For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாமா மச்சான் உறவு ரிதமிக்காத்தானே போகுது... எதுக்கு கவலை?.. செம டிபேட்!

Google Oneindia Tamil News

சென்னை: மாமா மச்சான்கள் பேசும் போது இவர்களின் உறவுகள் எல்லா உறவுகள் மாதிரியும் ரிதமிக்காகத்தான் போகுது.. எதற்கு வீணாக கவலைப் படுகிறீர்கள் என்று கேட்டு இருக்கார் கோபிநாத்.

விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் நேற்றைய அதாவது கடந்த ஞாயிற்று கிழமை நிகழ்ச்சியில் அக்காவைத் திருமணம் செய்து கொண்டவர்களான மாமாவுக்கு மச்சானிடம் எப்படிப்பட்ட உறவு நீடிக்கிறது என்பது பற்றிய விவாதம் நடந்தது.

இந்த விவாதத்தில் அக்கா, மாமா, மச்சான்கள் எல்லாரும் கலந்துகொண்டு பேசியது பார்க்கவும் நன்றாக இருந்தது பல புது விஷயங்களைத் தெரிந்துக் கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.

வாத்து மாமா

வாத்து மாமா

என் ஹஸ்பண்டுக்கு வாத்து கறி ரொம்ப பிடிக்கும் சார். அவங்க வீட்டுக்கு போனபோது வாத்து, மீன், ஆடுன்னு பல விதத்தில செய்து விருந்து வச்சாங்க. சாப்பிடப் போகும் நேரத்தில் வெளியில போயிட்டு வரேன்னு போனார் சார். பசி தாங்க முடியலை நாங்க எல்லாரும் சாப்பிட்டோம். என் தம்பி மட்டும் இவர் வரும்வரை காத்திருந்து அவர் கூடத்தான் சாப்பிட்டான்னு ஒரு அக்கா சொன்னார்.

ஒண்ணா நின்னாங்க

ஒண்ணா நின்னாங்க

இவரும் என் தம்பியும் அவ்வளவா பேசிக்க மாட்டாங்க... சமீபத்தில் என் பொண்ணுக்கு கல்யாணம் நடந்துச்சு. அப்போ என் கணவர் கூட சப்போர்ட்டா தம்பி எல்லா விஷயத்திலும் நின்னது எனக்கு ரொம்ப பெருமையா இருந்துச்சு சார்.. எங்களுக்கு ஒண்ணுன்னா அவன் இருக்கான்.. அவனுக்கு ஒண்ணுன்னா சப்போர்டுக்கு நாங்க இருக்கோம்னு அப்போ தோணுச்சு சார்னு இன்னொரு அக்கா பெருமிதத்துடன் சொன்னாங்க.

போட்டோ இல்லை

போட்டோ இல்லை

கல்யாணத்துல என் கணவர் கூட என் தம்பி நிக்கற போட்டோ ஒண்ணு தேடித் பார்த்தாலும் இல்லை சார். அது இன்னிக்கு வரைக்கும் எனக்கு வருத்தம்னு ஒரு பெண் சொல்ல, உடனே இருவரையும் விதம் விதமாக நிக்க வச்சு போட்டோ எடுக்க வைத்தார் கோபிநாத். அக்கா முகத்தில் தெரிந்த மலர்ச்சி இருக்கே.. லவ்லி!

உறவுகள் ரிதமிக்

உறவுகள் ரிதமிக்

கோபிநாத் பேசுகையில், ஒரு வயசு வந்த பிறகு அப்பாவுக்கும் பிள்ளைக்கும் இடையில் கூட இடைவெளி வரும். அதே உறவில் பிள்ளைக்கு நாற்பது வயதாகும்போது அப்பாவும், பிள்ளையும் நெருக்கமாகி விடுவார்கள். இது போல அதிகம் பார்த்து பார்த்து கையாள வேண்டிய விஷயமும் உறவுகளில் இருக்கிறது. அதே போல ரிதமிக்காகத்தான் மாமன் மச்சான் உறவும் தமிழ் குடும்பங்களில் சென்று கொண்டு இருக்கிறது.

இதில் ஏன் வீணாக இன்னும் பேச வேண்டும், நெருக்கமாக வேண்டும் என்று நீங்கள் அவர்கள் உறவுக்கு இடையில் உங்கள் விருப்பு வெறுப்புக்களைத் திணிக்கிறீர்கள் என்று கேட்டு முடித்தார்.

English summary
Speaking of Gopinath, there is a gap between father and child even after the age of one. When the child is forty years old, the father and child become closer. Leave. Relationships are also something to look out for and handle. It is for the sake of rhythm that Maman Machan's relationship with the Tamil families is going on.You ended up asking why you should talk more in vain and get closer and you are putting your preferences and hatred between their relationship.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X