For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வந்துருச்சு.. கே டிவிக்கு ஒரு சரியான போட்டி.. ஜீ திரை!

Google Oneindia Tamil News

சென்னை: தனி ஒருவனாக சினிமாப் படங்களை திரையிடுவதில் சாம்ராஜ்ஜியம் நடத்தி வருகிறது கே டிவி. என்னதான் விஜய் சூப்பர் அது இது என்று இருந்தாலும் கூட கே டிவிக்கு உள்ள மவுசு அப்படியேதான் இருக்கிறது.

ஆனால் இப்போது கே டிவிக்கு சவால் விட புதிதாக ஒரு சானல் வந்து விட்டது.

ஜீ குழுமத்திலிருந்து வெளியாகும் ஜீ திரைதான் அந்த புதிய சானல். புதிய பொழுது போக்கு சானலாக வெளியாகும் ஜீ திரையில் திரைப்படங்களுக்கே அதிக முக்கியத்துவம் தரப்படும் என்று தெரிகிறது.

ஜீ குழுமம்

ஜீ குழுமம்

இந்தியாவின் மிகப் பெரிய சானல் குழுமம்தான் ஜி டிவி. தமிழிலும் தனி முத்திரை பதித்து வரும் ஜீ தமிழ் டிவிக்கு பக்க பலமாக தற்போது ஜீ திரை பிறக்கவுள்ளது. விரைவில் இந்த புதிய சானல் ஒளிபரப்பைத் தொடங்கவுள்ளதாம்.

புத்தம் புதிய திரை

இதுதொடர்பான விளம்பரங்களையும் ஜீ திரை ஒளிபரப்பத் தொடங்கி விட்டது. வெள்ளித்திரையின் புத்தம் புது பார்வையாக, உங்களை மகிழ்விக்க வருகிறது ஒரு வேற லெவல் Entertainment சேனல்! மிக விரைவில், ஜீ திரை, இரத்தத்தில் கலந்தது சினிமா! #ZeeThirai #RaththathilKalandhadhuCinema #Viraivi

நான்கு மொழிகள்

நான்கு மொழிகள்

இது மட்டுமல்லாமல் போஜ்புரி, கன்னடம், பஞ்சாபி ஆகிய மொழிகளிலும் இந்த சானல் பிறக்கிறது. இதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு புதிய சினிமா சானல் கிடைத்துள்ளதாக கருதலாம். மேலும் இது கே டிவிக்கு விடப்படும் மறைமுக சவாலும் கூட.

செம விருந்து

செம விருந்து

ஜீ திரை டிவி மூலம் ரசிகர்களுக்கு பல புதிய படங்களைக் காட்டி மகிழ்விக்கப் போகிறார்களாம். மெர்சல், 2. ஓ உள்ளிட்ட பல படங்கள் ஜீ டிவி வசம் உள்ளன என்பது நினைவிருக்கலாம். ஜீ திரை வசம் கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்கள் இருக்கிறதாம்.

விரைவில்

விரைவில்

பிற்பகல் நேரங்களில் பிரேக் ஃப்ரீ படங்களையும் ஜீ திரை ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளதாம். இது கே டிவிக்குத்தான் சிக்கலாகும் என்று சொல்கிறார்கள். இந்த மாதம் நடைபெறவுள்ள ஜீ சினிமா விருதுகள் விழாவின்போது இந்த புதிய சானல் தொடங்கப்படவுள்ளது.

Sembaruthi serial: மனசுக்குள்ளே இருக்கும் மாமாவை கேட்டு முடிவு.. எத்தனை நாளைக்கு?Sembaruthi serial: மனசுக்குள்ளே இருக்கும் மாமாவை கேட்டு முடிவு.. எத்தனை நாளைக்கு?

English summary
The realm of screening cinematic films as a single person is running on TV. Whatever Vijay is super, the mouse on K TV remains intact. But now a new channel has come to challenge K TV.The new channel is the Zee Screen released from the Zee Group. The new entertainment channel, the Zee Screen, seems to be giving more importance to the movies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X