• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தக்குணூண்டு வயிறு தெரிய பாவாடை ஜாக்கெட் போட்டுக்கிட்டு.. கேட்டா டிரெண்டுங்கறாய்ங்க!

|

சென்னை: டிவி சீரியல்களில் மாடர்ன் உடைகள் போடும் நடிகைகள் தக்குணூண்டு வயிறு தெரிய பாவாடையும், ஜாக்கெட்டும் அணிந்துக்கொண்டு துப்பட்டாவை ஒன்சைடாக போட்டுக்கொள்கிறார்கள்.

கேட்டால் இது டிரெண்டுன்னு சொல்றாய்ங்க.. அந்த டிரெண்டை நம்ம கல்லூரி பெண்கள் செய்தால், என்னங்க ஆகறது! கொஞ்சமாவது சமூக அக்கறை வேணாமா?

சினிமாவில் நடிகைகள் போடும் உடைகளை யாரும் உடுத்த நினைப்பதில்லை. காரணம் இயல்புக்கு மாறானது அது. சினிமா வேறு, டிவி சீரியல் வேறு. இது உங்களுக்கு புரிகிறதா இல்லையா?

ஜீன்ஸ் டி ஷர்ட்

ஜீன்ஸ் டி ஷர்ட்

சில வருடங்களுக்கு முன்பு இதே டிவி சீரியல்களில்தான் ஜீன்ஸ் போட்டு, தக்குணூண்டு வயிறு தெரியமாதிரி பெண்கள் உடை உடுத்தறது பேஷன் என்று கூறப்பட்டது. ஜீன்ஸ் அணியும் கல்லூரி பெண்கள் எல்லாரும் தக்குணூண்டு வயிறு தெரிய டி ஷர்ட் போட்டுக்கொண்டு அலைந்தார்கள், அந்த இம்புட்டுக்காண்டு வயித்தை பார்க்க பசங்க அலைஞ்ச அலைச்சல் இருக்குதே.. அடேங்கப்பா.. அமெரிக்காவுக்கு கேள்வி கேட்காம விசா தரேன் கியூவில் நில்லுங்கன்னு சொன்னா கூட அவ்ளோ கால் கடுக்க நின்னு இருக்க மாட்டானுங்க.. அப்படி காலேஜ் வாசலில் தவம் கிடந்தாங்க.

கள்ளக்காதல்.. பில்லி சூனியம் வைக்கிறது.. பேய் பிடிக்கிறது.. இதைத் தவிர வேற எதுவும் தெரியாதா!

இப்பத்திய டிரெண்ட்

இப்பத்திய டிரெண்ட்

இப்பத்திய டிரெண்டுன்னு சொல்லி, பாவாடை ஜாக்கெட் மட்டும் போட்டுக்காறாய்ங்க. அதோட ஒரு பக்கம் வேணும்னா துப்பட்டாவை போட்டுக்கறாய்ங்க. அதுவும் வேணாம்னா கடாசிட்டு பாவாடை ஜாக்கெட்டோட சீரியல் காட்சிகளில் கேஷுவலா வந்து நடிக்கறாய்ங்க. சில நடிகைகள் தாராளமா வயித்தை காண்பிச்சுடறாங்க. இதுல கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னன்னா டிவி ஸ்டார்கள் போடும் உடைகள் உடனுக்குடன் மார்க்கெட்டுக்கும் வந்துவிடுகின்றன.

சினிமா டிவி சீரியல்

சினிமா டிவி சீரியல்

சினிமா வேறு, டிவி சீரியல் வேறு என்பதை நமது மக்கள் நன்றாகவே புரிந்துக்கொண்டு இருக்கின்றனர். சினிமா நட்சத்திரங்கள் படு கவர்ச்சி, கிளாமர் என்று எப்படி வேண்டுமானாலும் உடுத்துவார்கள். 96 திரிஷா மாதிரி உடைகளை பின்பற்றலாம். விண்ணைத்தாண்டி வருவாயா திரிஷா உடுத்திய புடவை மாதிரி உடைகளை பின்பற்றலாம். ஆனால், முதுகுப் பகுதி இருக்கு.. ஆனா இல்லைன்ற ரகத்தில் ஜாக்கெட் போட்டு நடிக்கறாங்களே அதை எல்லாம் பின்பற்றக் கூடாது என்று தெளிவாக இருக்கிறார்கள்.

கீறல் போல வயிறு

கீறல் போல வயிறு

கீறல் போல வயிறு தெரியும் உடைகளை உடுத்த நமது பெண்கள் தயங்குவதில்லை. அந்த பாணியில், இந்தப் பாவாடை ஜாக்கெட்.. தக்குணூண்டு வயிறு தெரியற மாதிரி அணிஞ்சுக்கறதுன்னு இறங்கிட்டாங்கன்னா குஷி பட இடுப்பு கதை மாதிரிதான் ஆகிவிடும் பார்த்துக்கோங்க. அதுவும் நம்ம வீட்டு பெண்கள் இருக்கறாய்ங்களே 10 லிருந்து 12 வயது பெண் குழந்தைகளுக்கு இது போல் போட்டால் தப்பில்லை என்று தாங்களே இந்த மாதிரி உடைகளை குழந்தைகளுக்கு வாங்கித் தந்து விடுவார்கள்.

இதுக்கு மேல ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை. எதையும் அளவோட சொல்லி விட்டுடணும். அந்த எல்லைக்கோட்டில் இப்போது நிறுத்திக்கறோம்.

 
 
 
English summary
Modern TV actresses wearing tuxedo belly skirt and jacket put on a dupatta. If our college girls do that trend, what would you say! Need some social care? No one thinks of dresses that actresses wear in cinema. Cinema is different, TV serial is different. Do you understand this or not?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X