For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொஞ்சம் கொரோனா பீதி ... கொஞ்சம் ரிலாக்ஸ்... மொத்தம் டிவியே சரணாகதி!

Google Oneindia Tamil News

டெல்லி: மக்கள் கொரோனா பயம் காரணமாக டிவி நிகழ்ச்சிகளை அதிகம் பார்த்து வருகின்றனர் என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. கொரோனாவால் உலகில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ளும் ஆர்வம் ஒரு புறம்...

எப்போதும் கொரோனா பீதியாக இருக்கிறதே.. கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம் என்கிற எண்ணம் ஒரு புறம் என்று மக்கள் தொலைக்காட்சிகளில் செய்திகள், நிகழ்ச்சிகளை பார்த்து வருகிறார்கள் என்று அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

இந்திய மக்கள் அனைவரின் ஒட்டுமொத்த எண்ணமும் கொஞ்சம் கொரோனா பீதி...கொஞ்சம் ரிலாக்ஸ் என்று இரண்டுக்குமே டிவி சானல்கள், ott இயங்கு தளங்கள் பார்ப்பது என்று இப்படித்தான் இருக்கிறது என்றும் அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

போட்ரா வெடியை.. இந்த வாரம் முழுக்க பர்த் டே கொண்டாட்டமாம்ய்யா!போட்ரா வெடியை.. இந்த வாரம் முழுக்க பர்த் டே கொண்டாட்டமாம்ய்யா!

லாக்டவுன் இந்தியா

லாக்டவுன் இந்தியா

கோவிட் 19 தொற்று காரணமாக லாக்டவுன் அமலில் இருக்கும் இந்த நேரத்தில், மத்திய அரசு லாக்டவுன் காலத்தை இன்னும் நீட்டித்து உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இதனால் சோர்வடைந்து இருக்கும் மக்கள் கொரோனா பீதி காரணமாகவும், நாட்டில் யார் யாருக்கு என்ன நடக்கிறது... கொரோனாவின் நிலைதான் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளும் ஆவலிலும் இருக்கிறார்கள்.

அடிக்கடி தொலைக்காட்சி

அடிக்கடி தொலைக்காட்சி

கொரோனா பற்றிய செய்திகள், நாட்டு நடப்புக்களை இவற்றை தெரிந்துக்கொள்ள செய்தி சானல்கள், ஆன்லைன் செய்தி தளங்கள் என்று அடிக்கடி பார்த்து விவரத்தை தெரிந்துக்கொள்ளும் ஆவலில் மக்கள் இருக்கிறார்களாம். என்னதான் கேளிக்கை நிகழ்ச்சிகள் என்று பார்த்து வந்தாலும், கொரோனா தொடர்பான செய்திகளை தெரிந்துக்கொள்ள அடிக்கடி தங்களுக்கு வசதியான செய்தி சானல்கள், ஆன் லைன் செய்தி தளங்களை பார்த்து வருகின்றனர் என்றும் அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

பெரியவர்கள் வாலிப பருவத்தினர்

பெரியவர்கள் வாலிப பருவத்தினர்

பெரியவர்கள், வாலிப பருவத்தினர் என்று பிரிக்கும்போது பெரியவர்கள் கேளிக்கை நிகழ்ச்சிகளை பார்த்தாலும், அடிக்கடி செய்தி சானல்கள் கதி என்று இருப்பதாகவும், வாலிப பருவத்தினர் ott இயங்கு தளங்களில் தங்களுக்கு பிடித்தமானவற்றை விரும்பி பார்க்கின்றனர் என்று கூறுகிறார்கள். அதே சமயம் அரை மணிக்கு ஒரு முறை செய்தி சானல்கள், ஆன் லைன் தளங்களை பார்த்து கொரோனா பற்றி தெரிந்துக்கொள்வது வாலிபர்களின் அன்றாட லாக்டவுன் செயல்களில் ஒன்றாக இருக்கிறதாம்.

கொரோனா பீதி

கொரோனா பீதி

இந்தியாவின் கடைக்கோடி மக்கள் வரை கொரோனா பீதி ஆட்கொண்டு இருக்கிறது என்றும்,. இந்த பீதிதான் அவர்களை இடையிடையே கொரோனா தொடர்பான செய்திகளை தெரிந்து வைத்துக்கொள்ளும் ஆர்வத்தை தூண்டி, செய்தி சானல்களை பார்க்க வைக்கின்றது என்றும் அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது. மக்களின் அன்றாட நடவடிக்கை என்பது கொஞ்சம் கொரோனா பீதி.. கொஞ்சம் மனசுக்கு ரிலாக்ஸ் என்கிற முறையில் செய்தி சானல்கள்...தொலைக்காட்சி, ott இயங்கு தளங்களில் நிகழ்ச்சிகளை பார்ப்பது என்று இருப்பதாக அந்த புள்ளி விவரம் கூறுகிறது.

English summary
People watch TV shows because of corona fear On the one hand is the interest of knowing what is happening in the world by Corona ...
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X