திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மோட்டார் கிடையாது.. ஒரு யூனிட் மின்சார செலவு கிடையாது.. சபரிமலைக்கு ஓடி வரும் 2 கோடி லிட்டர் தண்ணீர்

Google Oneindia Tamil News

சபரிமலை: ஒரு யூனிட் மின்சாரம் செலவில்லாமல், எந்த மோட்டார் உதவியும் இல்லாமல், 2 கோடி லிட்டர் குடிநீர் சபரிமலை சன்னிதானத்தில் சேமிக்கப்படுகிறது. புவி ஈர்ப்பு அடிப்படையில் இது சாத்தியமாகிறது.

குன்னார் அணையில் இருந்து குழாய் வழியாக நீர் சன்னிதானத்தில் உள்ள பண்டிதாவளத்திற்கு கொண்டு வரப்பட்டு 9 பெரிய நீர்த்தேக்கங்களில் தண்ணீர் சேமிக்கப்படுகிறது.

நீர்த்தேக்கங்கள் சபரிமலையின் மிக உயர்ந்த இடத்தில் அமைந்துள்ளன. இதனால், மோட்டார்கள் பயன்படுத்தாமல், நீர்த்தேக்கங்களிலிருந்து பல்வேறு கட்டிடங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. மொத்தம் ஐந்து நீர்த்தேக்கங்களில் தண்ணீர் சேமிக்கப்படுகிறது. அதில் நான்கு நீர்த்தேக்கங்களிலிருந்து விநியோகம் செய்யப்படுகிறது.

கல்லூரி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. காலேஜ் பீஸ் குறித்து யுஜிசி சூப்பர் அறிவிப்புகல்லூரி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. காலேஜ் பீஸ் குறித்து யுஜிசி சூப்பர் அறிவிப்பு

அணையிலிருந்து ஓடி வரும் தண்ணீர்

அணையிலிருந்து ஓடி வரும் தண்ணீர்

குன்னார் அணை மற்றும் செக் டேம் ஆகியவை சன்னிதானத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அடர்ந்த காட்டில் அமைந்துள்ளன. அணைகளை விட தாழ்வாக உள்ளது சன்னிதானம் அருகேயுள்ள நீர்த்தேக்கங்கள். எனவே, அணையிலிருந்து நீர்த் தேக்கங்களுக்கு தண்ணீர் தானாக பாய்கிறது. இரண்டு 6 அங்குல அகலமுள்ள இரும்பு குழாய்களில் நீர் செல்கிறது. ஆனால் இந்த குழாய்கள் இந்த ஆண்டு மூன்று முறை காட்டு யானைகளால் மிதித்து நொறுக்கப்பட்டன.

சுத்திகரிப்பு பணி

சுத்திகரிப்பு பணி

ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு முறை நீர்த்தேக்கங்களில் உள்ள நீர் குளோரினேட் செய்யப்படுகிறது. நீர் ஆணைய அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் நீரின் தரத்தை சரிபார்க்கிறார்கள். கடந்த 20 ஆண்டுகளாக, கொச்சி பெரும்பலத்தைச் சேர்ந்த பிரதீஷ் என்பவர் குளோரினேஷன் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார்.

புதிய நீர் தேக்கம்

புதிய நீர் தேக்கம்

புதிதாக கட்டப்பட்ட நீர்த்தேக்கத்தில் 70 லட்சம் லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும். இந்த தொட்டி 70 மீட்டர் நீளமும் 35 மீட்டர் அகலமும் கொண்டது. இது தவிர, 20 லட்சம் லிட்டர் திறன் கொண்ட 6 தொட்டிகளும், 18 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு தொட்டியும் உள்ளன.

தண்ணீர் தேவை

தண்ணீர் தேவை

பொதுவாக, புனித யாத்திரை நாட்களில் ஒரு நாளைக்கு சுமார் 70 லட்சம் லிட்டர் தண்ணீர் சன்னிதானத்திற்கு தேவைப்படுகிறது. அதிக பக்தர்கள் வருகை தரும் நாட்களில், தண்ணீர் பயன்பாடு ஒரு நாளைக்கு 1.15 கோடி லிட்டருக்கு மேல் செல்லும். பண்டிதாவளத்தில் உள்ள நீர்த்தேக்கங்களிலிருந்து அனைத்து கட்டிடங்கள், அன்னதான மண்டபம், மெஸ் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு நீர் வழங்கப்படுகிறது. ஆனால் எங்குமே மோட்டார்கள் பயன்பாடே கிடையாது. அற்புதம்தான்.

English summary
2 crore liters of drinking water is stored at Sabarimala without the cost of a unit of electricity and without any motor assistance. This is possible in terms of gravity.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X