திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பேய் மாதிரி பாயும் தண்ணீர்.. கேரளாவில் மக்கள் நடமாடும் சாலையிலேயே இப்படி ஒரு நிலை.. திக் திக் வீடியோ

Google Oneindia Tamil News

Recommended Video

    கேரளாவில் மக்கள் நடமாடும் சாலையிலேயே இப்படி ஒரு நிலை.. திக் திக் வீடியோ

    திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த வருடத்தை போலவே இந்த வருடமும் பருவமழை தாமதமாக துவங்கியது. ஆனால் போன வருடம் போலவே, கன மழை பெய்து, ருத்ரதாண்டவம் ஆடிவருகிறது.

    இதுவரை 42 பேர் மழை சார்ந்த விபத்துகளில் கொல்லப்பட்டுள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது. 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    A flood video on Kerala goes viral

    இந்த நிலையில் கேரள வெள்ளம் தொடர்பான பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வருகிறது. அவற்றை பார்த்தாலே அச்சம் உறையச் செய்யும் அளவுக்கு உள்ளது.

    வயநாடு பகுதியில் நடந்த நிலச்சரிவு வீடியோக்கள் அதில் சிக்கியோர் நிலைமை என எதை நினைத்தாலும், நெஞ்சம் பதறுகிறது. வயநாடு பகுதிக்கு ராகுல் காந்தி நாளை நேரில் சென்று தனது தொகுதி மக்களுக்கு ஆறுதல் சொல்ல உள்ளார்.

    இந்த நிலையில், சமூக வலைத்தளத்தில் உலவும் ஒரு வெள்ள வீடியோவை பார்த்தால், திக் திக் ரகம். இந்த வீடியோ எந்த பகுதியில் எடுக்கப்பட்டது என தெரியவில்லை. ஆனால், கேரளாவின் மக்கள் நடமாட்டம் கொண்ட ஒரு சாலை பகுதியில்தான் இப்படி வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவது போல காட்சி உள்ளது.

    பேய் வெள்ளம் என்று சொல்வார்களே, அது இதுதான் என்று சொல்லும் அளவுக்கு அதன் இரைச்சலும், அடர்த்தியும், வேகமும் உள்ளது. நீங்களே பாருங்கள். ஷாக் ஆகிவிடுவீர்கள்.

    English summary
    A flood video on Kerala goes viral in social media, which shows a heavy water flow.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X