For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சின்னத்திரை ரசிகர்களுக்கு இனி கொண்டாட்டம் தான்.. மறுபடியும் ஆரம்பிச்சாச்சாம்!

Google Oneindia Tamil News

சென்னை: மீண்டும் சின்னத்திரை களை கட்டப் போகிறது. ஆமாங்க, நிறுத்தி வச்சிருந்த ஷூட்டிங்குகளை ஆரம்பிச்சிருக்காங்களாம்.

இந்த கொரோனா வந்தாலும் வந்தது, மக்களுடைய வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப்போட்டு எவ்வளவு பிசி லைஃப்ல இருந்தவர்களும் ஆற அமர வீட்டுக்குள்ள உட்கார வைத்துவிட்டது இந்த நோய்.

நம்மளை விட்டு இன்னும் போற மாதிரியும் தெரியல. இருந்தாலும் மக்களும் இந்த நோயோடு வாழப் பழகி விட்டார்கள். அந்த அளவுக்கு நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாகி விட்டது இந்த கொரோனா.

ஏன் ஸ்ருதி.. கடற்கரையில் இப்படி போஸ் கொடுத்தா கடலே ஷாக் ஆய்டாது..!ஏன் ஸ்ருதி.. கடற்கரையில் இப்படி போஸ் கொடுத்தா கடலே ஷாக் ஆய்டாது..!

கொரோனா பிரேக்

கொரோனா பிரேக்

இந்த நோய் ஒருபுறம்தவிக்க வைக்குதுன்னா வேலை வெட்டி இல்லாம வருமானமின்றி மக்களும் தவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கு சினிமாக்காரர்களும் விதிவிலக்கல்ல. அவங்களையும் ஆட்டிப் பார்த்து விட்டது இந்த கொரோனா. சின்னத்திரையும் இதிலிருந்து தப்பவில்லை. ஷூட்டிங் எல்லாம் நின்று போனதால், நடிகர்கள் குறிப்பாக இதை நம்பியுள்ளோர் பெரும் கஷ்டப்பட்டு விட்டனர். இப்போது அதற்கு விடிவு பிறந்துள்ளது.

ஹேப்பி நியூஸ்

ஹேப்பி நியூஸ்

எல்லாருக்கும் ஒரு மகிழ்ச்சியான நிகழ்ச்சி நடந்திருக்கு, ஆமாங்க. 107 நாள்களுக்குப் பிறகு சின்னத்திரை சினிமாக்கள் சூட்டிங் நடத்த அனுமதி பெற்று இன்னைக்கு அஞ்சு சீரியல்களுக்கான ஷூட்டிங் நடந்துக்கிட்டு இருக்கு. மக்கள் வீட்டில் இருக்கிற ஒவ்வொரு நாளும் பொழுது போக்குவதற்கு வழி இல்லாம தவித்துக் கொண்டு இருந்தாங்க. சீரியலை பார்த்து பழகிப்போன மக்கள்தான் இதற்கு ரொம்பவும் கஷ்டப்பட்டுட்டாங்க.

தொடங்கியது ஷூட்டிங்

தொடங்கியது ஷூட்டிங்

எல்லோருக்கும் ஏதாவது ஒரு வகையில் சீரியல்கள் மகிழ்ச்சி தந்து கொண்டிருந்தன. ஆனால் சீரியல் ஷூட்டிங்குகள் நின்று போயிருந்ததால், வருமானமின்றி சின்னத்திரையில் இருப்பவர்களும் சின்னத்திரையை நம்பி இருப்பவர்களும் பெரும் சிரமத்திற்குள்ளானார்கள். வேறு வழியில்லாமல் சின்ன சின்ன வேலைகளை செய்து குடும்பங்களை நடத்திக் கொண்டிருந்தார்கள். இவர்களின் நலன் கருதி அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தான் தற்போது ஷூட்டிங் நடத்த அனுமதி கிடைத்திருக்கு.

சமூக இடைவெளியுடன்

சமூக இடைவெளியுடன்

அரசின் அறிவுரையின்படி சமூக இடைவெளியை கடைப்பிடித்து நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தலா 60 பேருடன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. அரசு அறிவித்த 11 அம்ச நடவடிக்கைகளை மேற்கொண்டு முக கவசம், சாணிடைசர் பாதுகாப்பு பொருள்கள் எல்லாம் வைத்துக் கொண்டுதான் படப்பிடிப்பு நடக்கிறது. படப்பிடிப்பில் பங்கேற்பவர்களுக்கு பாதுகாப்பாக மூன்று வேளையும் பார்சல் உணவுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன.

சோதனை

சோதனை

படப்பிடிப்புக்கு வரும் அனைவருக்குமே தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதித்த பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள். சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த கண்மணி தொடரின் சூட்டிங் டி.ஆர் கார்டனில் நடைபெற்று வருகிறது. கண்மணி சீரியலில் சஞ்சீவ் கதாநாயகனாகவும் லீலா எக்லேர் கதாநாயகியாகவும், பூர்ணிமா பாக்கியராஜ் குணச்சித்திர வேடத்திலும் நடித்து கொண்டிருக்கிறார்கள்.

மொத்தம் 3

மொத்தம் 3

கண்மணி சீரியல் சதாசிவம் பெருமாள் இயக்கி மூவி மேக்கர்ஸ் தயாரித்து கடந்த ஆண்டு அக்டோபர் 22 முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் மட்டுமல்லாமல் ரோஜா மற்றும் பாண்டியன்ஸ்டோர்ஸ் ஆகியவற்றின் படப்பிடிப்பும் ஆரம்பமாகியுள்ளதாம். இன்று வரையிலும் அது வெற்றிகரமாக போய்க்கொண்டிருந்த நேரத்தில் தான் இந்த கொரோனா வந்து சேர்ந்தது. அடுத்து வந்த லாக்டவுன்களால் சீரியல் நின்று போனது. இப்போது மீண்டும் ஷூட்டிங் தொடங்கியுள்ளதால் சீரியல் பிரியர்கள் குஷியாகியுள்ளனர். தற்போது அவர்களின் மனக்கவலை தீர்க்க மறுபடியும் எல்லாரும் வராங்க.. டிவியோடு ரெடியாகுங்க மக்கா!

English summary
3 TV serial shootings have begun with strict rules.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X