ரெடியா மக்களே...பாலிவுட் ஸ்டார்ஸ் உங்களோட சேர்ந்து படம் பார்க்க போறாங்க...!
சென்னை: டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஆப் டவுன்லோட் செய்து, பிரிமியம் சப்ஸ்க்ரைப் செய்து வைத்துக் கொண்டால்... பாலிவுட் ஸ்டர்ஸுடன் சேர்ந்து நீங்கள் படம் பார்க்கலாம்.
ஏப்ரல் 2 ஆம் தேதி டிஸ்னி தயாரிப்பு படமான லைன்கிங்.. உங்கள் வீட்டிற்ககே வருகிறது. தமிழ், ஹிந்தி என்று இந்தியாவின் அனைத்து மாநில மொழிகளிலும் இந்த புத்தம்புது படத்தை பார்க்கலாம்.
வீட்டில் இருந்தபடியே இந்த படத்தை கண்டு களிக்க நீங்க செய்ய வேண்டியது இதுதான்...300 ரூபாய் கட்டணம் செலுத்தி ஆப் சப்ஸ்க்ரைப் செய்துக்கொள்ள வேண்டியதுதான்.
கேத்ரினா டைகர் ஷெராஃப்
ஜாக்கி ஷெராஃப் மகன் டைகர் ஷெராஃப் பாலிவுட்டின் இளம் சூப்பர் ஹீரோ. பெண்களின் கனவு ஹீரோ...இவர் உங்களுடன் சேர்ந்து லைன் கிங் பார்க்க போகிறார். கேத்ரினா கைஃப் வீட்டில் இருந்தபடியே படம் பார்க்க...அவருடன் நீங்களும் சேர்ந்து வீட்டில் இருந்தபடியே லைன்கிங் பார்க்கக் போகிறீர்கள்.
|
கமெண்ட்ஸ் பாக்ஸ்
உங்களுக்கான கமெண்ட் பாக்ஸ் எப்போதும் போல இருக்கும். அதில் நீங்கள் லைவாக கேத்ரினாவுடன் பேசலாம். லைன்கிங் படத்தின் காட்சி சுவாரஸ்யங்களை அவர்களுடன் பகிர்ந்துக்க கொள்ளலாம்... அவர்கள் உங்களுக்கு என்ன பதில் தருகிறார்கள் என்று இந்த நாடே அறியும்படி அருமையான வாய்ப்பாக இது இருக்கும்.
லைன்கிங் படம்
2019 ஜூலை மாதம் 19ம் தேதி ஆங்கிலத்தில் வெளிவந்த இந்த லைன்கிங் படம் இப்போது கிட்டத்தட்ட இந்திய மாநில மொழிகள் அனைத்திலும் டப் செய்யப்பட்டு, ஹாட்ஸ்டார் ஆப்பில் ஒளிப்பரப்பாக இருக்கிறது. இந்த நேரலை ஒளிபரப்பை உலகமே கண்டு களிக்க உள்ள நிலையில் நீங்களும் கண்டுகளிக்க ஒரு அறிய வாய்ப்பு.
|
லாக்டவுன் டைம்
கோவிட் 19 லாக்டவுன் நேரத்தில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் மக்களை மகிழ்விக்கும் விதமாக நேரலையில் படம் பார்க்கும் இந்த வாய்ப்பை அளிக்கிறது. ஒரு ஜாலி பொழுதுபோக்குக்காக என்று இதை எடுத்துக்கொண்டு லைன்கிங் படத்தை பார்த்து மகிழலாம்.