கர்ப்பம்.. யூடியூப் பார்த்து ரூமில் சிறுமி செய்த காரியம்.. சிக்கிய பக்கத்து வீட்டுக்காரர்
திருவனந்தபுரம்: யூடியூப் வீடியோக்களை பார்த்து 17 வயது சிறுமி ஒருவர் குழந்தை பெற்றுக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவின் மலப்புரம் மாவட்டம் கோட்டக்கல் பகுதியை சேர்ந்தவர் இந்த 17 வயது சிறுமி.. இப்போது தொற்று காரணமாக அங்கு ஸ்கூல் லீவு என்பதால், ஆன்லைனிலேயே கல்வி பயின்று வருகிறார்..
சென்னையில் கொடூரமாக கொல்லப்பட்ட விசிக பிரமுகர்.. வெளியான சிசிடிவி காட்சி.. 7 பேர் சிக்கினர்!
இவருக்கு தனியாக வீட்டுக்குள் ஒரு ரூமை பெற்றோர் ஒதுக்கி தந்துள்ளனர்.. அந்த ரூமை விட்டு பெரும்பாலும் சிறுமி வெளியே வரவே மாட்டாராம்..

தனி ரூம்
அவருக்கு தேவையான சாப்பாட்டை, பெற்றோர் உள்ளே கொண்டு போய் கொடுத்துவிட்டு வெளியே வந்து விடுவார்கள்.. அந்த ரூமிலேயே டிவி பார்ப்பது, படிப்பது என்பதை சிறுமி வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில், கடந்த 26-ம்தேதி, சிறுமியின் ரூமில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது.. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், ரூமுக்குள் சென்று பார்த்தனர்.. அப்போது சிறுமியின் கைகளில் பச்சிளம் குழந்தை இருந்துள்ளது..

சிகிச்சை
தங்களையும் மீறி வீட்டுக்குள் அந்த குழந்தை எப்படி வந்திருக்கும் என்று பதறிபோய் விசாரித்தனர். அப்போதுதான், அது தனக்கு பிறந்த குழந்தை என்றும், பிறந்து ஒரு வாரம் ஆனது என்றும் சிறுமி சொல்லி உளளார்.. இதை கேட்டு பெற்றோருக்கு தலையே சுற்றிவிட்டது.. உடனடியாக மகளை மஞ்சேரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.. போலீசாருக்கும் விஷயம் தெரிந்து விரைந்து வந்தனர்..

பலாத்காரம்
அதேபோல குழந்தைகள் நல அதிகாரிகளும் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியானது.. இதை கேட்டு பெற்றோர் மேலும் அதிர்ந்து போனார்கள்.. அந்த இளைஞர் பக்கத்து வீட்டில் வசிப்பவராம்.. 21 வயதாகிறது.. வீட்டில் ஆள் இல்லாதபோதெல்லாம் சிறுமியின் ரூமுக்குள் நுழைந்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.. இதன்மூலம் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார்.

சிறுமி கர்ப்பம்
ஆனால், சிறுமிக்கோ தன்னுடைய வயிற்றில் வளரும் சிசுவை கலைக்க மனமில்லை.. பெற்றோரிடம் சொல்லவும் தைரியம் இல்லை.. அதனால், வீட்டுக்கு தெரியாமல் கர்ப்பத்தை மறைத்து வந்துள்ளார்.. மருத்துவமனைக்கு அடிக்கடி செக்-அப்புக்கும் சென்று வந்துள்ளார்.. குழந்தையின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்று அடிக்கடி டாக்டர்களிடம் ஆர்வத்துடன் கேட்டு வந்துள்ளார்.

நிறைமாத கர்ப்பிணி
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சமயத்தில்தான், மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதி கிடைக்காது என்ற விஷயம் சிறுமிக்கு தெரியவந்தது.. அதனால் என்ன செய்வதென்று தெரியாமல், வீட்டிற்குள் யாருமில்லாத நேரத்தில், யூடியூப் பார்த்து குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.. இப்போது சிறுமியும், குழந்தையின் உடல்நலமும் ஓரளவு தேறி வருகிறது.. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்..

பலாத்காரம்
சிறுமியை பலாத்காரம் செய்த அந்த கொடூரனை கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர். யூடியூப் வீடியோ பார்த்து குழந்தையை பெற்று கொள்ளும்படி பக்கத்து இளைஞர் ஐடியா தந்துள்ளார்.. அதுமட்டுமல்ல, தொப்புள் கொடியை எப்படி அகற்றவேண்டும் என்றுகூட அந்த இளைஞர்தான் சிறுமிக்கு கூறியுள்ளார்.. கர்ப்பமடைந்த 3வது மாதமே சிறுமி வயிறு வலி என்று வீட்டில் சொல்லி இருக்கிறார்..

சிகிச்சை
அதற்காக தனியார் மருத்துவமனைக்கும் அழைத்து சென்றபோது, அவருக்கு கேஸ்ட்ரிக்ஸ் தொடர்பான சிகிச்சைகளும் வழங்கப்பட்டிருக்கிறது... அதற்கு பிறகுதான் சிசு வயிற்றில் வளர தொடங்கி உள்ளது. பெற்ற மகள் கர்ப்பமாக இருப்பது, அதே வீட்டில் உள்ள பெற்றோருக்கு தெரியாமல் போனது ஆச்சரியமாக உள்ளது.. ஆனால், அந்த சிறுமியின் அம்மாவுக்கு 50 வயதாகிறது.. அவர் சற்று பார்வை திறன் அற்றவராம்.. அப்பாவோ, நைட் வாட்ச்மேன் ஆக வேலை பார்த்து வருகிறார்..

பரபரப்பு
சம்பவத்தன்றுகூட, ரொம்ப நேரமாக ரூம் கதவு திறக்கப்படவில்லையே என்று அம்மாவுக்கு சந்தேகம் வந்துள்ளது.. ஆனால் ஆன்லைன் கிளாஸ் நடந்து கொண்டிருக்கும் என்று நினைத்தாராம். ஒரே வீட்டில் அப்பா - அம்மாவுக்கு தெரியாமல் ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டு, கர்ப்பமாகி, குழந்தையும் பெற்றெடுத்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை கூட்டி வருகிறது.