For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீபாவளியை திருவிழாவாக ஆக்குவது ஆண்களா?! பெண்களா?!

Google Oneindia Tamil News

சென்னை: பண்டிகை தினங்கள் மனிதர்களின் மனங்களில் குதூகலம்,கொண்டாட்டம் என்று மகிழ்வை ரீசார்ஜ் செய்ய கொண்டாடப்படுபவை.

இந்த நாட்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் மனதை மகிழ்விப்பதாக சிரிப்பை வரவழைப்பதாக இருந்தால் இன்றைய பண்டிகை தினத்தின் சந்தோஷத்துக்கு அளவுகோலா வேண்டும்?

தீபாவளி தின சிறப்பு பட்டிமன்றம் - வரும் ஞாயிறு காலை 9 மணிக்கு உங்கள் விஜய் டிவியில் தீபாவளியைத் திருவிழாவாக்குவது ஆண்களா பெண்களா என்கிற தலைப்பில் பட்டி மன்றம் ஒளிபரப்பாக உள்ளது.

நாலு மருமகன்கள்

நாலு மருமகன்கள்

ஒருத்தருக்கு நாலு மருமகன்கள் அமைஞ்சுட்டா அவங்க வீட்டு தீபாவளி களைக்கட்டும்.அன்னிக்கு எல்லா மருமகனும் மாமனார் வீட்டுக்கு பரிசு பாக்ஸோடு வருவாங்க. அந்த டைனிங் டேபிளில் மச்சினிச்சிகளோடு அரட்டை அடிச்சுகிட்டு..வீடே சந்தோஷமா இருக்கும்.

கோடீஸ்ஸ்வரிரிரிரிரிரிரி.... ரியாலிட்டி ஷோவுக்கு கோடீஸ்ஸ்வரிரிரிரிரிரிரி.... ரியாலிட்டி ஷோவுக்கு "குரல்" எடுபடலையோ....?!

தைரியத்தில் மாமனார்

தைரியத்தில் மாமனார்

நாம் இருக்கும் தைரியத்தில் மாமனார் மாமியாரை அதட்டி வேலை வாங்குவார்.அவருக்கு அடுத்த நாள்தான் தீபாவளி ஆரம்பிக்கும்னு பேசினார் பேச்சாளர். அதோடு, பொண்டாட்டி கேட்பா..ஏங்க இந்த வருஷம் தீபாவளிக்கு நான் பாட்டுல சுடிதார் தச்சுக்குவான்னு...என்ன சுடிதார்னு கேட்டா... எப்போ தீபாவளிக்கு புடவை எடுத்தாலும் அதே மாதிரியே உங்க அம்மாவும் எடுத்துடறாங்க. அதனாலதான்னு சொல்றா.

எனக்கு கவலை

எனக்கு கவலை

என் கவலை என்னனா என்னடா நம்ம அம்மாவும் திடீர்னு சுடிதார் தச்சுகிட்டு வந்துருவாங்களோன்னு என்கிறார். சரி வாழைப்பழம் பூஜைக்கு வாங்கிட்டு வந்து இருப்போம் .இதென்ன நல்ல சீப்பா பார்த்து வாங்கிட்டு வர கூடாதான்னு கேள்வி. இதென்ன கொலு பொம்மையிலயா வைக்கப்போறே.. பிள்ளையாருக்கு அந்த சாமிக்கு இந்த சாமிக்குன்னு ரெண்டு ரெண்டா பிரிச்சுதானே வைக்கப் போறேன்னு கேட்டால்.. நீங்க இளிச்ச வாயின்னு கடைக்காரனுக்கு தெரிஞ்சு இருக்குன்னு சொல்லுவா.

உன்னை பெண் பார்க்க

உன்னை பெண் பார்க்க

உன்னை பெண் பார்க்க வரும்போது உங்கப்பா என்னை இளிச்ச வாயின்னு கண்டு பிடிக்கலையா.. அது மாதிரி இதுவும் போடின்னு சொன்னேன்னு பேசினார். மனிதர் எந்தப் பக்கத்துக்கு ஆதரவாக பேசினார்னு ப்ரோமோவில் கண்டுபிடிக்க முடியலை .நிகழ்ச்சியை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

English summary
Festive days are celebrated in the minds of men to recharge fun and celebration.If TV shows these days are supposed to bring smiles to the mind, should the happiness of today's festive day be measured?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X