• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மணி சார் பத்தின ரகசியம்... உடைத்தார் நடிகர் வேணு அரவிந்த்

|

சென்னை: சின்னத்திரை கலைமாமணி விருது பெற்று இருக்கும் நல்ல கலைஞன் வேணு அரவிந்த். இவர் தன்னுடைய சுவையான அனுபவங்களை சன் டிவியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.

மனிதர் நல்ல உயரம், பெர்சனாலிட்டி என்று பலரையும் கவர்ந்தவர். இன்கம் டாக்ஸ் ஆஃபீசர் பிள்ளை என்பதால், சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் எல்லாம் அப்பாவுக்கு ஃபிரண்ட்.

அப்பப்ப எந்த சினிமா ஓடுகிறதோ, அதில் எந்த காட்சி எனக்கு ரொம்ப பிடிக்குமோ அதை பார்க்க அடிக்கடி தியேட்டருக்கு போயிருவேன் என்று சொல்கிறார்.

இயக்குநர் சிகரம்

இயக்குநர் சிகரம்

இயக்குநர் சிகரம் கே.பி.சார் பட்டறையில் பட்டைத் தீட்டப்பட்டவன். அவரின் செல்லப் பிள்ளையாக வளர்ந்தவன் நான் என்று சொல்லலாம். அவரின் ரகுவம்சம் தினம் தோறும் ஒளிபரப்பான முதல் தொடர். அதில் நான் நடித்தேன் என்பதில் எனக்கு பெருமை. அவர் ஒரு லெஜண்ட்.. அவர் நல்லா நடிச்சேன்னு கைத் தட்டி எல்லாம் பாராட்ட மாட்டார்.நல்லா நடிச்சு இருந்தா குட் அப்படீன்னு ஒரு வார்த்தை சொல்வார்.அதை பிடிச்சு அப்படியே மனசுல நிறுத்தி வச்சுக்கணும்.

பொண்டாட்டினாலே இப்படித்தாங்க.. ஓடவும் முடியாது.. ஒன்னும் பண்ணவும் முடியாது!

வரும்போது கண்ணீர்

வரும்போது கண்ணீர்

தோ பாரு..அத்தை பேசுவாங்க..இவன் அதுக்கு பதில் சொல்லுவான்.அதுக்குப் பிறகு.கேமிரா உன் கிட்டே வரும், அந்த நேரம் பார்த்து உன் கண்ணில் இருந்து டபக்குன்னு கண்ணீர் சொட்டணும்னு சொன்னார்.கேமிராவும் என்கிட்டே வந்துருச்சு... அஞ்சு நிமிஷம் ஆச்சு வரலை. அவர் டென்ஷனில் பல்லைக் கடிக்கறார், கையை பிசையறார்..ஒரு வழியா ரெண்டு சொட்டு கண்ணீர் டபக்குன்னு வந்துச்சு. இதை முதலிலேயே விடறதுக்கு என்னடான்னு கேட்டார். வந்தாத்தானே சார்..நான் என்ன பண்றதுன்னு சொல்லி சிரிச்சேன்.

பகல் நிலவு

பகல் நிலவு

மணிரத்னம் சார் பகல் நிலவு படத்தில் நடிச்சபோது நல்ல அனுபவம். அப்போ சத்யராஜ் எனக்கு ஒரு சீக்ரெட் சொன்னார். மணி சாரை இம்பரஸ் பண்றது ஒரு கலை. அதை உனக்கு கத்துத் தரேன்னு சொல்லிட்டு, ஒண்ணும் இல்லை..அவர் சீன் சொல்லுவார், அப்போதே நீ அவர்கிட்டே நடிச்சபடியே கதை கேட்க ஆரம்பிச்சுட்டா போதும்னு ஜாலியா சிரிச்சுகிட்டே அந்த ட்ரிக் சொல்லிக் குடுத்தார்.

அடுத்து அலைபாயுதே

அடுத்து அலைபாயுதே

அடுத்து அலைபாயுதே படத்தில் ஒரு காட்சி, மாதவன், அரவிந்தசாமி கூட காட்சி.ஒரு சீன் எடுக்க இன்னிக்கு வேணாம், லைட்டிங் சூழ்நிலை சரியில்லைன்னு சொல்லி,பிசி சாரும், மணி சாரும் முடிவு பண்ணினாங்க.பெரிய சீன் ஒண்ணும் கியைடாது, இதுக்கு கூட அவங்க மெனக்கட்டது எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது.

லெஜண்ட் மேம்

லெஜண்ட் மேம்

ராதிகா மேம் கூட கிட்டத்தட்ட 10 வருஷம் மூணு சீரியலில் டிராவல் பண்ணி இருக்கேன். ரொம்ப ஜாலியா கலாட்டா பண்ணிகிட்டே இருப்பாங்க .இன்னிக்கு யாருடா மாட்ட போறோம்னு நாங்க தள்ளி தள்ளி போவோம். இருந்தாலும் மாட்டிக்குவோம். அவங்க ஸ்பாட்லேயே இல்லலேன்னாலும் இங்கே என்ன நடக்குதுன்னு அவங்களுக்கு எல்லாமே தெரியும்.லெஜெண்ட் அவங்க.நல்ல நிர்வாகி.

எம்ஜிஆர் ஆகணும்

எம்ஜிஆர் ஆகணும்

எனக்கு சின்ன வயசில் படம் பார்த்து பார்த்து எனக்கு எம்ஜிஆர் ஆகணும்னு ஆசை வந்திருச்சு. என்னவா ஆகப்போறேன்னு கேட்டப்போ, நான் எம்ஜிஆர் ஆகணும்னு சொல்லுவேன். என் நோட் புக்கில் பார்த்தால் எம்ஜிஆர்னு என் பேரை எழுதி வச்சு இருப்பேன்.

கமல்ஹாசன் சார்

கமல்ஹாசன் சார்

எனக்கு வயசு வந்த பிறகு கமல் சார் ரொம்ப பிடிக்கும்.அதனாலேயே என்னவோ தெரியலை கமல் சார் மேனரிசம் எனக்குள்ளே இருக்கும்.அதே போல மணி சார் முதலில் தனது படத்துக்கு கேமிரா மேனா வச்சுக்கிட்டவர் பாலு மகேந்திரா சார்.. அவரோட மேனரிசம் மணி சார் கிட்டே இருக்கும். கே.பி சார்கிட்ட ஸ்ரீதர் சார் மேனரிசம் இருக்கும். நான் ஒரு நாள் கமல் சார்கிட்ட கேட்டேன்..இப்படி எல்லாருக்குமே ஒருத்தரோட மேனரிசம் இருக்கே.. உங்களுக்கு அப்படி யாரு சார்னு கேட்டேன். நான் பார்த்த ஒரே சூரியன் சிவாஜி சார்தான். அவரோட மேனரிசம்தான் இருக்கும்னு சொன்னார்.

என்னை பிடிக்குமாம்

என்னை பிடிக்குமாம்

கலைஞர் சார் எப்பவுமே அப்டேட்டில் இருப்பவர்.அப்படிப்பட்டவர் டிவி சீரியலில் என்னைப் பார்த்துட்டு என்னை ரொம்ப பிடிக்கும்னு சொல்வாராம்., இதை சன் டிவியின் கலாநிதி மாறன் என்கிட்டே பார்க்கும்போது எல்லாம் சொல்லுவார்.எனக்கு ரொம்ப பெருமை இது. பெரும்பாலும் வில்லன் ஹீரோவாத்தான் நடிச்சு இருக்கேன். மணி சார் சீக்ரெட் சொன்னது, அவருக்குள் இருந்த பாலுமகேந்திராவின் மேனரிசம்தான். இதைத்தான் ரகசியம்னு சொன்னேன்னு சொல்லி, என்னோட ரகசியம் என்னென்னா எனக்கு இன்னும் ரெண்டாவது கல்யாணம் நடக்கலைன்னு சொல்லி சிரிக்க வச்சு சிரிச்சார்.

டெலிவிஷன் நடிகர்களில் கலைமாமணி விருதில் முதல் பெயர் என்னுடையதாக இருந்ததில் எனக்கு ரொம்ப பெருமை, சந்தோசம் என்கிறார் வேணு அரவிந்த்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Venu Aravind is an award winning artist. He shared his delicious experiences on Sun TV's Hello Tamil program Said.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more