திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பைனாப்பிளில் வெடி.. கருவுற்ற யானையை கொன்றது போல் மற்றொரு யானையும் கொலை?.. வனத்தில் நடப்பது என்ன?

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: பைனாப்பிளில் வெடி மருந்து வைத்து கருவுற்ற யானை கொல்லப்பட்டது போல் கடந்த ஏப்ரல் மாதம் வாயில் காயத்துடன் இறந்த பெண் யானையும் இதே போல் கொல்லப்பட்டிருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

கேரள மாநிலம் மணப்புரத்தில் கருவுற்ற யானை ஒன்று வனப்பகுதிக்கும் கிராமப் பகுதிக்கும் இடையே உணவுக்காக சுற்றி வந்தது. 20 நாட்களுக்கு முன்னர் பழங்களை சாப்பிட்ட அந்த யானை உணவில்லாமல் கிராமத்தை நோக்கி வந்தது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்த யானை அங்கிருந்து விரட்டுவதற்காக அன்னாசி பழத்தில் வெடிமருந்துகளை மறைத்துவைத்து சிலர் கொடுத்துள்ளனர்.

மதம் பிடிக்கவில்லை.. யாரையும் தாக்கவில்லை.. உயிர் வேதனையிலும் அமைதி காத்த யானை.. ஏன்? பின்னணி! மதம் பிடிக்கவில்லை.. யாரையும் தாக்கவில்லை.. உயிர் வேதனையிலும் அமைதி காத்த யானை.. ஏன்? பின்னணி!

வெள்ளியாறு

வெள்ளியாறு

பசி மயக்கத்தில் இந்த உணவை வாயில் போட்டதும் வெடி வெடித்து அதன் தாடை பகுதி கிழிந்தது. இதனால் பலத்த காயமும் தாங்க முடியாத வலியும் யானைக்கு ஏற்பட்டது. எனினும் பசியுடனும் வலியுடனும் அப்பகுதியில் சுற்றித் திரிந்த அந்த யானை வலியிலிருந்து சற்று விடுபட வெள்ளியாறு நதியில் போய் மூழ்கும் அளவு நின்று கொண்டது.

மற்றொரு யானை

மற்றொரு யானை

இந்த நிலையில் நிறைய தண்ணீரைக் குடித்ததால் நுரையீரலில் தண்ணீர் தேங்கி யானை 27ஆம் தேதி இறந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த யானையை போல் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு யானை இறந்துள்ளது. அதற்கும் இதே போல் வெடிவைத்த உணவு கொடுக்கப்பட்டிருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

யானை கூட்டம்

யானை கூட்டம்

இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத வனத்துறை அதிகாரி கூறுகையில் கொல்லம் மாவட்டம் புனலூர் பிரிவில் பத்தினாபுரம் வனச்சரகத்தில் ஏப்ரல் மாதம் யானை கூட்டத்தால் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு பெண் யானை வாயில் காயத்துடன் சுற்றியது. இதன் தாடை உடைந்து உணவு உட்கொள்ள முடியாத ஆபத்தான நிலையில் இருந்தது. இதை மீட்ட அதிகாரிகள் அதை காட்டுக்குள் அழைத்து சென்று யானை கூட்டத்துடன் விட்டுச் சென்றனர்.

பிரேத பரிசோதனை

பிரேத பரிசோதனை

ஆனால் அடுத்த நாளே அந்த யானை கூட்டம் அந்த யானையை மீண்டும் தனது கூட்டத்தில் சேர்க்காமல் வெளியேற்றியது. முறையான சிகிச்சை அளித்தும் அந்த யானை அதீத காயத்தால் உயிரிழந்து போனது. இதை பார்க்கும் போது கருவுற்ற யானைக்கு உணவில் வெடிமருந்து கொடுத்தது போல் இந்த யானைக்கு கொடுத்திருக்கலாம் என தெரிகிறது. அதன் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் மட்டுமே தெரியும்.

விலங்கு பிழைக்காது

விலங்கு பிழைக்காது

இது போன்ற வழக்குகளை விசாரிப்பது மிகவும் கடினம். யானைகள் ஒரு நாளைக்கு பல கிலோமீட்டர் தூரம் கூட்டம் கூட்டமாக செல்லும். அவ்வாறு செல்லும் போது எந்த இடத்தில் இது போன்ற ஆபத்தில் சிக்கியது என கண்டறிவது கடினம். உடல்நலம் பாதிக்கப்பட்ட விலங்குகளை அதன் சக விலங்கினங்கள் தங்களுடன் சேர்த்து கொள்ளாது. காயமடைந்த அந்த விலங்கு பிழைக்காது என்பது மற்ற விலங்குகளுக்கு நன்குத் தெரியும் என அதிகாரி தெரிவித்தார்.

Recommended Video

    Kerala Elephant: அன்னாச்சி பழத்தில் வெடி..தண்ணீரில் நின்ற படி உயிரை விட்ட கர்ப்பிணி யானை
    மாமிச வேட்டை

    மாமிச வேட்டை

    காட்டு பன்றி, காட்டு மாடு ஆகியவற்றை வேட்டையாடும் கும்பல் இது போல் உணவு பொருட்களில் வெடிமருந்துகளை மறைத்து வைத்து அவை வரும் பாதைகளில் வைத்து விடுகிறார்கள். இந்த உணவை உட்கொள்ளும் அவை தலை சிதறி உயிரிழந்தவுடன் அதன் மாமிசத்தை உட்கொள்ள கொண்டு செல்கிறார்கள் என விலங்குகள் நல ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

    English summary
    Top forest officer suspects that the small female elephant also dies of injuries in her mouth in the month of April.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X