For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அக்கான்னு கூப்பிடுங்க..தங்கைன்னு கூப்பிடுங்க.. நெகிழ வைத்த திருநங்கையர்!

Google Oneindia Tamil News

சென்னை: திருநங்கைகளை என்ன சொல்லி அழைப்பது என்று தெரியவில்லை என்று சொல்கிறார் ஒரு பெண்.

ஜீ தமிழ் டிவியின் தமிழா தமிழா நிகழ்ச்சியில் இதை ஒரு விவாதமாகவே கொண்டு சென்று இருக்கிறார் நிகழ்ச்சித் தொகுப்பாளர் கரு. பழனியப்பன்.

ஒரு புறம் திருநங்கைகள்.. இன்னொரு புறம் அவர்களுடன் நட்பு பாராட்ட விரும்புபவர்கள் என்று நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு இருக்கிறார்கள்.

Azhagu Serial: சே.. என்ன பொண்ணு இந்த பூர்ணா?Azhagu Serial: சே.. என்ன பொண்ணு இந்த பூர்ணா?

 நட்பு பாராட்ட விருப்பம்

நட்பு பாராட்ட விருப்பம்

திருநங்கைகளுடன் நட்பு பாராட்டி பேசிப் பழக விருப்பம். ஆனால் அவர்களை எப்படி அழைப்பது என்றுதான் தெரியவில்லை என்று ஒரு பெண் சொல்கிறார். அதற்கு நிகழ்சசித் தொகுப்பாளராக இருக்கும் கரு. பழனியப்பன் பேசிப் பழக ஆசையாம். எப்படி அழைப்பது என்று தெரியவில்லை என்று சொல்கிறார்.

 டேய் டி

டேய் டி

அதாவது டேய் என்றா அல்லது டி என்றா என்ன அட்ரஸ் பண்ணி எப்படி அழைப்பது என்று தெரியவில்லை.. இதுதான் குழப்பம் என்று சொல்கிறார்... இதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள் என்று கேட்டபோது. இது பெண்மைதானே.. உங்களை விட ரெண்டு வயசு குறைவாக இருப்பார்களா என்று ஒருவரை காண்பித்து இப்படி இருந்தால் தங்கை என்று கூப்பிடுவீங்களா?

 கொஞ்சம் பெரியவங்களா

கொஞ்சம் பெரியவங்களா

இன்னும் வயசுல உங்களை விட பெரியவங்களா இவங்களை மாதிரி இருந்தா அம்மான்னு கூப்பிடுவீங்களா.. உங்களை விட சின்ன பாப்பாவா இருந்தா.. நீங்க முதியோரா இருந்தா மகளேன்னு கூடுவீங்களா எங்களை அதே மாதிரியே கூப்பிடுங்க..

 உரிய சொல்லாடல்

உரிய சொல்லாடல்

ஒரு பெண்ணுக்கு உரிய சொல்லாடல் என்ன இருக்கோ அது மாதிரியே கூப்பிடுங்க. இன்னும் யோசிச்சுகிட்டே இருந்தீங்கன்னா எங்களோட நீங்க பேசாமலே போயிருவீங்க என்று ஒரு திருநங்கை அழகாக பேசினார். அவர் பேசியது நெஞ்சை நெகிழ வைப்பதாக இருந்தது.

English summary
A woman says she doesn't know what to call transgender people.This is a discussion on the Tamizha Tamizha program of Zee Tamil TV. Palaniappan.On the one hand transgender people .. on the other hand, they want to be friendly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X