திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சபரிமலையில் இதுவரை 100 பெண்கள் தரிசனம் செய்துள்ளனர்.. கேரளா அமைச்சர் பரபர பேட்டி!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த நடைதிறப்பில் மட்டும் சுமார் நூறு பெண்கள் தரிசனம் செய்துள்ளனர் என்று கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்து இருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    100 பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்துள்ளனர்-கேரளா அமைச்சர்- வீடியோ

    திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த நடைதிறப்பில் மட்டும் சுமார் நூறு பெண்கள் தரிசனம் செய்துள்ளனர் என்று கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்து இருக்கிறார்.

    சபரிமலை கோவிலுக்குள் கடந்த 2ம் தேதி நுழைந்த இரண்டு அங்கு சாமி தரிசனம் செய்து உள்ளனர். இவர்கள் இருவரும் 50 வயதிற்கும் குறைவான பெண்கள் ஆவர்.

    மலப்புரம் பகுதியை சேர்ந்த கனகதுர்கா என்ற 46 வயது பெண்ணும், கோழிக்கோடு பகுதியை சேர்ந்த பிந்து என்ற 40 வயது பெண்ணும் இன்று அதிகாலை சபரிமலை கோவிலுக்குள் சென்றுள்ளனர். இந்த சமயம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

    பெண்கள்

    பெண்கள்

    இந்த நிலையில் சபரிமலை சம்பவம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த நடைதிறப்பில் மட்டும் சுமார் நூறு பெண்கள் தரிசனம் செய்திருக்க வாய்ப்புள்ளது. சபரிமலை கோவிலில் தரிசனம் செய்த பெண்களின் விவரங்கள் பதிவு செய்யப்படவில்லை.

    வயது இல்லை

    வயது இல்லை

    வெறுமனே பெயர்கள் மட்டும்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. வயது பதிவு செய்யப்படவில்லை. இதனால் 100 பெண்களுக்கும் அதிகமாக கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்திருக்க வாய்ப்பு இருக்கிறது. சபரிமலை கோவிலுக்குள் பெண்களை செல்ல விடாமல் தடுப்பது முறையற்றது.

    தவறு

    தவறு

    அது பண்டையகால நடைமுறை. அதை பின்பற்றுவது தவறு. கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பதே சரியானது. இதற்கு எதிராக போராடுவது தவறான விஷயம்.

    இறுதி தீர்ப்பு

    இறுதி தீர்ப்பு

    சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவிற்கு எதிராக பக்தர்களை சிலர் தூண்டிவிடுகிறார்கள். அரசு இவர்களை கண்காணித்து வருகிறது. இவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். உச்ச நீதிமன்றத்தை மதித்து நடப்பதே மிகவும் சரியானதாக இருக்கும், என்று அவர் கூறியுள்ளார்.

    English summary
    100 young women had darshan in Sabarimala says Kerala Minister Kadkampally Surendran.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X