For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கட்டிய தாலியை முத்துச்செல்வி உள்ளே ஒளிச்சு வக்கிறாளே.. அப்ப கண்ணன் யாருக்கு?

Google Oneindia Tamil News

சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியல் லொக்கேஷன்ஸ் கண்களை அள்ளுதுன்னு சும்மா சொல்லிகிட்டு இருக்க முடியாதுதான்... ஆனா, நல்லாருக்கே..

அதுவும் இந்த கொளுத்தும் கோடைக்கு இரவில் இயற்கையான மிக அழகான செழிப்பான கிராமத்தை சீரியலில் பார்க்கறப்போ, நமக்கே இது போல கிராமத்துல வாழ மாட்டோமான்னு ஏக்கம் வந்துருது.

சவுந்தர்யா திருமணம் இரண்டு முறை தள்ளி போனதற்கு பரிகாரமா கோயிலில் முருகன், வள்ளி திருமணம், முருகன், வள்ளி திருமணத்தை கூத்தாக நடத்தனுனு குறி சொல்றாங்க.

அழகு ரோஜா.. கிரேஸ் நதியா.. ஆனால் கதை பாதியிலேயே நிக்குதுப்பா...! அழகு ரோஜா.. கிரேஸ் நதியா.. ஆனால் கதை பாதியிலேயே நிக்குதுப்பா...!

காணோம்

காணோம்

சவுந்தர்யாவை காதலித்த ஆகாஷின் அம்மா, கூத்தில் நடிக்க வந்த வள்ளி, முருகனை வெளிநாடு, அது இது என்று ஆசை வார்த்தை காண்பிக்க இருவரும் எஸ்கேப். இப்போ முருகன், வள்ளி வேஷத்துல நடிக்க ஆள் இல்லை.

அழுகை

அழுகை

கூத்து நடக்காம போயிருமோ, நமக்கு மறுபடியும் திருமண தோஷம் வந்து கண்ணன் மாமாவை கட்டிக்க முடியாம போயிருமோன்னு கண்ணீர் விடறா. என்ன சவுண்டு.. இன்னிக்கு எப்படியாச்சும் மாமன் வள்ளி முருகன் திருமண கூத்தை நடத்தியே தீருவேன்னு சொல்லிட்டு போயி முத்துசெல்வி அப்பாவிடம் சத்தம் போடுகிறான்.

நீங்க ரெடியா?

நீங்க ரெடியா?

சின்னவரே.. ஐயனை ஏன் அப்படித் திட்டறீங்க... அவங்க ஓடிப் போனதுக்கு இவங்க என்ன செய்வாங்க பாவம்னு சொல்றா. அங்க என் சவுண்டு ஒரு சொட்டு கண்ணீர் விட்டாக்கூட என்னால தாங்க முடியாது. இன்னிக்கு குடம் குடமா கண்ணீர் வடிக்குது.எப்படி தாங்குவேன்னு சொல்றான். உங்களுக்கு சவுந்தர்யா அம்மான்னா, எனக்கு இவங்க ஐயன். இவங்க அழறதை நான் பார்த்துகிட்டு இருக்க முடியுமான்னு கேட்கறா.நடந்ததை பத்தி யோசிக்காம நடக்க இருக்கறதை பேசலாமே சின்னவரேன்னு கேட்கறா. என்ன சொல்ற புள்ளேன்னு கேட்கறான் கண்ணன். வள்ளியா நடிக்க நான் ரெடி.. முருகனா கூத்துக்கட்ட நீங்க ரெடியான்னு கேட்கறா முத்து செல்வி.

ரெடிதான் புள்ள

ரெடிதான் புள்ள

இன்ஜார்ரா.. நானும் கூத்து ஒத்திகை நடந்தப்போ பார்த்தேன். என்னாலயும் முருகன் வேஷம் கூத்து கட்ட முடியும் புள்ள... என் சவுண்டு சந்தோஷமா இருந்தா சரின்னு சொல்றான் கண்ணன் உடனே இருவரும் தயாராக வள்ளி, முருகன் திருமணம் கூத்து நடக்குது.

போகும் கலை

போகும் கலை

கண்மணி சீரியல் இயக்குநரை உண்மையில் பாராட்டலாம். அவ்வளவு எளிதாக வள்ளி, திருமணம் குழந்தைகளுக்கும் புரியும் மாதிரி ரொம்ப அழகா காட்சி அமைச்சு இருக்காங்க. கண்ணனும், முத்து செல்வியும் நல்லா நடிச்சும் இருக்காங்க. தொலைந்து போகும் இது போன்ற கலை மற்றும் கதைகளை மீட்பது ஒரு நல்ல கலைஞனுக்கு உண்டான தலையாய கடமை.

சவுண்டு அழுகை

சவுண்டு அழுகை

முத்து செல்வியான வள்ளி கழுத்தில் கண்ணன் மாமா முருக பெருமானா மாலை மாற்றி தாலி கட்ட, சவுந்தர்யாவுக்கு உள்ளம் குமுறுது கண்ணீர் பெருகுது.ஆசை வச்சு இருக்கும் கண்ணன் மாமா வேறு ஒருத்தி கழுத்தில் வேஷத்தில்தாலி கட்டினாலும், எந்த கிராமத்து பெண்ணால் பொறுத்துக்க முடியும்?

அதை விடுங்க.. இங்க முத்து செல்வி, கண்ணன் தன் கழுத்தில் கட்டிய தாலியை கழட்டாமல் ஒளிச்சு வைக்கறாளே.. அப்போ கண்ணன் யாருக்கு?

English summary
Sun TV's favorite serial kanmani locations are very good. It's cool for the eyes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X