For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆசையா புருஷன் பக்கத்துல உட்கார்ந்தா அநியாயமா பொறந்து வீட்டுக்கு அனுப்பிட்டாங்க!

Google Oneindia Tamil News

சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியில் திருமணம் சீரியல் காதல், தோல்வி, கல்யாணம், ஒன்று சேராமை, பிரிவு, ஏக்கம்னு ரொம்ப நல்லாவே போயிட்டு இருக்கு.

சந்தோஷ், சக்தின்னு ஒரு பொண்ணை காதலிக்க, சூழ்நிலை காரணமாக காலேஜ் மேட் ஜனனியுடன் சந்தோஷுக்கு கல்யாணம் நடக்குது. ரெண்டு பேரும் டிவோர்ஸ் பண்ணிடலாம்னு வேலையை ஆரம்பிக்கறாங்க.

இருந்தாலும், இருவருக்குள்ளும் ஒருவர் மேல் ஒருவருக்கு மெல்லிய ஈர்ப்பு மனசுல படிஞ்சுகிட்டு வருது. இதமான காட்சிகள், மனதை வருடும் பேச்சுக்கள்னு ரெண்டு பேரும் அப்பப்போ நெருங்க ஆசைப்படறாங்க..

நீ பாதி... நான் பாதி.. பால் குடிக்கலாம் மாமா... அடடா காதல் பொங்கி வழியுதே...! நீ பாதி... நான் பாதி.. பால் குடிக்கலாம் மாமா... அடடா காதல் பொங்கி வழியுதே...!

மாயா

மாயா

இந்த குடும்பத்துக்காக என் உயிரையும் கொடுப்பேன் மாமான்னு சொல்ற மூத்த மருமகள் மாயா, தனது மாமனாரின் உடல்நலன் சரியில்லாம போனதுக்கு சந்தோஷ், ஜனனியின் ரெண்டாவது தாலி கட்டுதல் சம்பிரதாயம் செய்ததுனாலதான்னு சொன்ன மாயா, பரிகார பூஜைக்கு ஏற்பாடு செய்யறா.

உட்கார்ந்த உடனே...

உட்கார்ந்த உடனே...

ஐயர் பூஜைக்கு வந்துவிட, சந்தோஷ், ஜனனியை பக்கத்து பக்கத்துல உட்கார சொல்றா மாயா. உடனே ஐயர் ஒரு தேங்காயை கொடுத்து, அந்த இடத்திலேயே உடைக்க சொல்கிறார். ஜனனி தேங்காயை உடைக்க அது அழுகி இருக்கு. அச்சச்சோ தேங்காய் அழுகிப் போச்சே... இனி பூஜை நடத்த முடியாதுன்னு ஐயர் சொல்றார்.

பூஜை நடக்கும்

பூஜை நடக்கும்

ஐயரே.. என்ன செய்தா பூஜை நடக்கும்னு சொல்லுங்க.. பூஜை நடத்தியே ஆகணும்னு மாயா சொல்றா. சொன்னா தப்பா நினைச்சுக்காதேள்.. தேங்காய் உடைச்ச இந்த பொண்ணு பூஜையில் இருக்க கூடாதுன்னு குண்டைத் தூக்கி போடறார் . மாயாவும், அவளது தங்கை ஆர்த்தியும் ரகசியமாகப் பார்த்து சிரிச்சுக்கறாங்க.

ஜனனி மவுனம்

ஜனனி மவுனம்

என்னப்பா இதெல்லாம்... எங்க ரெண்டு பேருக்காகவும் பண்ற இந்த பூஜையில் ஜனனி இருக்க கூடாதுன்னா எதுக்கு இதுன்னு கேட்கறான் சந்தோஷ். ஆமாம்மா.. நம்ம வீட்டு பொண்ணு ஜனனி... இவளை பூஜையில் இருக்க கூடாதுன்னா என்ன அர்த்தம்னு மாமனாரும் கேட்கறார்.

உங்க நல்லதுக்கு

உங்க நல்லதுக்கு

மாமா உங்க நல்லதுக்குத்தான் மாமா, என்னை பத்தி உங்களுக்கு தெரியாதா.. எப்போதும் நீங்க நல்லாருக்கணும்னு நினைக்கறவ நான். எனக்கு மட்டும் ஜனனி மேல பாசம் இருக்காதா... அவ உடைச்ச தேங்காய் அழுகிப் போச்சு.. பூஜையை பாதியில நிறுத்தினா தப்பாயிரும் மாமான்னு ஐஸ் வைக்கறா மாயா.

நான் போறேன்

நான் போறேன்

இல்லக்கா நான் பூஜையில் இல்லை.. நான் போறேன்னு ஜனனி எழ, சந்தோஷும் கூடவே எழ முயற்சிக்கறான். சந்தோஷ் நீ உட்காருன்னு மாயா அதட்ட, அப்பாவும் உட்காருடான்னு சைகை செய்யறார்.சந்தோஷ் தவிப்புடன் உட்காருகிறான். நிலை கொள்ளாமல் தவிக்கிறான், ஜனனி சென்ற திசையையே பார்த்திருக்க, அவனையும் தேங்காய் உடைக்க சொல்கிறார் ஐயர்.அந்த தேங்காய் நல்லாத்தான் இருக்கு.

குண்டு

குண்டு

பிறகு சந்தோஷ், ஜனனி இருவர் ஜாதகத்தையும் பார்க்கிறார் ஜோதிடர் ஒருவர். ஐயர் பூஜையில் கலந்துக்க கூடாதுன்னு குண்டைத் தூக்கிப் போட, ஜனனி ஜாதகம் சரியில்லை, அவங்களை இந்த வீட்டுலேருந்து பிரிச்சு வைங்க, அப்போதான் பெரியவரோட உடல்நிலை நல்லாருக்கும்னு சொல்லி இரண்டாவது குண்டு தூக்கிப் போடறார் ஜனனி மேல.

போறேன் மாமா

போறேன் மாமா

மாமா நான் போறேன் மாமா... என்று பரிதாபமாக சொல்கிறாள் ஜனனி.சந்தோஷ் துடித்து பார்வையால் ஏக்கத்தை வெளிப்படுத்தறான். என்னம்மா நீன்னு மாமனார் சொல்ல, இல்லை மாமா கிளம்பறதுதான் நல்லது. நான் போறேன்னு சொல்ல நாத்தனார் ஓடி வந்து ஜனனியைக் கட்டிப்பிடிச்சு அழறா.

சந்தோஷை

சந்தோஷை

தனியா போக வேணாம்மா... சந்தோஷை கூட்டிகிட்டு போன்னு சொல்றார் மாமனார். சந்தோஷ் தயாராக. வேணாம் மாமா... வீட்டுல பயந்துகிட்டு ஏதாவது கேட்பாங்க. இவருக்கு பதில் சொல்ல தெரியாதுன்னு சொல்றா ஜனனி. தனியா அனுப்பினாலும் பயப்படத்தானேம்மா செய்வாங்க.சந்தோஷை அழைச்சுக்கிட்டு போ.. சந்தோஷ் கிளம்புடான்னு சொல்றார்.

வீட்டில் சமாதானம்

வீட்டில் சமாதானம்

காரை இங்கேயே நிறுத்திருங்க.. நான் வீட்டுக்கு நடந்து போயிக்கறேன்னு சொல்றா ஜனனி. இவ்ளோ தூரம் நடக்கணுமா... ஏன் ஜனனி. வீட்டுக்கு வந்து விட்டுடறேனேன்னு சொல்றான் சந்தோஷ். அதற்குள் வீட்டுக்கு போன் செய்து, அப்பா அவர் வெளியூர் போறார், அவர் வர 10 நாளுக்கு மேல ஆகும்னு, அம்மா வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுத்துட்டு வான்னு மாமா சொன்னார், நான் வந்துகிட்டு இருக்கேன்பான்னு சொல்லிட்டு, காரை விட்டு இறங்கறா ஜனனி.

ஏக்க மொழி

ஏக்க மொழி

பார்வையில் இத்தனை உணர்ச்சிகளை காண்பிக்க முடியுமா என்பது போல இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து நிக்கறாங்க. கிளம்புறேன்னு சொல்லிட்டு போறா ஜனனி..சந்தோஷ் மவுனமாக நிற்க, திரும்பி பார்க்கறா ஜனனி.. அவன் மனம் வேண்டாம் என்க, தலையோ சும்மா லேசாக இப்படியும் அப்படியும் சரி என்பது போல ஆடுது.வீட்டின் வாசலில் நின்று சந்தோஷைத் பார்க்கிறாள், அவனும் இவளையே பார்த்தபடி நிற்கிறான்.

கல்யாணம்னாங்க...ரெட்டைத் தாலின்னாங்க.. ரெட்டைப் புள்ளை பொறக்கும்னாங்க... இப்போ ரெண்டு பேரையும் பிரிச்சு வச்சுட்டாங்க...

English summary
color's Tamil TV marriage serial romance, failure, marriage, marriage, division, ecumunu is very good.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X