• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கண்ணீர் விட்டு கதறி அழுத சீரியல் நாயகிகள்.. இப்போ வியர்வை வழிய வழிய என்ன பண்றாங்க பாருங்க!

|

சென்னை: சின்னத்திரை சீரியல்களில் நேரம் காலம் பார்க்காமல் நடித்து வந்த பல நடிகைகள் இப்போது லாக் டவுன் காலத்தில் நன்றாக ரெஸ்ட் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். பொழுது போகலையே என்று வருத்தப்படாமல் சமையல், ஒர்க் அவுட் என்று நேரத்தை கடத்தி வருகின்றனர் சீரியல் நடிகைகள். சிலரோ கவர்ச்சி ஆடைகளில் கலக்கலாக டிரஸ் போட்டு போட்டோ எடுத்து அதை இன்ஸ்டாகிராம் பக்கங்களில் போட்டு சித்திரை மாத கத்திரி வெயிலின் சூட்டையும் தாண்டி ரசிகர்கள் சூட்டை கிளப்பி வருகின்றனர்.

  Top Celebrities Quarantine | Lock Down Diaries

  கூட்டுக்குடும்பமாக சீரியல் எடுத்தாலும் சண்டை இல்லாத நாட்களே இல்லை. நாத்தனாரின் திருமணத்தை நிறுத்த பிளான் போடும் அண்ணி, கொழுந்தனாரை கொலை செய்த கூலிப்படை அமர்த்தும் அண்ணிகள், மருமகளின் கருவை கலைக்க திட்டமிடும் மாமியார் மாமனார் என பல சீரியல்களிலும் ஒரே வில்லத்தனம்தான் செய்து வந்தனர். ஹீரோயின்கள் மட்டுமல்லாமல் ஹீரோக்களும் சீரியல்களில் கண்ணீர் விட்டு கதறி சீரியல் பார்வையாளர்களை கலங்கடித்து வந்தனர்.

  சேட்டிலைட் சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்கள்தான் பலருக்கும் பொழுது போக்கு. காலை முதல் இரவு வரைக்கும் சீரியல் பார்த்து சீரியல் நடிகைகளின் சுக துக்கங்களை தங்களுக்கு வந்தது போலவே பாவித்து வாழ்ந்து வந்தனர். கொரோனா வைரஸ் பரவலால் கடந்த ஒரு மாதகாலமாக டிவி சீரியல் சூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதால் பழைய சீரியல்களையும், பழைய எபிசோடுகளையும் ஒளிபரப்பி வருகின்றனர்.

  காயத்ரி ஜெயராமுக்கு நிறைய வேலை

  காயத்ரி ஜெயராமுக்கு நிறைய வேலை

  ஆனந்தி வாழ்க்கை இப்படியே போயிருமா? செம்பருத்தியும் பெரியய்யாவும் மறுபடியும் எப்போ வீட்டிற்கு வருவாங்க என்று யோசித்து கொண்டிருக்கிறார்கள். நிறைய பேருக்கு டிவி சீரியல் பார்க்காமல் இருப்பது பெரிய ரிலீப் ஆக இருக்கிறது. அழகு சீரியலில் வக்கீல் சகுந்தலாதேவியாக நடித்தி அசத்தும் காயத்ரி ஜெயராம் இப்போது லாக் டவுன் காலத்தில் வித விதமாக சமைத்து பொழுது போக்கி வருகிறார். உடம்பை கட்டுக்கோப்பாக வைக்க உடற்பயிற்சி செய்து அதையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். மீண்டும் சீரியல் ஒளிபரப்பாகும் வரைக்கும் தன்னை ரசிகர்கள் மறந்து விடக்கூடாது என்பதற்காகவே இந்த சுய விளம்பரம் மக்களே.

  சஹானாவின் ஒர்க் அவுட்

  சஹானாவின் ஒர்க் அவுட்

  அழகு சீரியலில் சுட்டிப்பெண்ணாக கடைக்குட்டியாக நடித்திருப்பவர் சஹானா. கடந்த பல எபிசோடுகளாக அவரது முகத்தையே பார்க்க முடியவில்லை ஆனாலும் சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவ் ஆகவே இருக்கிறார். லாக்டவுன் காலத்தில் விதம் விதமான டிரஸ்களில் எடுத்த போட்டோக்களையும், ஒர்க் அவுட் போட்டோக்களையும் போட்டு அசத்தி வருகிறார். எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்று சொல்லாமல் சொல்கிறார் சஹானா.

  பாதி உடம்பு தெரியுமே சாக்ஷி

  பாதி உடம்பு தெரியுமே சாக்ஷி

  பிக் பாஸ் பிரபலம் சாக்ஷி அகர்வால். இவரது ஒரே பொழுது போக்கு கவர்ச்சி ஆடைகளை அணிந்து போட்டோ எடுத்து அதை தங்களின் இன்ஸ்டா பக்கங்களில் பதிவிடுவதுதான். இப்போது காலமாக இருப்பதால் பச்சைக்கிளியாக புடவை அணிந்து நிறைய கவர்ச்சி போஸ் கொடுத்து பதிவிட்டு ரசிகர்களை அக்னி நட்சத்திர வெயில் காலத்திலும் அதிகமாக சூடேற்றி வருகிறார்.

  கவர்ச்சியில் கலக்கும் ரம்யா

  கவர்ச்சியில் கலக்கும் ரம்யா

  விஜய் டிவியில் தொகுப்பாளினி, சினிமாவின் நடிகை சினிமா நிகழ்ச்சி தொகுப்பாளின் என பன்முகம் கொண்டவர் ரம்யா சுப்ரமணியன் பவர் லிப்டிங்

  போட்டியில் கலந்து கொண்டு இரட்டைத் தங்கப் பதக்கம் வாங்கியுள்ளார். உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய வாழ்வு போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ரம்யா, அடிக்கடி வீடியோ எடுத்து தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். லாக் டவுன் காலத்தில்

  விதம் விதமாக உடை அணிந்து இப்போது இன்ஸ்டாவில் பதிவிடுவதை பொழுது போக்காக வைத்துக்கொண்டிருக்கிறார்.

  சின்னவர் காணோமே

  சின்னவர் காணோமே

  கண்மணி சீரியல் சௌந்தர்யாவிற்கு சின்னவர்தான் உயிர். சொந்தப்பெயர் லிஷா.சீரியல் சூட்டிங் இல்லாத இந்த நாட்களில் விதம் விதமாக போட்டோ எடுத்து தனது இன்ஸ்டா கிராமம் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். புடவையிலும் மாடர்ன் உடைகளிலும் விதமாக படம் எடுத்து போட்டிருப்பதை பார்த்தால் சின்னவர் உடன் எப்போது ஜோடி சேரலாம் என்று எதிர்பார்த்து காத்திருப்பதை போல தோன்றுகிறதா ரசிகர்களே. நேரம் காலம் பார்க்காமல் நடித்த ரசிகர்களுக்கு இந்த லாக் டவுன் காலம் சரியான ஒய்வை கொடுத்துள்ளது சீரியல் ரசிகர்களுக்குத்தான் அந்த சீரியலின் கதை தொடர்ந்து புரியுமா என்பது தெரியலையே.

  பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  All Tamil TV serial actresses are doing workout using the lock down in their homes.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more