• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த வாய்தானே...வாயிலேயே அபிஷேக்கை அடிச்ச அண்ணாச்சி

Google Oneindia Tamil News

சென்னை: வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல் கண்டமேனிக்கு பேசலாமா என்று அபிஷேக்கை வாயிலேயே அடித்திருக்கிறார் அண்ணாச்சி.

சக போட்டியாளர்களாக இருந்தாலும் சரி வயதிற்கு மூத்தவர்களை இப்படி மரியாதை இல்லாமல் பேசலாமா என்று ரசிகர்களும் அபிஷேக்கை பார்த்து பொங்கி வருகின்றனர்.

சீனியர் என்ற திமிரா.. தோனி கிட்ட இப்படி பண்ண முடியுமா? அஸ்வின் செய்த காரியம்.. பெரும் சர்ச்சை சீனியர் என்ற திமிரா.. தோனி கிட்ட இப்படி பண்ண முடியுமா? அஸ்வின் செய்த காரியம்.. பெரும் சர்ச்சை

நேத்து வரைக்கும் மாமன் மச்சான் என்று விளையாடிக்கொண்டு இருந்ததால் அண்ணாச்சியை 'யோவ்' என்று சொல்லும் லெவலுக்கு வந்துவிட்டார் அபிஷேக் .

கலகலப்பான ஐந்தாவது சீசன்

கலகலப்பான ஐந்தாவது சீசன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த சீசனில் கலகலப்பும் சந்தோஷத்திற்கும் பஞ்சமில்லாமல் ரசிகர்கள் என்ஜாய் பண்ணி கொண்டிருக்கின்றனர். இதற்குக் காரணம், அதிகமான சண்டை சச்சரவுகள் இல்லாததும் ஒன்று என்று கூறி விடுகின்றனர். இப்போது நான்கு சீசன்கள் முடிவடைந்து இருப்பதால் அதில் எல்லா சீசன்களில் எபிசோட்களையும் விடாமல் பார்த்து பக்குவப் படுத்திக் கொண்டுதான் போட்டியாளர்கள் இந்த சீசனில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று சிலர் கூறி வருகின்றனர்.

நெட்டிசன்களின் பேவரைட் அபிஷேக்

நெட்டிசன்களின் பேவரைட் அபிஷேக்

இந்த சீசனில் அதிகமான போட்டியாளர்கள் இருந்தாலும் அதில் ஒரு சிலர் மட்டும்தான் ரசிகர்களின் மத்தியில் அதிகமாக நெகட்டிவ் கமெண்டுகளை பெற்று வருகின்றனர். அதில் அபிஷேக் ஒருவர். இவர் என்ன செய்தாலும் கலாய்க்கும் நெட்டிசன்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனர். இவர் செய்யும் சின்ன சின்ன செயல்கள் கூட அவர்களுக்கு பெரியதாகத் தான் ரசிகர்களுக்கு தெரிந்து கொண்டிருக்கிறதாம். அதுமட்டுமல்லாமல் நேற்றைய எபிசோட்டில் அவருடைய கதை பலருக்கும் இவர் மீது நல்ல அபிப்ராயம் ஏற்படுத்தி இருக்கும் நேரத்தில், இவர் கதை சொல்லி முடித்த பிறகு அண்ணாச்சியிடம் செய்த செயலை பற்றிதான் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் அதிகமாக பேசி வருகின்றனர்.

வேற லெவல் திறமை தான்

வேற லெவல் திறமை தான்

ஏற்கனவே இந்த வீட்டில் இவரை எதிர்த்துப் பேசும் ஒரு சில போட்டியாளர்களை இவர் உறவு முறை சொல்லி தனக்கு ரசிகர்களாக மாற்றி விடுகிறார். இவர் செய்யும் செயல் பிடிக்கவில்லை என்று கூறினாலே உடனே அக்கா, தங்கச்சி, அண்ணன் என்று பல்வேறு கோணங்களில் உறவுகளைச் சொல்லி உரிமையாக திட்ட தொடங்கி விடுகிறார் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இவர் அண்ணாச்சியிடமும் அதுபோல செய்வது அவருடைய ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதுவும் வயசுக்கு தகுந்த மரியாதை கொடுக்காமல் இவர் கண்டமேனிக்கு பேசுவதை கமெண்டுகளில் கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

  Actress Sanam Shetty Pressmeet | Sparkle 2021 | MSD Diamond launch | Filmibeat Tamil
  காண்டான அண்ணாச்சி

  காண்டான அண்ணாச்சி

  சக போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது அண்ணாச்சியை அபிஷேக் ஒருமையில் 'யோவ்' என்று குறிப்பிட்டிருக்கிறார். அது அண்ணாச்சிக்கு வருத்தத்தை கொடுத்து இருந்தாலும் மரியாதை வேண்டும் என்று குரல் எழுப்ப தொடங்கியதும் பிரியங்கா நேற்று வரைக்கும் மாமன் மச்சான் என்று பேசிக்கொண்டிருந்தவர் மரியாதையை எதிர்பார்க்கலாமா??என்று கேட்டிருக்கிறார். இதைக்கேட்டதும் அண்ணாச்சி அமைதி ஆகிவிட்டாலும் அண்ணாச்சியின் ரசிகர்கள், யாராக இருந்தாலும் இந்த மாதிரி வார்த்தைகளில் பேசக்கூடாது என்று கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அபிஷேக் தன்னைப் பற்றி மரியாதை இல்லாமல் பேசியதும் இந்த வாய்தானே அப்படி என்று அண்ணாச்சி, அபிஷேக்கின் வாயில் அடித்தது ரசிகர்களுக்கு கொஞ்சம் மன ஆறுதலாக இருக்கிறதாம்.

  English summary
  When Abhishek spoke disrespectfully to Annachi, annachi's act instead went viral on the social media. Abhishek's disrespectful remarks to Annachi have created a buzz among the fans. Netizens, who are already angry with him, are expressing their opinions on whether he should speak in a reality show without respect for his age.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X