• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாத்தி மாத்தி பிளாக் பண்ணிக்கிட்டாங்களாமே ஷிவானியும், சித்துவும்!

|

சென்னை: சின்னத்திரை சீரியல்களில்தான் செம சண்டையாக இருக்கும். மாமியார் மருமகள் சண்டை, இப்படி விதம் விதமான சண்டைகளைப் பார்க்கலாம். வில்லத்தனங்களுக்கும் பஞ்சமிருக்காது.

ஆனா இப்ப சின்னத்திரை நடிகைகள் இருவருக்கு இடையே ஏற்பட்டுள்ள சண்டைதான் பெருசா பேசப்படுது. ஆனால் இந்த சண்டை வந்த விதமே ரொம்ப எதிர்பாராததுன்னு சொல்றாங்க.

கவர்ச்சி கன்னி ஷிவானி நாராயணன், குடும்ப குத்துவிளக்கு விஜே சித்து, அதாங்க நம்ம முல்லை.. இவங்களப் பத்திதான் சொல்றோம். இவங்க சண்டை முத்திப் போய் இப்ப ஒருவரை ஒருவர் பிளாக் பண்ணிட்டாங்களாம்.

அழகிய ராட்சசி தர்ஷாவின் புது அவதாரம்.. பார்க்க மறக்காதீங்க மக்களே!

 எதுக்கு சண்டை

எதுக்கு சண்டை

இதுவரை இவர்களுக்குள் என்ன பிரச்சினைன்னு யாருக்குமே தெளிவாத் தெரியலங்க. ஆனால் எதிர்பாராவிதமாக இருவருக்குள்ளும் முட்டிக் கொண்டுள்ளது. ஆனால் நேருக்கு நேர் இருவரும் மோதிக் கொள்ளவில்லை என்பதுதான் மேட்டர். இவர்கள் போட்ட கமெண்ட்டுகள்தான் மோதிக் கொண்டு ஆளுக்கொரு பக்கமாக இவர்களைப் பிரிச்சிருச்சுங்க. அதுதான் ஆச்சரியமா இருக்கு.

 ஒத்த வார்த்தைதான் காரணம்

ஒத்த வார்த்தைதான் காரணம்

எல்லாம் ஒரு கமெண்ட்டில் வந்த வினைதாங்க. அதாவது விஜே சித்துவிடம் ஒரு ரசிகர் கவர்ச்சிப் படம் போட வேண்டியதுதானே என்று கேட்க அவர் கடுப்பாகி அதெல்லாம் போட வேற ஆள் இருக்காங்க.. அங்க போய் கேளுங்க என்று பதில் சொல்ல.. கடுப்பாகி விட்டார் ஷிவானி. இத்தனைக்கும் ஷிவானியை குறி வைத்து சித்து அப்படிச் சொல்லலைங்கிறாங்க. ஆனால் ஷிவானிக்கு ஏன் கோபம் வந்தது என்று தெரியவில்லை.

 சித்து சொன்னது யாரை

சித்து சொன்னது யாரை

தன்னைத்தான் சித்து சொல்கிறார் என்று நினைத்துக் கொண்ட ஷிவானி, முதல்ல உன் முதுகைப் பாரு என்று பதில் கமெண்ட் போட இரு தரப்பு ரசிகர்களும் சண்டையில் குதித்து விட்டனர். இரு தரப்பும் மாறி மாறி கமெண்ட்டுகளில் புகுந்து விளையாட எல்லோரும் அவரவர் வேலையை விட்டு விட்டு இவர்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.

 நான் சொல்லலையே

நான் சொல்லலையே

இந்த நேரத்தில்தான் சித்துவின் கல்யாண வேலைகள் களை கட்டின. அவரது நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்தது. இதனால் அவரால் நேரடியாக பதிலளிக்க முடியவில்லை. ஆனால் தான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லலையே என்று சித்து ஆச்சரியம் காட்டினாராம். இருந்தாலும் ரசிகர்கள் கோபத்தைக் குறைக்கவில்லை. எங்க சித்துவை எப்படி அப்படி சொல்லலாம் என்று சண்டையைக் குறைக்காமல் தொடர்ந்தனர். ஷிவானி ரசிகர்களும் விடவில்லை.

 சமத்துப் பிள்ளைங்களாச்சே

சமத்துப் பிள்ளைங்களாச்சே

இப்படி ஒரு பக்கம் சண்டை மல்லுக்கட்டிக் கொண்டிருக்க.. மறுபக்கம் இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் இன்ஸ்டகிராம் உள்ளிட்டவற்றிலிருந்து பிளாக் செய்துள்ளனராம். இத்தனைக்கும் ஒன்றுக்கும் தேறாத கமெண்ட். அதுக்குப் போய் ஏன் இப்படி ஒரு சண்டை மூண்டது என்பதுதான் அனைவரின் ஆச்சரியமாகவும் இருக்கு. இத்தனைக்கும் இருவருமே யாரிடமும் இதுவரை சண்டைக்குப் போகாத சமத்துப் பிள்ளைகள். இதுங்களுக்குள்ஏன் இப்படி முட்டிக்கிச்சு என்பதுதான் ஆச்சரியமா இருக்காம்.

 டிஸ்டர்ப் பண்ணாதீங்கப்பா

டிஸ்டர்ப் பண்ணாதீங்கப்பா

இது ஒரு சண்டை என்றால் இன்னொரு பக்கம் கதிர் - முல்லை இடையிலான மோதலும் பரபரப்பைக் கிளப்பியது. கதிருடன் இணைந்து முல்லை ஆட மாட்டேன் என்று சொன்னதாக செய்திகள் வெளியாக அது ஒரு பரபரப்பாகி விட்டது. எப்பவுமே சித்து சர்ச்சையில் சிக்கிக் கொள்ளாதவர். எப்போதும் சிரித்த முகத்துடன் ஜாலியாக இருக்கக் கூடியவர். அவரை வைத்து சலசலப்பு உண்டானது ஆச்சரியம்தான்.. சரி சரி கல்யாணக் கோலத்தில் இருக்கிறார் சித்து.. அவரை டிஸ்டர்ப் பண்ணாம ஜாலியா இருக்க விடுங்கப்பா.. அப்புறம் பாத்துக்கலாம் ஏதா இருந்தாலும்.

 
 
 
English summary
Both VJ Chithu and Shivani Narayanan have unfollowed each other in Social media after the clash.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X