திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சபரிமலை போராட்டம்.. தாக்கப்பட்டும் அஞ்சாத துணிச்சல் பெண் ஷாஜிலா.. ஏன் தெரியுமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    சபரிமலை போராட்டம் : ஊடகப் பெண் மீது தாக்குதல்- வீடியோ

    திருவனந்தபுரம்:சபரிமலை அய்யப்பன் கோயிலில் போலீஸார் பாதுகாப்புடன் இரண்டு பெண்கள் சாமி தரிசனத்திற்கு சென்றதை, கண்டித்து நடைபெற்ற போராட்டத்தை படம் பிடித்த பெண் ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் நடத்தப் பட்டது. தாக்குதலின் போதும் அவத் தொடர்ந்து படம் பிடித்த புகைப்படங்கள் வைரலாகி உள்ளன.

    சபரிமலை அய்யப்பன் கோயிலில் 2 நாட்களுக்கு முன்னர் 2 இள வயதுப் பெண்கள், சாமி தரிசனம் செய்தனர். அனைத்து வயதுப் பெண்களும் அய்யப்பன் கோயிலுக்குள் செல்லலாம்' என்று உச்ச நீதமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பரில் தீர்ப்பளித்த பின்னர், முதன்முறையாக கோயிலுக்குள் இரண்டு பெண்கள் சென்றனர்.

    அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வலதுசாரி அமைப்புகள், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் போராட்டக் காரர்கள், வன்முறையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஊடகப் பெண் ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல்... கேரளாவில் களேபரம்ஊடகப் பெண் ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல்... கேரளாவில் களேபரம்

    போராட்டம் நடத்திய பாஜக

    போராட்டம் நடத்திய பாஜக

    நேற்று பாஜக மற்றும் இந்து அமைப்புகள் திருவனந்தபுரத்தில் நடத்திய போராட்டத்தில், பல பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனர். அதில் ஒருவர்தான் தனியார் தொலைக்காட்சியைச் சேர்ந்த ஷாஜிலா அப்துல்ரஹ்மான். ஒளிப்பதிவாளர் ஷாஜிலா அப்துல்ரஹ்மான் அதனை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்.

    பெண் மீது தாக்குதல்

    பெண் மீது தாக்குதல்

    அப்போது போராட்டகாரர்கள் பெண் என்றும் பாராமல் அவரை பின்னால் இருந்து எட்டி உதைத்தனர்.அதுமட்டுமின்றி அவரை தகாத வார்த்தைகளால் கடுமையாக திட்டியுள்ளனர். ஆனால் அவற்றை சிறிதும் கண்டுகொள்ளாத ஷாஜிலா தொடர்ந்து போராட்டத்தை செய்தியாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

    கடமை தவறாத ஷாஜிலா

    கடமை தவறாத ஷாஜிலா

    அவர்கள் கும்பலாக சூழ்ந்து கொண்டு, ஷாஜிலாவை தாக்க தொடங்க, ஒரு கட்டத்தில் செய்வதறியாது அழத் தொடங்கியுள்ளார். அதே நேரத்தில் கடமையை தவறாத அவர், தாக்குதலுக்குள்ளான போதும்.. நடந்த சம்பவங்களை செய்திக்காக வீடியோ எடுத்துள்ளார்.

    புகைப்படம் வைரலானது

    புகைப்படம் வைரலானது

    பணியின் போது தாக்குதலை எதிர்கொண்டு, ஷாஜிலா அழுதுக் கொண்டே வீடியோ எடுத்திருப்பது புகைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. அந்தப் படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Shaajila Ali Fathima, camera person for Kerla TV channel was heckled and attacked by Sangh Parivar goons in Trivandrum. Shajila was shooting protests in her video camera. During this time, they were attacked, threatened, abused, but in the midst of such unfortunate situations, the camera was stuck.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X