For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்பா நீங்க படகுப் போட்டியில் ஜெயிச்சே ஆகணும்... வீர மகளின் ஆசை!

Google Oneindia Tamil News

சென்னை: சன் டிவியின் கிழக்கு வாசல் சீரியல் மீனவர்கள் குடும்பங்களை அந்த ஊரின் இரண்டு பெரும் தலைகள் இரண்டாக பிரித்து பாதுகாக்கும் கதை.

தேவராஜூக்கு ஆதரவாக பாதி மீனவ குடும்பங்கள், நாகப்பனுக்கு ஆதரவாக பாதி மீனவ குடும்பங்கள் என்று இரண்டு பிரிவுகளாக இருக்கின்றனர்.

சண்டை, வெட்டு ,குத்து என்று தேவராஜுக்கும், நாகப்பனுக்கும் துணை நிற்பது இவர்கள்தான்.

படகுப் போட்டியில்

படகுப் போட்டியில்

தேவராஜ், நாகப்பன் இருவரும் படகுப் போட்டிக்குத் தயாராகிறார்கள். அந்த ஊர் போலீஸ் படகுப் போட்டின்னா என்னா.. கேரளாவில் நடக்குமே அது போலாவான்னு கேட்கறாங்க.

இது வேற

இது வேற

இல்லைங்க சார், இது வேற விதமான படகுப் போட்டி.. இதுல நாகப்பன், தேவராஜ் மட்டும்தானா கலந்துக்குவாங்க . யார் ஜெயிக்கறாங்களோ... அவங்கதான் மீன் குத்தகை எடுப்பாங்க. அவங்க சொல்ற விலையிலதான் மீன்களை விக்கணும்னு ஒரு கான்ஸ்டபிள் சொல்றார்.

அப்பா படகுப் போட்டிக்கு

அப்பா படகுப் போட்டிக்கு

நாகப்பனின் இளைய மகள் அக்கா யாழினியிடமும், அம்மாவிடமும் அப்பா படகுப் போட்டிக்கு போக வேணாம்.. அக்கா நீயும், அம்மாவும் அப்பாகிட்ட சொல்லுங்க. எனக்கு அப்பாவுக்கு எதாவது நடந்துருமோன்னு பயமா இருக்குன்னு சொல்றா.

கோரிக்கை

கோரிக்கை

நாகப்பன் வீட்டு முன்னாடி மீனவர்கள் குவிந்து இருக்காங்க. ஐயா.. ரெண்டு வருஷமா தேவராஜ் இந்த போட்டியில ஜெயிச்சு, நம்ம ஆட்களை அடிமை மாதிரி நடத்தி , மீன்களை கம்மி விலைக்கு வித்து நஷ்டம் குடுத்துகிட்டே இருந்தாங்க... இந்த முறையாவது நீங்க ஜெயிக்கணும் ஐயான்னு கெஞ்சறாங்க.

நிச்சயம் ஜெயிக்கணும்

நிச்சயம் ஜெயிக்கணும்

கவலைப் படாதீங்கலே.. இந்த வருஷம் கண்டிப்பா நான் ஜெயிச்சுருவேன்னு சொல்றார். அப்பா இந்த முறை படகுப் போட்டியில் நீங்க ஜெயிச்சே ஆகணும்ப்பா.. நீங்க ஜெயிச்சதான் இந்த மக்களுக்கு நல்லது செய்ய முடியும்னு பெரிய பொண்ணு யாழினி சொல்றா.

சின்ன பொண்னு அப்பாவுக்கு என்ன ஆகுமோன்னு பயப்படறா... பெரிய பொண்ணு வீரமா அப்பாவை கலந்துக்கிட்டு ஜெயிக்க சொல்றா... இப்படிப் போகுது கதை!

English summary
Sun TV's kizhakku vasal serial fisherman's family is remembered by two big heads of the town.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X