திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பசு விழுங்கிய 5 பவுன் சங்கிலி.. 2வருடத்துக்கு பின் சாணத்தில் மீட்பு.. கேரள ஆசிரியரின் நேர்மை

Google Oneindia Tamil News

Recommended Video

    2வருடத்துக்கு பின் சாணத்தில் 5 பவுன் சங்கிலி மீட்பு | இறந்து போன பெண் கரடியை தேடும் கரடி

    கொல்லம்: கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சதயமங்கலத்தில் ஸ்ரீதரன் என்பவருக்கு சொந்தமான பசுமாடு 2 ஆண்டுகளுக்கு முன்பு விழுங்கிய 5 பவுன் தங்கச்சங்கிலி தற்போது சாணத்தில் கிடைத்தது. இதனை அதன் உரிமையாளரிடம் ஆசிரியர் சுஜா உல்முல்க் தேடிச்சென்று ஒப்படைத்தார். இதனால் அவரை சமூக வலைதளத்தில் அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

    கேரளாமாநிலம் கொல்லம் அருகே சதயமங்கலம் பகுதியச் சேர்ந்தவர் ஷுஜா உல்முக். இவரது மனைவி விஷாஹினா.ஆசியர் தம்பதிகளான இவர்களுக்கு அந்த ஊரில் விவசாய நிலம் உள்ளது.இவர்கள் தங்கள் நிலத்துக்கு உரமாக அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதரன் என்பவரிடம் இருந்து சாணத்தை வாங்கி உள்ளனர்.

    ஒரு லாரி நிறைய வந்து இறங்கிய சாணத்தை உல்முக்கும், ஷாஹினாவும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பயிர்களுக்கு உரமாக இட்டனர். அப்போது ஒரு சாணத்தை உடைத்த போது அதில் 5 பவுன் தங்கச்சங்கிலி இருந்தது. அதில் இலியாஸ் என்றும் பொறிக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு ஆச்சர்யம் அடைந்த ஆசிரியர் உல்முக், அந்த தங்க சங்கிலையை உரியவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்.

    இலியாசுக்கு சொந்தம்

    இலியாசுக்கு சொந்தம்

    அதனை புகைப்படம் எடுத்து பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரப்பினார், ஆசிரியர் தம்பதியின் முற்சிக்கு பலனும் கிடைத்தது. அவர்களின் விசாரணையில், சதயமங்கலத்தில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள துடயனூர் தெக்கில் என்ற கிராமத்தைச் சேர்ந்த இலியாசுக்கு அந்த தங்க சங்கிலி சொந்தம் என்பது தெரிய வந்தது.

    2வருடத்துக்கு முன்பு மாயம்

    2வருடத்துக்கு முன்பு மாயம்

    இலியாஸ், சமூகவலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருந்த ஆசிரியர் உல்முக்கின் நம்பருக்கு போன் செய்து தனது சங்கிலிதான் என்று கூறினார். இதகுறித்து இலியாஸ் கூறுகையில், அந்த சங்கிலி எனக்கு சொந்தமானது, 2 ஆண்டுகளுக்கு முன்பு எனது மனைவி வீட்டில் வளர்த்த பசுவுக்கு புல் வைத்து கொண்டிருந்தார். அப்போது தாலியை கழற்றி அருகில் வைத்தார்.

    பசுவை விற்றுவிட்டோம்

    பசுவை விற்றுவிட்டோம்

    அப்போது அந்த செயின் காணவில்லை.நாங்கள் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. மாடு சங்கிலியை விழுங்கி இருக்கலாம் என சந்தேகம் வந்தது. அதன்படி சாணத்தையும் அடுத்த நாள் பார்த்தோம் அதில் இல்லை. அதன் பிறகு பசுவை விற்றுவிட்டோம். இப்போது உல்முக் பதிவிட்ட பின்னர் தான் எங்கள் தாலி செயின் என்பது தெரியவந்தது என்றார்.

    இலியாஸ் மகிழ்ச்சி

    இலியாஸ் மகிழ்ச்சி

    இதையடுத்து சதயமங்கலம் காவல்நிலையத்தில் வைத்து ஆசிரியர் உல்முக், இலியாசிடம் தங்கச்சங்கிலியை ஒப்படைத்தார். 2வருடங்களுக்கு முன்பு தொலைந்த 5 பவுன் தாலி மீண்டும் கிடைத்ததால் இலியாஸ் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு சென்றார். இதனை பார்த்து பலரும் ஆசிரியல் உல்முக்கை பாராட்டி வருகிறார்கள்.

    English summary
    2 years before missied gold chain, now get from cow Dung in kerala,
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X