திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடியே சொன்னார்.. சரின்னுட்டேன்.. சுரேஷ் கோபி அதிரடி

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: தீனா திரைப்படத்தில் 'தல' அஜித் அண்ணனாக நடித்திருப்பாரே, அந்த நடிகரை நினைவு இருக்கிறதா.. ஆம்.. அவர்தான் சுரேஷ் கோபி. இப்போது பாஜகவின் கேரள தூண்களில் ஒருவர் இவர்தான்.

வளர முடியாத ஒவ்வொரு மாநிலத்திலும் நடிகர்களை இழுத்து வந்து ஓட்டு கேட்கும் யுக்தியை பின்பற்றி வருகிறது பாஜக. தமிழகத்தில் ரஜினிகாந்த், விஜய் ஆகியோரிடம் பிரதமர் மோடி நேரடியாகவே நெருக்கம் காட்டினார்.

ஆனால், விஜய், பதிலடியாக 'மெர்சல்' செய்துவிட்டதால், இப்போது அவரை ஜோசப் விஜயாக்கிவிட்டு ஆன்மீக ரஜினிகாந்த் பக்கம் மட்டும் கவனம் செலுத்தி வருகிறது பாஜக.

<strong>EXCLUSIVE:</strong> பரமக்குடியை கலக்கிய EXCLUSIVE: பரமக்குடியை கலக்கிய "உள்ளே வெளியே" .. அரசியல்வாதிகள் வெட்கப்பட வேண்டும் இதை பார்த்து

சுரேஷ் கோபி

சுரேஷ் கோபி

அதேநேரம், ரஜினிகாந்த்தோ, தனிக் கட்சி துவங்குவேன் என அறிவித்ததோடு, இந்த லோக்சபா தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என கையை விரித்துவிட்டார். ஆனால், கேரளாவில், சுரேஷ் கோபியை வளைத்துப் போடுவதில் வெற்றி பெற்றது பாஜக. 2016ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துவிட்டு பாஜகவில் இணைந்த சுரேஷ் கோபிக்கு ராஜ்யசபா எம்பி பதவி கொடுத்து அழகு பார்த்தது பாஜக.

திருச்சூர் தொகுதி

திருச்சூர் தொகுதி

இந்த நிலையில், திருச்சூர் தொகுதியில் லோக்சபா தேர்தலுக்கான பாஜக வேட்பாளராக சுரேஷ் கோபியை நிறுத்துவதாக நேற்று இரவு பாஜக அறிவித்துள்ளது. ஐக்கிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் பிரதாபன் மற்றும் இடதுசாரி ஜனநாயக கூட்டணியின் ராஜாஜி மேத்யூவிற்கு சுரேஷ் கோபி கடும் போட்டியாக விளங்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

3 தொகுதிகள் முக்கியம்

3 தொகுதிகள் முக்கியம்

ஏனெனில் பாஜக பெரிதும் நம்பும் தொகுதிகள், திருவனந்தபுரம், பத்தினம்திட்டா மற்றும் திருச்சூர் ஆகிய மூன்றும்தான். அ்தில் ஒன்றில்தான் சுரேஷ் கோபி களமிறக்கப்பட்டுள்ளார். 60 வயதாகும் சுரேஷ் கோபி, 90ஸ்களில் நிறைய ஹிட் கொடுத்து ரசிகர்களை பெருவாரியாக ஈர்த்தவர்.

மோடியே சொன்னார்

மோடியே சொன்னார்

சுரேஷ் கோபி இதுபற்றி கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடியே நேரடியாக என்னிடம் இந்த தேர்தலில் போட்டியிடுமாறு கேட்டுக் கொண்டார். எனவே, நானும் ஒப்புக் கொண்டேன் என்று கூறியுள்ளார். ராஜ்யசபா உறுப்பினராக கடந்த 2 வருடங்களாக பதவி வகிக்கும் சுரேஷ் கோபி 74 சதவீத வருகைப்பதிவு கொண்டவர். வெறும் 4 கேள்விகளைத்தான் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bharatiya Janata Party announced that they will field actor Suresh Gopi as their candidate from the Thrissur Lok Sabha constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X