திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2 லட்சம் வீடுகள்.. இலங்கை தமிழ் அகதிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கேரள அரசு.. பினராயி கலக்கல்!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: இலங்கையில் இருந்து பல வருடங்களுக்கு முன் கேரளாவில் குடியேற தமிழ் தோட்ட தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு கேரள அரசு சார்பாக வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது.

கேரளாவில் அனைவருக்கு வாழ்வு என்ற திட்டத்தின் கீழ், அரசு சார்பாக வீடற்ற மக்களுக்கு வீடு கட்டித்தரப்பட்டுள்ளது. மொத்தம் 2,14,262 லட்சம் குடும்பங்களுக்கு இந்த வீடு கட்டித்தரப்பட்டுள்ளது.

அரசு சார்பாக, முழுக்க முழுக்க நிலம் வரை எல்லாம் வாங்கப்பட்டு நல்ல நீர் வசதியுடன், இலவசமாக வீடு கட்டித்தரப்பட்டுள்ளது. கேரள அரசின் இந்த செயல் நாடு முழுக்க பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருக்கிறது.

என்ன செலவு

என்ன செலவு

இந்த திட்டத்திற்கு முதல் கட்டமாக மொத்தம் 670 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது. அதன்பின் 5851 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது. இந்த திட்டம் வெறும் இரண்டு வருடத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மிக துரிதமாக, நேர்த்தியாக இந்த வீடுகளை கட்டி முடித்து உள்ளனர். இந்த நிலையில் இந்த வீடுகளை, மக்களுக்கு வழங்கும் விழா நேற்று முதல் நாள் நடைபெற்றது. திருவனந்தபுரத்தில் இந்த விழா நடைபெற்றது.

யாருக்கு

யாருக்கு

இந்த திட்டத்தின் மூலம் 1500 இலங்கை தமிழ் அகதிகள் குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. ஆம் இலங்கைக்கு தமிழகத்தில் இருந்து தோட்ட தொழிலாளர்களாக பலர் பிரிட்டிஷ் காலத்தில் அழைத்து செல்லப்பட்டார்கள். பிரிட்டிஷ் ஆட்சி முடிந்த பின் இந்த தமிழர்கள் பலர் அங்கே வேலை இழந்தனர். இதனால் இலங்கையில் இந்த தமிழர்கள் மீண்டும் தமிழகம் , கேரளா, கர்நாடகாவில் சில பகுதிகளில் குடியேறினார்கள்.

ஏன் கேரளா

ஏன் கேரளா

கேரளாவில் இருக்கும் தேயிலை தோட்டங்களில் பணியாற்ற வேண்டும் என்பதற்காக இவர்கள் கேரளாவில் குடியேறினார்கள். கேரளாவில் குடியேறி பல வருடங்கள் ஆகியும் இவர்களின் வாழ்க்கை தரம் உயரவில்லை. இவர்களுக்கு என்று சொந்த வீடு இல்லை. இந்த நிலையில் கேரளாவில் வீடு இன்றி இருக்கும் 1500 தமிழ் தேயிலை தோட்ட பணியாளர் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

செம மாஸ்

செம மாஸ்

அரசு கட்டிய 2 லட்சம் வீடுகளில் இதுவும் அடக்கம். இது முழுக்க முழுக்க இலவசம் ஆகும். அரசு இந்த வீட்டை கட்டும் போது எந்த பாகுபாடும் பார்க்காமல் கட்டிக்கொடுத்து இருக்கிறார்கள். அதாவது மதம், ஜாதி, எப்போது இந்தியா வந்தீர்கள், தமிழரா என்பதை எல்லாம் பெரிய அளவில் பார்க்கவில்லை. வீடு இல்லாத எல்லா மக்களையும் சகோதரர்களாக பார்த்து வீடு கட்டிக் கொடுத்து இருக்கிறார்கள். அவர்களின் இந்த செயல் இலங்கை தமிழர்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

English summary
2 Lakhs homes constructed in Kerala by State Government for poor including Sri Lankan Tamils.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X