நடிகையை சிதைத்து வீடியோ..போலீசாரை கொல்ல சதித் திட்டம்.. மீண்டும் கைதாகிறாரா பிரபல நடிகர்..?
திருவனந்தபுரம் : கேரள காவல்துறை அதிகாரிகளை கொல்வதற்காக சதித் திட்டம் தீட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் இன்று நடிகர் திலீப்புக்கு முன் ஜாமீன் மறுக்கப்பட்டால், உடனே அவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக உள்ளனர்.
கேரள மாநிலம் திருச்சூரில் படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்குத் திரும்பிய போது கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை ஒருவர் ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பலால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட உலகை மட்டுமல்லாது இந்தியா முழுவதும் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட நடிகை தரப்பில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி உட்பட 6 பேர் கைதாகினர். மேலும் நடிகைக்கு பாலியல் வன்கொடுமை கொடுக்கப்பட்டபோது உடந்தையாக இருந்ததாக நடிகையின் கார் ஓட்டுநர் என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இந்தியாவில் லாக்டவுன் தேவையில்லை.. ஏன் தெரியுமா?.. மத்திய அமைச்சர் பேட்டி!

மலையாள நடிகர் திலீப்
பாதிக்கப்பட்ட நடிகை கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் நேரில் அடையாளம் காட்டினார். இந்த வழக்கில் நடிகர் திலீப்புக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது . இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றம் மூலம் ஜாமீன் பெற்று அவர் விடுதலையான நிலையில் இந்த வழக்கு விசாரணை கொச்சியில் பெண் நீதிபதி தலைமையிலான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இயக்குனர் புகார்
இந்த விவகாரத்தில் நடிகர் திலீப்பை கைது செய்ய தீவிரம் காட்டி வந்த நிலையில் வழக்கை விசாரிக்கும் துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட கேரள காவல்துறை எனக்கு எதிராக நடிகர் திலீப் உள்ளிட்ட 6 பேர் சதித்திட்டம் தீட்டியதாகவும், நடிகையை பாலியல் பலாத்காரம் செய்த போது எடுத்த வீடியோவை சிலர் பார்த்ததாகவும் பிரபல இயக்குனரான பாலச்சந்திர குமார் கூறினார். இதையடுத்து போலீசாரை கொல்ல வேண்டும் என்ற நோக்கில் சதித்திட்டம் தீட்டியதாக திலீப் மீது கடுமையான பிரிவுகளில் மேலும் ஒரு வழக்கு கேரள காவல்துறை சார்பில் பதிவு செய்யப்பட்டது.

திலீப் கைதாக வாய்ப்பு
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி உள்ளிட்ட ஆறுபேர் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது திலீப்புக்கு முன்ஜாமீன் கொடுக்கக் கூடாது என கேரள போலீசார் கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் இன்று திலீப் முன் ஜாமீன் வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில் சதித்திட்டம் தீட்டிய வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சுனில் குமார் என்பவரின் தாய் சோபனா கூறியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஒருவேளை நடிகர் திலீப்புக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்து விட்டால் அவரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல்வரிடம் நடிகை புகார்
ஏற்கனவே தன்னை பாலியல் வன்கொடுமை செய்த போது , அந்த கும்பல் தன்னை வீடியோ எடுத்ததாகவும்,அந்த வீடியோவை திலீப் உள்ளிட்டோர் பார்த்ததாகவும் நடிகை கூறியிருந்தார். அந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க முதல்வர் பினராயி விஜயனிடம் நடிகை புகார் கூறி இருந்த நிலையில், சதித் திட்ட வழக்கிலும் நடிகர் திலீப்புக்கு பிடி இறுகுவதால் அவர் கைதாகவே அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.