• search
திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

போலீஸ் எஸ்பி கைகளை வெட்ட பிளான் போட்டாரா நடிகர் திலீப்.. பாய்ந்தது புதிய வழக்கு.. நடந்தது என்ன?

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: நடிகை பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் தன்னை கைது செய்த காவல் துறை எஸ்பி கே சுதர்சனத்தின் கைகளை வெட்ட திட்டமிட்டிருந்ததாக காவல் துறையினர் புதியதொரு வழக்கை பதிவு செய்திருந்தனர்.

தமிழ், மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை திருச்சூரிலிருந்து காரில் கொச்சிக்கு செல்லும் வழியில் கடத்தப்பட்டு கடந்த 2017ஆம் ஆண்டு பாலியல் தொல்லைக்குள்ளானதாக புகார் அளித்தார். அதன் பேரில் காரின் டிரைவர் பல்சர் சுனி உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதாகினர்.

அது போல் நடிகர் திலீப்பும் கைதாகி ஜாமீனில் விடுதலையானார். இந்த வழக்கு விசாரணை கொச்சியில் பெண் நீதிபதி தலைமையிலான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகர் திலீப்பின் நண்பரும் மலையாள இயக்குநருமான பாலச்சந்திரன் என்பவர் அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.

இந்த நாள்...கூட்டி கழிச்சு பார்த்தா கணக்கு வேற மாதிரி வரும்...சிம்புவை பங்கம் பண்ணும் நெட்டிசன்கள் இந்த நாள்...கூட்டி கழிச்சு பார்த்தா கணக்கு வேற மாதிரி வரும்...சிம்புவை பங்கம் பண்ணும் நெட்டிசன்கள்

பல்சர் சுனியை திலீப்புக்கு தெரியும்

பல்சர் சுனியை திலீப்புக்கு தெரியும்

அப்போது அவர் பல்சர் சுனியை திலீப்பிற்கு நன்றாகவே தெரியும். பல முறை இருவரையும் திலீப் வீட்டில் வைத்து சந்தித்துள்ளேன். மேலும் நடிகை பாலியல் துன்புறுத்தல் வீடியோ பிரதி ஒன்று திலீப்பிடம் உள்ளது. இந்த வீடியோவை திலீப் தனது நண்பர்களுடன் அமர்ந்து பார்த்ததை நான் பார்த்துள்ளேன். ஆரம்பத்தில் பல்சர் சுனியுடனான நட்பு குறித்து வெளியே கூறினால் தனக்கு ஜாமீன் கிடைக்காது என்பதால் வெளியே சொல்ல வேண்டாம் என திலீப் கேட்டுக் கொண்டார்.

முக்கிய சாட்சி சாகர் வின்சென்ட்

முக்கிய சாட்சி சாகர் வின்சென்ட்

தற்போது இந்த வழக்கின் முக்கிய சாட்சியான சாகர் வின்சென்ட் என்பவர் மூலம் வழக்கிலிருந்து தப்ப திலீப் முயற்சிக்கிறார். இந்த வழக்கில் தன்னை கைது செய்த காவல் துறை அதிகாரிகளையும் திலீப் பழிவாங்க முயன்றார். ஜாமீனில் வெளிவந்த பிறகு திலீப் தன்னை கைது செய்த காவல் துறை அதிகாரிகளை பழிவாங்க தனியாக ஓர் ஆலோசனையை நடத்தினார்.

முதல்வர் பினராயி விஜயனிடம் புகார்

முதல்வர் பினராயி விஜயனிடம் புகார்

இந்த தகவல்களை நான் எங்கு வேண்டுமானாலும் சொல்ல தயாராகவே உள்ளேன். ஏற்கெனவே கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதமும் எழுதியுள்ளேன் என பாலசந்திரகுமார் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் கேரளா குற்றப்பிரிவு காவல் துறையினர் நடிகர் திலீப் மீது எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இந்த புதிய எஃப்ஐஆரில் முதல் குற்றவாளியாக திலீப்பை சேர்த்துள்ளனர்.

யார் மீது எஃப்ஐஆர்

யார் மீது எஃப்ஐஆர்

அவரது சகோதரர் அனூப் இரண்டாவது குற்றவாளியாகவும் திலீப் மைத்துனர் சூரஜ் மூன்றாவது குற்றவாளியாகவும் 4ஆவது குற்றவாளியாக அப்புவும், ஐந்தாவது குற்றவாளியாக பாபு செங்கமாநாடு என்பவரும் சேர்க்கப்பட்டுள்ளார்கள். 6ஆவதாக பெயர் தெரிய ஒருவரை சேர்த்துள்ளார்கள். அந்த எஃப்ஐஆரில் இவர்கள் 6 பேரும் ஆலுவா கொட்டாரக்கடவில் உள்ள திலீப்பின் வீட்டில் வைத்து அவரை கைது செய்த அதிகாரிகளுக்கு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சதித்திட்டம் தீட்ட ஆலோசனை செய்தார்கள்.

எஸ்பி கையை வெட்ட சதி

எஸ்பி கையை வெட்ட சதி

2017ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி இரவு 10.30 முதல் 12.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இவர்கள் ஆலோசனை செய்துள்ளனர். அதில் என்னை கைது செய்த போலீஸ் எஸ்பி சுதர்சனின் கைகளை வெட்ட வேண்டும் என திலீப் கூறியதாக அறியமுடிகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் 20ஆம் தேதிக்குள் இந்த புதிய வழக்கு தொடர்பாக திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீஸார் நடிகர் திலீப்பிடம் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவுள்ளார்கள். இதனிடையே இயக்குநர் பாலசந்திரகுமாரிடம் வாக்குமூல்ம பெறவுள்ளனர். சஜோன், சுதர்சன், சந்தியா, பைஜு பாலோஸ், ஏவி ஜார்ஜ் ஆகிய 5 அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த திலீப் சதி செய்துள்ளதாக ஐஜி ஏவி ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

English summary
Malayalam Actor Dileep wanted to chop off hands of SP, it was quoted in FIR.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X