் மலைக்க வைக்கிறது. விஜய் டிவி ஞாயிறு ஒளிபரப்புக்கான ப்ரோமோவை வெளியிட்டு வருகிறது.

ஸ்டெர்லைட் வழக்கு.. வேதாந்தாவின் வழக்குகளை நாளை மறுநாள் முதல் விசாரிக்கிறது உயர்நீதிமன்றம்ஸ்டெர்லைட் வழக்கு.. வேதாந்தாவின் வழக்குகளை நாளை மறுநாள் முதல் விசாரிக்கிறது உயர்நீதிமன்றம்

பள்ளிகள் கையில்

பள்ளிகள் கையில்

பள்ளிகள் கையில்தான் இப்போது பிள்ளைகளின் எதிர்காலம் இருக்கிறது. ஹோம்வொர்க் ஹோம்வொர்க் என்று பிள்ளைகளின் எதிர்காலத்தை வீணாக பாழடிக்கும் பள்ளிகள் எத்தனை இருக்கின்றன என்று இந்த நிகழ்ச்சியை பார்த்தால் பள்ளிகள் மற்றும் பெற்றோர்கள் நிச்சயம் தெரிந்துக் கொள்ளலாம். பிள்ளைகளும் பெற்றோர்களிடம் தெரிவிக்கலாம். பெற்றோர்களும் பள்ளிகளிடம் இதை ஒரு புகாராகவே தெரிவிக்கலாம்.

சில்க் திரெட்

சில்க் திரெட்

என் பையன் எல்கேஜிதான் படிக்கிறான் சார். இவனுக்கு எப்படி சார் தெரியும்.? என்னை கஷ்டப்படுத்தாதீங்கன்னு சொல்ற அளவுக்குத்தான் சார் வொர்க் குடுப்பாங்கன்னு ஒரு அம்மா சொன்னாங்க. எப்படி குடுக்கறாங்கன்னு கோபிநாத் கேட்டபோது.. அம்மா விளக்கி சொன்னார்.

விதம் விதமான

விதம் விதமான

கட்டிங் வொர்க், விதம் விதமான சில்க் திரெட் கலெக்ட் பண்ணி ஒட்டற வொர்க் சார். இவனுக்கு எப்படி சார் அதெல்லாம் தெரியும்னு இது மாதிரி கிராஃப்ட் வொர்க் அந்த புக் முழுக்க இருக்கும். அம்மா கேட்டாங்க. அதுக்கு டீச்சர் ஒருத்தங்க சொன்னாங்க. கலர் கலர் நூலை ஒரு மூணாம் வகுப்பு படிக்கற குழந்தையால ஒட்ட முடியும் என்று. ஆனால், அந்த அம்மா சொன்னாங்க என் குழந்தை எல்கேஜி படிக்கிறான் சார்னு சொன்னார்.

கைவினை கலைஞரை

கைவினை கலைஞரை

பள்ளிகள் கைவினை கலைஞரை உருவாக்கும் முயற்சியில் இருப்பது போலத்தான் தோன்றுகிறது என்று சிறப்பு விருந்தினர் கூறினார். அது மட்டும் இல்லாமல் இன்ஜியரிங் மாணவரை இப்போதே உருவாக்குவது போலவும், அவர்களுக்கான திருட்டுத் தனத்தை இப்போதே பள்ளிகள் உருவாக்குவது போலவும்தான் தோன்றுகிறது. என்றும் அவர் கூறினார்.

புராஜக்ட் வொர்க்

புராஜக்ட் வொர்க்

பள்ளிகள் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் இருவருக்கும் இப்படியான புராஜக்ட் வேலைப்பாடுகளை செய்துகொடுக்க என்று இருக்கும் ஃபேன்சி ஸ்டோர்களின் உரிமையாளர்கள் வந்திருந்தார்கள். அவர்களில் ஒருவர் பேசும்போது இப்படிப்பட்ட புராஜெக்ட் வேலைப்பாடுகளை 4 வது படிக்கும் ஒரு மாணவனுக்கு ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கு செய்து கொடுத்ததுதான் அதிக ரூபாய்க்கு செய்து கொடுத்த ஹாலிடே வேலைப்பாடாம்.

இதன் மூலம் எந்த ஹாலிடே வேலை கொடுத்தாலும் மாணவன் தானாக செய்வதில்லை என்பதை பள்ளியும், கல்லூரியும் நினைவில் கொள்ள வேண்டும்.

English summary
ijay TV's Neeya Nana is an unknown reality show.A true show that comes from the mouth of the people. Here's a look at the holiday homework in schools as many people are talking about it. Homework engineering for small children is just as exciting as college work for college students. Vijay TV is releasing the Promo for Sunday broadcast.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X