திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேரளாவில் நேற்று 7 பேருக்கு மட்டும் கொரோனா - மருத்துவமனையில் 27 பேருக்கு சிகிச்சை

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்று 7 பேருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் சைலஜா வெளியிட்ட அறிக்கை:

கேரளாவில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த 4 பேருக்கும், பாலக்காடு, மலப்புரம் மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவருக்கும் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா லாக்டவுன்: 2 மாதங்களுக்குப் பின் ரயில் போக்குவரத்து- முதல் கட்டமாக 8 ரயில்கள் இன்று இயக்கம் கொரோனா லாக்டவுன்: 2 மாதங்களுக்குப் பின் ரயில் போக்குவரத்து- முதல் கட்டமாக 8 ரயில்கள் இன்று இயக்கம்

கொரோனா எப்படி வந்தது?

கொரோனா எப்படி வந்தது?

காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த 4 பேரும் சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் ஆவர். பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர் சென்னையில் இருந்தும், மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் குவைத்திலிருந்தும் வந்தவர்கள் ஆவர். வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்தவருக்கு கொரோனா நோயாளியுடன் தொடர்பில் இருந்ததின் மூலம் நோய் பரவியுள்ளது. கேரளாவில் நேற்று யாருக்கும் நோய் குணமாகவில்லை.

பாதிப்பு எண்ணிக்கை 519

பாதிப்பு எண்ணிக்கை 519

இதுவரை கேரளாவில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 519 ஆகும். 489 பேர் இதுவரை குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். தற்போது 27 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் 1307 பேர் வெளிநாடுகளில் இருந்து கேரளா வந்துள்ளனர். இவர்களில் 650 பேர் வீடுகளிலும், 641 பேர் கொரோனா முகாம்களிலும், 16 பேர் மருத்துவமனைகளிலும் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 229 பேர் கர்ப்பிணிகள் ஆவர்.

கண்காணிப்பில் 27, 986 பேர்

கண்காணிப்பில் 27, 986 பேர்

கேரளாவின் பல்வேறு பகுதிகளில் 27, 986 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 27,545 பேர் வீடுகளிலும், 441 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர். கொரோனா அறிகுறிகளுடன் மொத்தம் 157 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 37, 858 பேரின் உமிழ்நீர் மாதிரி பரிசோதிக்கப்பட்டதில் 37,098 பேருக்கு நோய் இல்லை என தெரியவந்துள்ளது.

Recommended Video

    China pressured WHO to delay global coronavirus warning ?
    புதியதாக நோய் தீவிரப் பகுதி

    புதியதாக நோய் தீவிரப் பகுதி

    இதுதவிர வெளிமாநில தொழிலாளர்கள், சுகாதாரத்துறையினர் மற்றும் சமூக நெருக்கம் அதிகமுள்ள 3,842 பேரின் உமிழ்நீர் மாதிரி பரிசோதிக்கப்பட்டதில் 3,791 பேருக்கு நோய் இல்லை என்று தெரியவந்துள்ளது. கேரளாவில் புதிதாக நோய் தீவிரமுள்ள ஒரு பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள நென்மேனி என்ற இடம் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து நோய் தீவிரம் உள்ள பகுதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.

    English summary
    Kerala Health Minister Shailaja said that Seven new Coronavirus cases were reported in the state on Monday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X