For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கார்த்தியுடன் உழவர் திருநாள்..பொங்கலோ பொங்கல்!

Google Oneindia Tamil News

சென்னை: விஜய் டிவி பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக நடிகர் கார்த்தியுடன் உழவர் திருநாள் என்று கொண்டாடி ஒளிபரப்பியது.

டிவி நட்சத்திரங்களுடன் நடிகர் கார்த்தி பங்கு பெற்ற இந்த நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்கினார்.

விவசாயி கடன், குளிர் தேசத்தில் விளையும் பொருட்கள் பற்றிய அறிமுகம்.. அதில் விவசாயிகள் படும் கஷ்டம்.. நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக இருந்தது.

டிராக்டர் பொம்மை

டிராக்டர் பொம்மை

விஜய் டிவி சீரியல் நட்சத்திரங்கள் கார்த்தி சொன்னது போல டிராக்டர் ஓட்டினார்கள், சோளக் கொல்லை பொம்மையை உடைத்து காண்பித்தார்கள். பிறகு கார்த்தி மூணு விளையாட்டுக்களை சொல்லிவிட்டு சென்றார். சீரியல் நட்சத்திரங்கள் அந்த விளையாட்டுக்களை விளையாடினார்கள்

விவசாயி கடன்

விவசாயி கடன்

ஒரு கிராமத்துக்கு சென்று கடன்பட்ட விவசாயி தற்கொலை செய்துகொண்டு விட, அவரது மனைவியை சந்திக்க சொன்னார் கார்த்தி அவரை சென்று சந்தித்து விவசாயிகள் படும் துயரத்தை விளக்கினார்கள். இந்த பொங்கல் தினத்தில் துயரமாக இருந்தாலும், தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியமும் இருந்தது.

கேரட் விளைச்சல்

கேரட் விளைச்சல்

கேரட் விவசாயம் என்பது குளிர் பிரதேசத்தில் எத்தனை கடுமையானது. அதற்கு விலை நிர்ணயிப்பது அந்த விவசாயிகளால் முடியவில்லை. இரவோடு இரவாக பணியில் உடல் விரைக்க அறுவடை செய்தும், கஷ்டப்பட்டதுக்கு பயன் இல்லாமல் போகிறது என்கிற இவர்களின் வருத்தத்தை பதிவு செய்தார்கள்.

இளவட்ட கல்

இளவட்ட கல்

இளவட்ட கல் தூக்க வேண்டும் என்றும் கார்த்தி சொன்னார். டிவி நட்சத்திரங்களில் ஆண்களை இளவட்ட கல் தூக்க வைத்து வேடிக்கை காண்பித்தார்கள். இப்படி கார்த்தியுடன் உழவர் திருநாள் நிகழ்ச்சி பொறுப்பானதாக இருந்தது. கோபிநாத் நிகழ்ச்சியை நன்றாகவே தொகுத்து வழங்கி இருந்தார்.

English summary
Vijay TV Pongal has aired a special event with actor Karthi to celebrate 'Uzhavar Thirunal'. The show was co-hosted by actor Karthi with TV stars.The highlight of the event was the introduction of the farmer's credit and the produce of the cold land.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X