பிரியங்காவிற்கு விஜய் அவர்ட்ஸ் விருது... என்ன நெட்டிசன் இப்படி கடுப்பாகுறாங்க
சென்னை: பிரியங்கா தேஷ்பாண்டேவிற்கு விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் சிறந்த தொகுப்பாளினிக்கான விருது கொடுக்கப்பட்டுள்ளதற்கு நெட்டிசன்கள் எதிர்ப்பான கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு பிரியங்கா பெரிதாக நிகழ்ச்சி தொகுப்பு செய்யாத போதிலும் அவருக்கு சிறந்த தொகுப்பாளர் விருது வழங்கப்பட்டு இருக்கிறது.
விஜய் டிவியில் சில தினங்களுக்கு முன்பு டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சி நடந்து முடிந்தது. இதில் விஜய் டிவி ஃபிக்ஷன், நான் ஃபிக்ஷன் பிரிவில் பல்வேறு விருதுகள் வழங்கி , கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டன.
இந்த விழா 13 ஆண்டுகளாக நடந்து வருகிறது. கலைத்துறையில் சாதித்த சிறந்த நடிகர்கள் , நடிகைகள், இசையமைப்பாளர்கள் என்று பல துறைகளில் விருதுகள் வழங்கப்பட்டு சினிமா பல கலைஞர்களை கெளரவித்து வருகிறது.

விஜய் டிவி விருது நிகழ்ச்சி
சீரியல் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், என பலரும் விருதுகளை பெற்றனர். இந்த நிகழ்ச்சி வருடந்தோறும் விஜய் டிவியில் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வருடத்திற்கான விருது நிகழ்ச்சியில் சிறந்த தொகுப்பாளினிக்காக கொடுக்கப்பட்ட விருதுதான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரியங்கா தேஷ்பாண்டே
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி, சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு,ஸ்டார்ட் மியூசிக் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுப்பாளினியாக தொகுத்து வழங்கி இருக்கிறார் பிரியங்கா. அதோடு கலக்கபோவது யாரு வழங்கி நிகழ்ச்சியில் இவர் நடுவராகவும் பங்கு பெற்று இருக்கிறார். சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ள ப்ரியங்காவிற்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா மிகத் திறமையாக விளையாடி வந்தார்.

பிக்பாஸ் ரன்னர்
பிரியங்கா பிக் பாஸில் இருந்த போது அவர் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சிகளை மணிமேகலை, அர்ச்சனா, மைனா என்று பலர் ஏற்று நடத்தி வந்தனர். பல பிரச்சனைகளில் பிரியங்கா சிக்கி இருந்தாலும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார். பல முறை எவிக்சனில் பிரியங்கா வந்து இருந்தாலும் மக்கள் அவரை பிரியங்கா பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரியங்கா டைட்டில் வின்னர் ஆகவில்லை நிகழ்ச்சியில் ரன்னர் அதாவது இரண்டாம் இடத்தை பிடித்தார்.

மனம் கவர்ந்த போட்டியாளர்
இந்த நிகழ்ச்சியில் அதிகமான ரசிகர்கள் பெற்றதும் பிரியங்கா தான், நிறைய நெகடிவ் விமர்சனங்களை பெற்றதும் பிரியங்கா தான். பிக் பாஸில் இவர் அடித்த லூட்டிகள் அதிக பேரால் ரசிக்கப்பட்டாலும் நரியங்கா, சகுனி, என பிரியங்காவை வறுத்தெடுத்த ரசிகர்களும் உண்டு. இதை எல்லாம் கடந்து தான் பிக் பாஸ் 5 சீசனில் இரண்டாம் இடத்தை பிடித்து மக்களுக்கு பிடித்த மன கவர்ந்த போட்டியாளர் என்ற பெயரையும் பிரியங்கா பெற்று விட்டார்.

ஜாலி டூர் போன பிரியங்கா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்ததும் பிரியங்கா மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிக் பாஸ் என்று கையேடு ஜாலியாக விடுமுறையில் சென்றுவிட்டார். இறுதியாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்தார்.

விஜய் அவர்ட்ஸ் சிறந்த தொகுப்பாளினி
கடந்த ஆண்டு பிரியங்கா பெரிதாக நிகழ்ச்சி தொகுப்பு செய்யாத போதிலும் அவருக்கு சிறந்த தொகுப்பாளர் விருது வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த விஷயத்தால் பிரியங்காவின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வந்தாலும், ஆங்கரிங் செய்யாமல் எப்படி பிரியங்காவிற்கு சிறந்த தொகுப்பாளர் விருது வழங்கப்பட்டது என்று பலரும் விமர்சித்துள்ளனர். அப்படி எந்த நிகழ்ச்சியை இந்த வருடத்தில் பிரியங்கா வெற்றிக்கரமாக முடித்து கொடுத்தார்? எனவும் நெகட்டிவ் கருத்துக்களை அவர்கள் ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.

13 ஆண்டுகள் நிறைவு
இந்த வருடத்துடன் 13 ஆண்டுகள் தொகுப்பாளினி பயணத்தை பிரியங்கா நிறைவு செய்கிறார். அதை கவுரவிக்கும் விதமாக கூட இந்த விருது வழங்கப்பட்டு இருக்கலாம். ஆனால் அதற்கு ஏகப்பட்ட சர்ச்சைகள் இணையத்தில் வெடித்துள்ளன. நிகழ்ச்சி ஒளிப்பரப்பான பின்பு தான் உண்மையில் பிரியங்காவுக்கு எந்த காரணத்தினால் விருது வழங்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிய வரும். சமீபத்தில் இவருக்கு கலாட்டா யூடியூப் சேனல் சார்பாக ஐகானிக் உமன் விருது வழங்கப்பட்டது. அந்த விருதை பெறும்போது பிரியங்கா ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.