For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Webseries: புத்தகங்களை திரைப்படமாக எடுப்பதைவிட வெப்சீரீஸ் சிறப்பு!

Google Oneindia Tamil News

ஹாலிவுட்: சி.எஸ்.லெவிஸ் எழுதிய தி லயன் விட்ச் அன்ட் தி வார்ட்ரோப் என்கிற புத்தகத்தை நெட்ஃபிலிக்ஸ் வெப்சீரீஸாக எடுக்க இருக்கிறதாம். இந்த புத்தகம் 2005ம் ஆண்டே க்ரோனிக்கில்ஸ் ஆஃப் நார்னியா என்கிற திரைப்படமாக வந்து பெரும் புகழ் அடைந்தது.

அதே புத்தகத்தின் கதையை அதாவது க்ரோனிக்கில்ஸ் ஆஃப் நார்னியா படத்தை நெட்ஃபிளிக்ஸ் மீண்டும் வெப் சீரீஸாக எடுக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த படத்தை அப்போது தயாரித்த அதே தயாரிப்பாளர், இப்போது வெப்சீரீஸாக எடுக்க, நெட்ஃபிளிக்ஸ் இயங்குதளத்துடன் ஒப்பந்தம் செய்து இருக்கிறார். இந்த காலக்கட்டத்துக்கு இதை வெப்சீரீஸாக எடுப்பதில் தனக்கு மிகுந்த பெருமை என்றும் கூறி இருக்கார்.

Pandian Stores Serial: என் மேல ரொம்ப அக்கறையா இருக்காக... புடிச்சு இருக்கு...!Pandian Stores Serial: என் மேல ரொம்ப அக்கறையா இருக்காக... புடிச்சு இருக்கு...!

புத்தகம் வெப்சீரீஸ்

புத்தகம் வெப்சீரீஸ்

ஒரு புத்தகம் அதாவது நாவலை படமாக எடுக்கும்போது சில காம்ப்ரமைஸ் செய்துக்கொள்ள நேரிடும்.. சில விஷயங்களை நேரம் போதாது என்று புறம் தள்ள நேரிடும். ஆனால், நாவலை வெப்சீரீஸாக எடுக்கும்போது, புத்தகத்தின் தன்மை முழுவதுமாக கதையில் சேர்ந்து இருக்கும் என்று தயாரிப்பாளர் டக்ளஸ் க்ரெஷாம் தெரிவித்துள்ளார்.

கதை என்ன?

கதை என்ன?

அதீத கற்பனைத் திறனை உடையது இந்த கதை. அதாவது ஒரு குடும்பம் லண்டனுக்கு சென்று இருப்பார்கள். அவர்கள் வீட்டினுள் சென்று கதவைத் திறக்கும்போது, அந்த வீட்டுக்குள் வேறு ஒரு உலகம் பரந்து விரிந்து இவர்கள் குடும்பத்தை வரவேற்கும்.அந்த உலகத்தில் இவர்கள் பங்கு என்ன?

ஆட்டு தலை மனித உடல்

ஆட்டு தலை மனித உடல்

அந்த கற்பனை உலகத்தில்... ஆட்டு தலையுடன் மனித உடலில் ஒரு உயிரினம். இப்படி எல்லாமே மாறி மாறி இருக்கும்படியான அதிசயமான உருவத்தில் உயிரினம் உலவிக்கொண்டு இருக்கும். மிருகங்கள், மனிதர்கள் கலந்த அந்த உலகத்தில், இந்த குடும்பம் அவர்களோடு போரிட்டு வெல்வதுதான் கதை.

நெட்ஃபிளிக்ஸ் வெப் சீரீஸ்

நெட்ஃபிளிக்ஸ் வெப் சீரீஸ்

நெட்ஃபிளிக்ஸ் பிரபல கதாசிரியரின் நாவலை வெப் சீரீஸ் வடிவில் கொடுக்க உள்ள நிலையில், இப்படியான புகழ் பெற்ற கதாசிரியரின் நாவல்கள் இனி வெப்சீரீஸாகவும் மாறும் வாய்ப்புக்கள் அதிகம் இருக்கின்றன. இதுவும் ஒரு நல்ல மாற்றம்தான் என்கிறார்கள் நாவலாசிரியர்கள்.

English summary
The book The Lion Witch and the Wardrobe by CS Lewis is about to be taken to Netflix WebSeries. The book came to fame in 2005 as the chronicles of narnia.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X