For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரிசி குத்தும் அக்கா மகளே... மறந்து போன உலக்கைகள்.. மறக்காம இதைப் படிங்க!

Google Oneindia Tamil News

சென்னை: எந்த குக்கிராமத்தில் இருந்தாலும் உலகமே உங்கள் கையில் அடக்கம் என்பது போலத்தான் முதலில் செல்போனில் இன்டர்நெட் கனெக்ஷன் வந்தது.

அதில் முகநூல், வாட்சாப், யூடியூப் என்று தெரிய ஆரம்பிக்க நம்மாட்கள் புகுந்து விளையாட ஆரம்பித்து இருந்தார்கள். இப்போது அதில் அதிக பார்வையாளர்கள், சப்ஸ்கிரைபர்ஸ் என்று அதிகம் ஆக வலை தள நிறுவனத்தார் பணமும் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

விளைவு? அவரவர் தங்களது கிரியேட்டிவிட்டிகளை யூடியூப் சானலில் காண்பித்து சம்பாதிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். இங்கு ஆனந்தி இப்படித்தான் புகழடைந்து சம்பாதித்தும் வருகிறார்.

யூடியூப் சானல்

யூடியூப் சானல்

வில்லேஜ் ஃபூட்ஸ் யூடியூப் சானல் கொஞ்சம் வித்தியாசமாக மறந்து போன பாரம்பரிய விஷயங்கள், கிராமத்தின் இள வயது நாட்களில் துள்ளித் திரிந்து நாம் அனுபவித்த சந்தோஷங்களை நினைவு படுத்துவதாகவும் இருக்கிறது. சரோஜா என்கிற இளம் தாய் இந்த சானலின் மூலம் நல்ல விஷயங்களை சொல்லி வருகிறார்.

அவல் எடுப்பது

அவல் எடுப்பது

நாற்று நடுவதற்கு நெல்லை மூன்று நாட்கள் ஊற வைப்பார்கள். இளம் சூட்டோடு கதகதப்பாக ஊறிய நெல் இருக்க.பின்னாட்கள் அதை பாத்திரத்தில் வைக்கோல் போட்டு, பின்னர் ஊறிய நெல்லை கொட்டி வைக்கோல் போட்டு மூடி அதன் மேல் கல்லை வைத்து விடுவார்கள். மூன்று நாட்கள் கழித்துப் பார்த்தால் நெல் முளை விட்டு இருக்கும்.

நாற்றங்காலில் தெளித்து

நாற்றங்காலில் தெளித்து

அந்த நெல்லை நாற்றங்கால் வயலில் தெளித்து விடும் போதுதான் நாற்று முளைக்கும். விஷயம் இப்போது அதுவல்ல... அந்த முளை விட்ட நெல்லை வீட்டுப் பெண்மணிகள் வேண்டும் அளவுக்கு எடுத்து, அடுப்பு மூட்டி, மண் சட்டியில் வறுப்பார்கள். வறுத்த நெல்லை சுடச் சுட உரலில் போட்டு உலக்கையை வைத்துக்கொண்டு சூடு ஆறுவதற்குள் இடிப்பார்கள். இதற்காக இரண்டு பெண்கள் உலக்கையில் இடித்தால்தான் நெல் சூடு ஆறுவதற்குள் நெல் இடிக்க இடிக்க அவலாக மாறும்.

வில்லேஜ் ஃபூட்ஸ்

வில்லேஜ் ஃபூட்ஸ்

சரோஜா தனது வில்லேஜ் ஃபூட்ஸ் யூட்டியூப் சானல் மூலம் இதை எல்லாம் தான் நமக்கு தெரியப் படுத்துகிறார். குளத்து சேற்றில் மீன் பிடிப்பது... நண்டு பிடித்து சமையல் செய்வது.. என்று திருப்பூரின் கிராமத்து இளம் தாயாக அசத்துகிறார். எளிமையான தோற்றத்தகுதில் அழகாக இருக்கும் இவர் ஒரு எபிசோட்டில் தன் குடும்பத்தையும் அறிமுகம் செய்கிறார்.

English summary
In any hamlet, the world is in your handsIn it, we started to know that Facebook, WhatsApp, YouTube, our people started playing. Now more and more visitors, subscribers, web site owners are starting to pay.The result? They have started earning their creatives on YouTube channel. This is how Anandi comes to fame.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X