For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாழ்க்கையில இவருக்குதாங்க கோயில் கட்டி கும்பிடணும்...!

Google Oneindia Tamil News

சென்னை: கல்யாணத்தின் போது கொஞ்சம் நெருங்கி நில்லுங்கன்னு சொல்ற போட்டோ கிராபருக்கு கோயில் கட்டி கும்பிடணும்னு சொல்லும் அளவுக்கு ஜீ தமிழ் டிவியின் தமிழா தமிழா நிகழ்ச்சியை நடத்தி இருக்கார் கரு.பழனியப்பன்.

திருமணம் நிச்சயித்த பின் இருவரும் திருட்டுத் தனமாக சந்தித்து கொண்டது...வரும் கால கணவர் கொடுத்த இன்ப அதிர்ச்சிகள் என்னென்ன என்பது குறித்து...

திருமணத்தில் புகைப்பட கலைஞர்... வீடியோ கலைஞர் நெருங்கி நில்லுங்கள் என்று நம்மை நிற்க வைத்த மறக்க முடியாத தருணம் என்பது குறித்தெல்லாம் பேசினார். இதில் கலந்து கொண்டவர்கள் இதற்கு சளைக்காமல் ஈடு கொடுத்து தங்கள் அனுபவங்களை கூறினர்.

சர்பிரைஸ் கொடுத்தார்

சர்பிரைஸ் கொடுத்தார்

எனக்கு கிரிக்கெட் பிடிக்கும் சார்... அதை எங்களுக்கு நிச்சயதார்த்தம் ஆனபோது சொல்லி இருந்தேன். ஒரு நாள் சந்திக்க வர சொல்லி இருந்தார். அப்போ ஐபிஎல் மேட்ச் நடந்துகிட்டு இருந்தது. சின்னசாமி ஸ்டேடியம் பக்கம் வரவச்சு அங்கிருந்து பத்து நிமிஷம் நடக்க வச்சு பஸ் ஸ்டாப்பெல்லாம் தாண்டி போயிகிட்டே இருந்தார். என்னடா இதுன்னு பார்த்தா ஸ்டேடியம் வந்துருச்சுன்னு சொன்னார்.

கேமிரா பயமில்லையா

கேமிரா பயமில்லையா

கேமிரா ஷூட் செய்துருமோன்னு பயமில்லையான்னு கரு பழனியப்பன் கேட்டபோது... பயமாத்தான் இருந்துச்சுன்னு அந்த பெண் சொன்னார். பிறகு எல்லாரையும் பார்த்து கேட்டார்... வாழ்க்கையில் முதன் முதலில் நம்மை நெருங்கி நில்லுங்க சார்னு சொல்றது போட்டோ கிராபர்தான். அவர் நிற்க சொல்லி நீங்க நிற்க தவறிய போஸ் எதுன்னு கரு. பழனியப்பன் கேட்டார்.

வேட்டி அவிழும்

வேட்டி அவிழும்

ஒரு பெண் சொன்னார், தூக்கிப் பிடிக்க சொல்லிய போஸ் சார்னு.. அப்போது தூக்கி பிடிக்க சொல்லும்போது வேட்டி அவிழ்ந்துரும் சார்.. இல்லை நம்மை விட்ருவாங்கண்ணு .. இப்போ ட்ரை பண்ணுங்கன்னு சொல்ல... அயோன்னு சொல்ற அளவுக்கு ஆளாளுக்கு ட்ரை செய்தார்கள். அப்போது பேசிய கரு. பழனியப்பன்.. இதுதான் சாக்குன்னு.. அங்கே சொல்லாததை எல்லாம் இங்கே முயற்சி செய்யாதீர்கள் என்று.

தம்பதியர்கள் போஸ்

தம்பதியர்கள் போஸ்

தம்பதியர்கள் போஸ் செய்ததை பார்த்தால் கல்யாணத்தில் செய்ய முடியாததை எல்லாம் இங்கு ஜீ தமிழ் டிவியின் தமிழா தமிழா மேடையில் வாய்ப்பு கிடைத்தது என்று முயற்சி செய்தது போலத்தான் இருந்தது. நீங்களும் ஞாயிறு இரவு 8 மணிக்கு பாருங்கள் உங்களுக்கே தெரியும். வாழ்க்கையில் ஜீ தமிழ் டிவியின் தமிழா தமிழா நிகழ்ச்சிக்கு கோயிலு கட்டி கும்பிடணும்.

English summary
The photographer at the wedding ... the videographer talked about the unforgettable moment that made us stand up. Participants tirelessly recounted their experiences.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X