திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சபரிமலை: கொச்சி வந்தார் திருப்தி தேசாய்- ஆதரவாளர் மீது ஸ்ப்ரே மூலம் மிளகாய் பொடி வீச்சால் பரபரப்பு

Google Oneindia Tamil News

கொச்சி: சபரிமலை செல்வதற்காக தமது ஆதரவாளர்களுடன் பெண்ணிய சமூக செயற்பாட்டாளர் திருப்தி தேசாய் இன்று காலை கொச்சி விமான நிலையம் வருகை தந்தார். கொச்சியில் அவருடன் வந்த பிந்து அம்மணி மீது மிளகாய் பொடியை மர்ம நபர்கள் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதேநேரத்தில் சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கப்படவில்லை.

Activist Trupti Desai lands in Kochi to visit Sabarimalai

இருப்பினும் இந்த ஆண்டு சபரிமலைக்கு பெண்களை அனுமதிப்பது இல்லை என்பதில் கேரளா அரசு உறுதியாக இருந்து வருகிறது. சபரிமலைக்கு வரும் பெண்களை கேரளா அரசு திருப்பி அனுப்பி வருகிறது.

இந்நிலையில் சமூக செயற்பாட்டாளரான திருப்தி தேசாய் தமது ஆதரவாளர்களுடன் சபரிமலை செல்வதற்காக இன்று காலை கொச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருப்தி தேசாய், இன்று அரசியல் சாசனம் உருவாக்கப்பட்ட நாள். நாங்கள் சபரிமலை செல்வோம்.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வதை போலீசாரோ, கேரளா அரசோ தடுக்க முடியாது. அப்படி நாங்கள் தடுக்கப்பட்டால் நிச்சயம் நீதிமன்றம் செல்வோம் என்றார்.

இதனிடையே கொச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே திருப்தி தேசாயுடன் வந்த பிந்து அம்மணி என்பவர் மீது சிலர் மிளகாய் பொடியை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காரணமின்றி தலைமைச் செயலகத்திற்குள் நுழைய முடியாது... பாதுகாப்பு கெடுபிடிகாரணமின்றி தலைமைச் செயலகத்திற்குள் நுழைய முடியாது... பாதுகாப்பு கெடுபிடி

கடந்த ஆண்டு திருப்தி தேசாய் உள்ளிட்டோர் சபரிமலை செல்ல முயன்றபோது போராட்டம் நடத்தப்பட்டது. அதனால் அவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Social activist Trupti Desai landed at the Kochi airport for a second attempt at visiting the Sabarimalai temple.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X