• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீரியல் சூட்டிங் ஃபீலிங் - இவங்களுக்கு ஒர்க் ஃப்ரம் ஹோம் இப்படி இருக்குமோ...

|

சென்னை: ஒர்க் ப்ரம் ஹோம் காலமாகிவிட்டது. கொரோனா விடுமுறை காலம் மாணவர்களுக்கு மட்டும்தான். அலுவலகத்தில் வேலை செய்தவர்கள் இப்போது லேப்டாப்பும் கையுமாக வீட்டில் வேலை செய்கிறார்கள். இதனால் பலருக்கும் மன உளைச்சல், அலுவலகத்திற்கு ஜாலியாக போய் வந்தவர்கள் எல்லோருமே வீட்டில் இருந்து வேலை செய்வதை விரும்பவில்லை. டிவி சீரியலில் நடித்தவர்கள் பலரும் இப்போது வீட்டில் ஒர்க் அவுட் செய்து கொண்டிருக்கிறார். சூட்டிங்கில் நடிப்பது போலவே காலை முதல் மாலை வரை வீட்டில் பேசினாலோ நடித்தாலோ எப்படி இருக்கும் என்று யோசித்து பார்த்து அவர்களின் சோஷியல் மீடியா பக்கங்களை எட்டிப்பார்த்தோம். அட இதுவும் நல்லாத்தான் இருக்குப்பா.

  Emotional: Anchor DD major Injury | Left Leg Fracture | Enkita Modhadhe

  பல சீரியல்களில் இப்போது டூயட் பாடல்தான். சினிமா பாடல்களை போட்டு ஒப்பேற்றி விடுவார்கள். அதற்கு நடிகைகள் ஆடும் நடனம் சும்மா அள்ளும். மாமியாருக்கு மருமகள் சமைத்து கொடுப்பதும், மாமியார் மருமகள் சண்டை போடுவதும் சீரியலில் அவ்வப்போது அரங்கேறும். காட்டுக்கத்தலாக கத்தி சவால் விடுவதும் நடக்கும் கடந்த ஒரு மாத காலமாக வீடுகளில் இந்த சீரியல் சண்டைகளை பார்க்க முடிவதில்லை. காரணம் சீரியல் சூட்டிங் இல்லாமல் போனதால் இப்போது மறு ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்க்க முடிவதில்லை.

  அதே போல ரியாலிட்டிஷோக்களும் இப்போது இல்லாமல் போனதால் டிவி ஆங்கர்களும் ஓய்வில் இருக்கிறார்கள், சிலரது பொழுதுகள் எப்படி போகிறது
  என்று பார்த்தால் பலருக்கும் பல பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது.

  விஜய் டிவி டிடி

  விஜய் டிவி டிடி

  பிரபல டிவி தொகுப்பாளினி டிடிவியின் இன்ஸ்டா பக்கத்தை எட்டிப்பார்த்தால் கலர்ஃபுல்லாக இருக்கிறது, இப்போது கால்கட்டு போட்டிருக்கிறார். ரெஸ்ட் மோடில் இருக்கும் டிடியின் பொழுது போக்கு ஓடிடி பிளாட்பார்ம்கள்தானாம் அதை அவரே சொல்லியிருக்கிறார். சீக்கிரம் குணமாகி பழைய டிடியாக வர வாழ்த்துவோம்.

  ரோஜா நாயகி பிரியங்கா

  ரோஜா நாயகி பிரியங்கா

  சன்டிவியின் நாயகிகள் பக்கம் படு கலர்புல்தான். அதிலும் ரோஜா நாயகி பிரியங்காவின் பக்கத்தில் குடும்பத்தோடு உற்சாகமாகவே பொழுதை கழிக்கிறார். குடும்ப குத்துவிளக்காக புடவையில் படு பாந்தமாக நடிக்கும் பிரியங்கா அவ்வப்போது ஹீரோ உடன் டூயட் ஆட தவறுவதில்லை, இப்போது வீட்டிலேயே நடனமாடிக்கொண்டிருக்கிறார். படு க்யூட்டாக. அதை தனது இன்ஸ்டா பக்கத்திலும் போட்டு ரசிகர்களின் நெஞ்சில் பால்வார்க்கிறார்.

  பிரியங்கா ஜோடி ஆட்டம்

  பிரியங்கா ஜோடி ஆட்டம்

  தனியாக ஆடி அலுத்துப்போன பிரியங்காவிற்கு ஜோடியாக கிடைத்திருக்கிறார் அவரது சகோதரி. எப்போதுமே வக்கீல் சாருடன் டூயட் ஆடும் பிரியங்காவின் ஆட்டம் இப்போது செமதான் போங்க. ஆனாலும் வக்கீலுடன் ஆடும் ஆட்டத்தோடு ஒப்பிட்டால் ஆட்டம் கொஞ்சம் கம்மிதான்.

  சரவணன் மீனாட்சி ரட்சிதா

  சரவணன் மீனாட்சி ரட்சிதா

  சரவணன் மீனாட்சி சீரியல் எவர்கிரீன் ஹிட் சீரியல், விஜய் டிவியில் மறு ஒளிபரப்பாகிறது. அந்த சீரியல் நாயகி மகாலட்சுமி இப்போது வேறு மொழி சீரியல்களில் பிசியாகி விட்டார். சூட்டிங் இல்லாத இந்த நாட்களில் வீட்டில் செல்லக்குட்டிகளுடன் பொழுது போகிறது.

  வாணி போஜன் டல்கோனா காபி

  வாணி போஜன் டல்கோனா காபி

  சின்னத்திரை நயன்தாரா தெய்வமகள் நாயகி வாணி போஜன் சீரியலில் இருந்து புரமோசன் ஆசி சினிமா பக்கம் போய் விட்டார் என்றாலும் இப்போது வெப் சீரிஸ்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். எந்த சூட்டிங்குமே இப்போது இல்லை என்பதால் டல்கோனா காபி சேலஞ்ச்சை ஏறறுக்கொண்டு காபி செய்து சாவகாசமாக குடித்து வருகிறார்.

  பாண்டியன் ஸ்டோர் சுஜீதா

  பாண்டியன் ஸ்டோர் சுஜீதா

  பாண்டியன் ஸ்டோர் நாயகி சுஜீதாவிற்கு மூத்த மருமகள் வேடம், அண்ணியாக, ஓரகத்திகளிடம் நல்ல அக்காவாக நடந்து கொள்வார். இப்போது லாக் டவுன் காலத்தில் பாண்டியன் ஸ்டோர் மூடப்பட்டுள்ளது. விஜய் டிவியில் மணி கணக்கில் மறு ஒளிபரப்பு செய்கிறார்கள். சூட்டிங்கிற்கு ரெஸ்ட் விட்டுள்ளதால் மகனுடன் ஓவியம் வரைகிறார் உற்சாகமாகவே பொழுதை போக்குகிறார்.

  English summary
  Most of the TV artistes are work from home in Coronavirus strikes the state. Corona Locktown during their work hours, looking after homework, children and cooking in their social media pages posted.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X