For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்னதான் கழுவிக் கழுவி ஊற்றினாலும்.. அவங்களுக்குத்தான் வெட்கமே இல்லையே!

Google Oneindia Tamil News

சென்னை: பிக்பாஸ் நாலாவது சீசன் தினமும் ஒரு மணி நேரம் ஒளிபரப்பப்பட்டு வந்தது ஆனால் நேற்று நான்கு மணி நேரம் தொடர்ந்து ஒளிபரப்பப்படும் என்று கூறி இன்ப அதிர்ச்சியில் மூழ்க வைத்து விட்டனர். ஆனால் நாலு மணி நேரத்தில் கொண்டாட்டம் காண்பிக்கப்பட்டது குறைவுதான்.

விஜயதசமி வாழ்த்துக்கள் கூறிய போட்டியாளர்கள் செமையாக கத்தும்போது பார்க்க சந்தோஷமாகத்தான் இருந்தது. ஆனால் ரசிகர்கள் கமலஹாசன் பேசியதை கேட்டு தான் அதிர்ச்சி அடைந்து போனார்கள்.

அதை விட முக்கியமாக விஜயதசமியும் அதுவுமாக கறிச்சோறும் சாப்பிட்டு பலரை முகம் சுளிக்க வைத்து விட்டனர்.

 என்னங்க இது

என்னங்க இது

ஒருபுறம் கிராமத்து வாசிக்கும் ஒரு புறம் நகரத்து வாசிக்கவும் செமையாக கேம்ஸ் வைத்திருந்தனர். அடடா பரவாயில்லையே என்று பார்த்தால், விஜயதசமிக்கு கறி விருந்து வைத்து கொண்டாடிய கூட்டம் என்ற பெயரை இந்த பிக் பாஸ் சீசன் 4 எடுத்து விட்டது. இந்துக்கள் விஜயதசமி நாளில் கறிச்சோறெல்லாம் சாப்பிட மாட்டார்கள். சுத்த சைவமாகத்தான் பெரும்பாலான வீடுகளில் இருக்கும்.

 இன்னிக்கு சரியா இருக்காதே

இன்னிக்கு சரியா இருக்காதே

சும்மா வேற நாட்களில் இந்தமாதிரி கறி விருந்து வைத்து சாப்பிட்டாலும் பரவாயில்லை. விஜயதசமிக்கு சாமி கும்பிடுவதற்கு எல்லா செயல்களையும் செய்து கொண்டு இந்த மாதிரி கறி சாப்பிட்டு விட்டு தான் சாமி எல்லாம் கும்பிடுவிங்களா என்று பலர் கமெண்ட் மழைகளை பொழிந்து கொண்டிருந்தனர். அதுவும் விஜயதசமிக்கு ஸ்பெஷலாக கறி சாப்பாடு வைத்திருப்பது கேவலமான செயல் என்றும் வறுத்து எடுத்து விட்டனர்.

 நல்லாதானே போய்ட்டிருக்கு

நல்லாதானே போய்ட்டிருக்கு

இதுவரை எல்லாமே நல்லாதான் போயிட்டிருந்தது. ஆனால் இந்த கறி மேட்டர்தான் நேற்று பலரையும் முகம் சுளிக்க வைத்து விட்டது. அதை விட காமடெி இதுவரை சிறிய பாத்திரங்களில்தான் சமையல் செய்வது போல காட்டுவார்கள். நேற்றுதான் பெரிய பாத்திரத்தில் சமைத்துக் கொண்டிருப்பதையும் காட்டினர். அதையும் பலர் ஓட்டித் தள்ளி விட்டனர்.

 நல்லா கிண்டுங்கம்மா

நல்லா கிண்டுங்கம்மா

இதுவரைக்கும் மூணு நாலு பேர் சாப்பிடற அளவுக்கு ஒரு குட்டி பாத்திரத்தில் கிண்டிக் கொண்டு இருப்பீங்க இன்னைக்கு தான் இவ்வளவு பெரிய பாத்திரத்தில் சமைத்தத காட்டி இருக்கீங்க இது எதற்காக இப்படி என்று கேள்வி கேட்டிருந்தனர். ஆனால் இந்த சாப்பாட்டு விஷயத்தை கவனிக்காத சில ரசிகர்கள் நேற்றுதான் அதைப் பார்த்தனர்.

 நல்லா இருக்கும் போலயே

நல்லா இருக்கும் போலயே

நாலு மணி நேர காட்சிகள் என்றாலும் கூட கொண்டாட்டங்கள் பெரிதாக கவரவில்லை. வழக்கம் போல சண்டைக் காட்சிகளுக்கும் குறைவில்லை. 2 நாள் பிக் பாஸ் எபிசோடை ஒரே நாளில் காட்டியது போன்ற உணர்வுதான் பார்த்துமுடித்தபோது ஏற்பட்டது. மொத்தத்தில் விஜயதசமியை கொண்டாட வேண்டும் என்பதற்காக அதைச் செய்தது போல இருந்தது.

English summary
Vijayadasami was celebrated in Bigg boss house yesterday in grand manner.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X