திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நவ.16 சபரிமலை நடைதிறப்பு.. நாள் ஒன்றுக்கு 1,000 பேர் மட்டுமே அனுமதி.. தேவசம்போர்டு அறிவிப்பு

நடை திறக்கும்போது, நாள் ஒன்றுக்கு 1000 பேர் மட்டுமே அனுமதி என தேசம்போர்டு அறிவித்ததுள்ளது

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: வரும் நவம்பர் 16-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுவதால், நாள் ஒன்றுக்கு 1000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

இவ்வளவு நாள் கொரோனா தொற்று காரணமாக, நாடு முழுவதும் பல்வேறு நெறிகள் அமலில் இருந்தன.. தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கு அளிக்கப்பட்டு, தளர்வுகளும் அமலாகி வருகின்றன.

 1,000 Pilgrims To Be Allowed At Sabarimala Temple During Pilgrim Season

அந்த வகையில் கேரளாவில் இன்னும் தொற்று பாதிப்பு குறையாத நிலையில், சபரிமலை நடை திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக நடை திறந்தால், தினந்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டு வருவது வழக்கம்.

7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் 7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் "ஆளுநரின் ஆணைப்படி".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி

ஆனால், தற்போது தொற்று பாதிப்பு கருதி, நாள் ஒன்றுக்கு 1000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேசவம்போர்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடைதிறந்த பிறகு ஆரம்ப காலங்களில் தினமும் 1000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.. வார இறுதி நாட்களில் 2 ஆயிரம் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.. மண்டல பூஜை மற்றும் மகர விளக்கன்போது 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

தரிசனத்துக்கு 24 மணி நேரத்துக்கு முன்பு கொரோனா டெஸ்ட் செய்திருக்க வேண்டும்.. தொற்று இல்லை என்று நெகட்டிவ் சர்டிபிகேட் வைத்திருப்பவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.. சன்னதிக்கு வரும் பக்தர்கள் இரவில் அங்கு தங்குவதற்கு அனுமதிக்கப்படாது" என்று கூறப்பட்டுள்ளது.

English summary
1,000 Pilgrims To Be Allowed At Sabarimala Temple During Pilgrim Season
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X