• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்ணுக்கு பெண்ணே பக்கா சப்போர்ட்.. ஆஹா.. சூப்பர்பா!

|

சென்னை: சன் டிவியின் சுமங்கலி சீரியலில் பெண்ணுக்கு பெண்ணே ஆதரவு தருவது மாதிரியான காட்சி ரொம்ப நல்லா இருந்துச்சு. சும்மா வெறுமனே ஆதரவு இல்லைங்க. பழிக்கு பழி ஆதரவு.

சபாலிஸ்ட சந்தோஷ், தனது வீட்டில் இருக்கும் நித்யாவின் மேல் சபலத்துல இருக்கான்.இவளை பார்க்கறப்போ எல்லாம் இவை மேல ஆசை வருது.. அதனால அவளை எப்படியாவது வீட்டை விட்டு துரத்தணும்னு பல வேலைகள் பார்க்கறான். அதுல ஒண்ணுதான் அவ ஆசையா சமைச்சு வச்சிருந்த சாப்பாட்டுல உப்பு காரத்தை அள்ளிக் கொட்டியது.

இது சந்தோஷ் மனைவி அனுவுக்கும் சந்தோஷ் அம்மா மூலமாகத் தெரிஞ்சுருது. ரெண்டு பேருக்குமே சந்தோஷ் ஏன் இப்படி நடந்துக்கறான்னு சந்தேகம். சந்தோஷ், அனுவுடன் செஸ் விளையாடிட்டு இருக்கும்போது, நித்யா பேரை கேட்டவுடனே செஸ் போர்டையே தள்ளி விட்டு எழுந்துக்கறான்.

இளமையும் அழகும் துள்ளி விளையாடும்.. ஹோல்ட் ஆன்... இது மாமியாருங்கோவ்!

நான் சமைக்கறேன்

நான் சமைக்கறேன்

சமாதானப் படுத்திவிட்டு, சமைக்க போறேன்னு சொல்றா அனு. நான் சமைக்கறேன் அ னு.. எப்படி சமைக்கறதுன்னு மட்டும் பக்கத்தில் இருந்து சொல்லி குடுன்னு சொல்றான் சந்தோஷ். அனு சொல்ல சொல்ல அருமையாக சமைத்து

அவ்ளோ ருசி

அவ்ளோ ருசி

முடிச்சாச்சு அனு, இரு டேஸ்ட் பார்க்கறேன்னு சொல்லிட்டு, டேஸ்ட் பார்க்கறான் . ஐயோ.. சான்ஸே இல்லை.. அவ்ளோ ருசி.. சரி வா.. நான் குளிச்சுட்டு வரேன். அம்மாவும் வரட்டும் சாப்பிடலாம்னு கிச்சனை விட்டு கிளம்பறான்.

உப்பு காரம்

உப்பு காரம்

அவன் வெளியே சென்றவுடன் அனு, அவன் சமைத்தவைகளில் உப்பு , காரத்தை அள்ளிக் கொட்டுகிறாள், அவன் குளிச்சுட்டு வந்துட , அம்மாவும் வந்துவிடுகிறார்.அம்மா சாப்பிடலாமா, என்னோட சமையல்மான்னு சொல்றான் சந்தோஷ்.

அம்மா சாப்பிட

அம்மா சாப்பிட

அட உனக்கு எப்படிடா சமைக்கத்தெரிஞ்சுது. ஒரு டீ கூட போட தெரியாதுன்னு அம்மா சொல்ல, இல்லைம்மா அனு சொல்ல சொல்ல நான் சமைச்சேன்.. உட்காரும்மா சாப்பிடலாம்.னு சொல்றான். பிள்ளை சம்பாதிச்சு சாப்பிடவே குடுத்து வச்சிருக்கணும்னு சொல்லுவாங்க. இதுல. பிள்ளையே சமைச்சு குடுத்தா நான் எவ்ளோ குடுத்து வச்ச அம்மான்னு சொல்லிட்டு சாப்பிட உட்காருகிறாங்க.

ஆ.. காரம்

ஆ.. காரம்

ரெண்டு பேருக்கும் சந்தோஷ் பரிமாறுகிறான். வாயில் வச்ச உடனே தூதூன்னு துப்பறாங்க. என்னடா சூப்பரா சமைச்சுருக்கேன்னு சொன்ன இவ்ளோ உப்பு காரமான்னு கேட்கறாங்க.அனுவும் அப்படியே கேட்க விக்கித்து போகிறான் சந்தோஷ்.

இப்படித்தான்

இப்படித்தான்

அம்மா சொல்றாங்க, அன்னிக்கு நித்யா கூட இப்படித்தான் சொன்னா, நான் நல்லாத்தான் சமைச்சு வச்சிட்டு போனேன், எப்படி உப்பு காரம் வந்துச்சுன்னு தெரியலைன்னு. அப்படியா அத்தை இதெல்லாம் எனக்கு தெரியாதே.. சரி ..சாப்பாடு ஆர்டர் பண்ணலாம்னு, சொல்லிட்டு ஆர்டர் பண்ணினா உடனே சாப்பாடு வந்துருது.

10 வது நிமிஷம்

10 வது நிமிஷம்

இப்போதான் அனு வாயைத் திறக்கறா... எப்படி 10 வது நிமிஷம் சாப்பாடு வந்துச்சுன்னு பார்க்கறீங்களா சந்தோஷ்... அன்னிக்கு நீங்க அனுவுக்கு செய்ததுதான். அவள் பாவம், பழைய நினைவுகளை மறந்துட்டு, நாமே கதின்னு கிடக்கறா. ஏதோ டிராவல்ஸ் ஆஃபீஸ்ல உங்களை கேட்காம கம்பெனி நல்லதுக்காக சில முடிவுகள் எடுத்திருக்கா அதுக்கா இப்படி செய்வீங்க...

நாடகம்

நாடகம்

உங்களுக்கு பாடம் புகட்டத்தான் நானும் அத்தையும் சேர்ந்து இப்படி செய்தொம்... ஆசையா சமைச்சு வச்சதில இப்படி செய்தா மனசு எப்படி வலிக்கும்னு உங்களுக்கு புரிய வைக்கத்தான் இந்த நாடகனும்னு அனு சொல்ல, நித்யாவும் வந்துடறா..வா நித்யா.. நீ அன்னிக்கு சமைச்சு வச்சிருந்ததுல உப்பு காரம் கூடி போச்சுல்ல, அதே மாதிரி இன்னிக்கு சந்தோஷ் சமைச்சதுலயும் ஆயிருச்சு. சாப்பாடு வந்திருக்கு.. சேர்ந்து சாப்பிடலாம் வான்னு அனு சொல்றா சந்தோஷ்.. எனக்கு இப்போ பசியில்லைன்னு சொல்லிட்டு போறான்.

பெண்ணுக்கு பெண்ணே இங்கே பக்கா சப்போர்ட்... இந்த மாதிரி காட்சிகள் குடுமபத்துக்கு தேவையாத்தான் இருக்கு.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
After completing, you will see two tasting and see Tast. Wow .. Chance no .. Wow tasti .. Okay come .. I am bathing and come .. Mother will come. He leaves the kitchen off saying we can eat together.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more