For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

COVID-19: நாடெங்கும் லாக்டவுன்.. ஸ்மார்ட் போன்கள் செம பிசி.. டிவி அதை விட ரொம்ப பிசி!

Google Oneindia Tamil News

இந்தியா: லாக்டவுன் அமலில் இருக்கும் இந்த நேரத்தில் தொலைக்காட்சி பார்வையாளர்கள் மற்றும் ஸ்மார்ட் போன் மூலமாக செய்தி உள்ளிட்டவற்றை அறியும் பயன்பாடு அதிரித்துள்ளதாம்

இதுதொடர்பான புள்ளிவிவரத் தகவலை பார்க் எனப்படும் பிராட்காஸ்ட் ஆடியன்ஸ் ரிசர்ச் கவுன்சில் மற்றும் நீல்சன் ஆகியோர் எடுத்த சர்வே முடிவில் வெளியிட்டுள்ளது. அதன் ரிப்போர்ட் புள்ளி விவர பட்டியலின்படி, லாக்டவுனின் முதல் வாரத்தில் டிவி பார்ப்பவர்களின் எண்ணிக்கை 8 சதவிகிதம் அதிகரித்து உள்ளது.

ஸ்மார்ட் போனில் தங்களுக்கு விருப்பமானதைத் தேடிப் பார்க்கும் நேரம் என்பது வழக்கமாக பார்க்கும் நேரத்தை விட கூடுதலாகி 1. 5 மணி நேரமாக அதிகரித்து இருக்கிறது. இதை நெல்சன் ரிப்போர்ட் அதிகாரப் பூர்வமாகத் தெரிவிக்கிறது.

 ஸ்மார்ட் போன் டிவி

ஸ்மார்ட் போன் டிவி

ஸ்மார்ட் போனில் பிடித்தமானதை பார்ப்போரின் சதவிகிதம் 6 ஆகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்ப்போரின் சதவிகிதம் என்பது 8 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த அறிக்கையை பார்க் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி சுனில் லல்லா மற்றும் நீல்சன் குளோபல் மீடியாவின் தெற்காசியாவுக்கான தலைவர் டோலி ஜா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

 ஐபிஎல் ஃபைனல் மோடி உரை

ஐபிஎல் ஃபைனல் மோடி உரை

மிக முக்கியமாக பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு உரை நிகழ்ச்சியை நிகழ்த்தியதை, ஐபிஎல் இறுதிப் போட்டியை கண்டோரை விட அதிகமானோர் பார்த்தனர் என்று அந்த அறிக்கை சொல்கிறது. 2019ம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியை 133 மில்லியன் பேர் பார்த்தனர். இதை பிரதமர் உரை முறியடித்துள்ளது. அதாவது 197 மில்லியன் பேர் பார்த்தும் கேட்டும் உள்ளனர்.

 பொழுது போக்கு அம்சம்

பொழுது போக்கு அம்சம்

அமேசான், சன் நெக்ஸ்ட், ஹாட் ஸ்டார் இணைய தளத்தின் பயன்பாடும் அதிகரித்து உள்ளது. பெரும்பாலும் வயதானவர்கள் கூடுதல் பயன்பாட்டை பெற்றுள்ளனர் என்றும் புள்ளி விவர அறிக்கைத் தெரிவிக்கிறது. இது உண்மைதான் வீட்டிலேயே முடங்கிப் போயுள்ள மக்களுக்கு மிகப் பெரிய பொழுது போக்கு டிவியும் ஸ்மார்ட் போனும்தான். அதிலும் இப்போது குடும்பத்தோடு சீரியல் வேறு பார்க்க பழகி விட்டனர் மக்கள்!

 உன் குத்தமா என் குத்தமா

உன் குத்தமா என் குத்தமா

வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சிரியவர்களை எப்போது பார்த்தாலும் போனை நோண்டிக்கொண்டே இரு.. எப்போ பார்த்தாலும் டிவிதானா இப்படியே கேட்டு கேட்டு சாகடித்தார்கள். இப்போது இவர்கள் கையில் எப்போதும் போன்.. ரிமோட்.. உன் குத்தமா.. என் குத்தமா யாரை நானும் குத்தம் சொல்ல?

English summary
Lockdown all over the country .. Smart phones Semi PC .. TV is more PC than that!
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X